பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.
மே 1, 2012 at 2:23 முப 5 பின்னூட்டங்கள்
புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.good-tutorials.com
CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும் திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தினம் ஒரு புத்தகம் அ.சிதம்பரநாதன் செட்டியார் அவர்கள் எழுதிய " உழைப்பால் உயர்ந்த ஒருவர் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வெற்றி என்பது நம் அருகில் தான் இருக்கிறது.
இன்று மே 1
உலகத் தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. இந்நாளில் அனைத்து உழைப்பாளர்களுக்கும் இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்கள்
Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் புரோகிராம், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புரோகிராமர் உதவி. Tags: ஜாவா, பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொட, பிளாஷ், போட்டோஷாப், மாயா, ஸ்டுடியோ மேக்ஸ்.
1.
salemdeva | 7:14 முப இல் மே 4, 2012
பயனுள்ள பதிவிற்கு நன்றி..!!
2.
Sridhar Srinivasan | 9:56 முப இல் மே 5, 2012
மிகவும் பயனுள்ள பதிவு! நன்றி!
3.
Sadaam | 3:09 பிப இல் மே 5, 2012
கணணி software கற்கும் மாணவர்களுக்கு சிறந்த ஓர் தளம்
பதிவுக்கு …மிக்க நன்றி….
4.
மணி (ஆயிரத்தில் ஒருவன்) | 10:45 முப இல் மே 7, 2012
பயனுள்ள பதிவு பகிர்விற்கு மிக்க நன்றி!
5.
raja | 1:40 பிப இல் மே 12, 2012
very nice