ஆன்லைன் மூலம் நம் பிராஜெக்ட் தகவல்களை காட்சியளிப்பு (Presentation) செய்யலாம்.
ஜூன் 26, 2011 at 11:50 முப பின்னூட்டமொன்றை இடுக
பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி ஆசிரியர்கள் , தொழிலதிபர்கள் என அனைவருக்கும் தங்கள் பாடங்களையும் தங்களுடைய பிராஜெக்ட் பற்றிய தகவல்களையும் ஆன்லைன் மூலம் காட்சியளிப்பு (Presentation ) செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அரசியல் செய்திகள் , சினிமா , அரட்டை என்பதற்கு மத்தியில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமல்லாமல் நம் அறிவை பகிர்ந்து கொள்ளவும் நம் எண்ணங்களையும் காட்சியளிப்பு மூலம் புரிய வைப்பதற்கும் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://present.me
பவர் பாயிண்ட் காட்சியளிப்பு மூலம் தான் நாம் இதுவரை நம் பிராஜெக்ட் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வந்துள்ளோம் , ஆனால் இனி இத்தளம் மூலம் எளிதாக காட்சியளிப்பு செய்யலாம். இத்தளத்திற்கு சென்று Pricing என்ற மெனுவை சொடுக்கி Basic Account Free என்பதில் Sign up செய்யவும், 15 நிமிடத்திற்கு இலவசம். ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் காட்சியளிப்பு காட்டாமல் ஒரே நேரத்தில் அனைவருக்கும் காட்சியளிப்பு காட்டலாம். ஆடியோ , வீடியோ என அனைத்தும் சேர்ந்தது போல் காட்சியளிப்பு உருவாக்கலாம்.ஏற்கனவே நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பவர்பாயிண்ட் காட்சியளிப்பை கூட அப்லோட் செய்து பயன்படுத்தலாம். நாம் உருவாக்கிய காட்சியளிப்பை நம் வலைப்பூவிலும் காட்டலாம்.ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.
ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம்.
ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு இன்ஸ்டண்ட் லோகோ (Instant Logo) உருவாக்கலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை மறக்க முடியாத நட்பு என்றும் எப்போதும் முகம் தெரியாமலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டின் ’முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது ? 2.பெரியார் பல்கலைக்கழகம் உள்ள இடம் எது ? 3.பாரதியாரால் பாவலர் என்று பாரட்டப்பட்டவர் யார் ? 4.தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ்யம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது ? 5.தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ? 6.தமிழ்நாட்டில் சட்டமேலவை அமைக்கப்பட்ட ஆண்டு ? 7.”பொன்னியின் செல்வன் “ என்ற நாவலை எழுதியவர் யார் ? 8.காவேரி ஆற்றின் மொத்த நீளம் என்ன ? 9.பூண்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ள மாவட்டம் எது ? 10.1937 -ல் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்த இடம் எது ? பதில்கள் 1.தூத்துக்குடி, 2. சேலம்,3. பாரதிதாசன்,4.3, 5.1983, 6.1935,7.கல்கி,8. 760 கி.மீ , 9.திருவள்ளூர், 10.சேலம்.
இன்று ஜூன் 26பெயர் : பெர்ல் பக் , பிறந்த தேதி : ஜூன் 26, 1892 பெர்ல் பக் என்னும் பெண்மணி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் (நாவலாசிரியர்).இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் நம் பிராஜெக்ட் தகவல்களை காட்சியளிப்பு (Presentation) செய்யலாம்..
Subscribe to the comments via RSS Feed