கணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.
நவம்பர் 1, 2015 at 3:45 பிப 1 மறுமொழி
கணினியில் வரும் வைரஸை நீக்குவதற்கு காசு கொடுத்து வாங்கும் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் வேலை செய்யாத நிலையில் உங்கள் கணினியில் இருக்கும் வைரஸ் கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் வின்மணி வைரஸ் ரீமுவர். முதல் பதிப்பிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் தான் இரண்டாம் பதிப்பை வெளியீட்டு இருக்கிறோம். முற்றிலும் இலவச மென்பொருள். விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 10 வரை அனைத்து விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் நம் மென்பொருள் வேலை செய்யும்.
வின்மணி வைரஸ் ரீமுவரின் சில முக்கிய அம்சங்கள் :
1. வைரஸ் வந்த பின் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் வேலை செய்யாது ஆனால் வைரஸ் வந்த பின் கூட உங்கள் கணினியில் நம் வைரஸ் ரீமுவர் வேலை செய்யும்.
2. இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.
3. வைரஸ் கோப்புகளை சரியாக கண்டறிந்து சோதனை செய்த பின் தாமாகவே வைரஸை முழுமையாக நீக்கும்.
4. 15 நிமிடத்திற்குள் எல்லா வைரஸ் கோப்புகளையும் நீக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5. கணினியின் வேகத்தை இரண்டு மடங்கு அதிகப்படுத்தும்.
இந்த மென்பொருளை தறவிரக்கம் செய்து Open செய்யும் போது வரும் திரையில் Y என்பதை கொடுத்து Enter Key அழுத்தினால் போதும். அதன் பின் தாமாகவே வைரசை கண்டறிந்து நீக்கும். விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இதை தறவிக்கி பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்.
வின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், பயனுள்ள தகவல்கள், வைரஸ் நீக்க.
1.
Warrant Balaw | 4:05 பிப இல் நவம்பர் 1, 2015
இரண்டு நாட்களுக்கு முன்புதான், சைபர் சிம்மிடம் இந்தப்பதிவு வேலை செய்யாததால், வேறு பதிவிடுங்கள் என சொன்னதற்கு, பரிசீலனை செய்வதாக சொல்லியிருந்தார். மீண்டும் புதுப்பித்து வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி!