நோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.
மே 2, 2012 at 1:03 முப பின்னூட்டமொன்றை இடுக
விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றால் பலருக்கும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி இருக்கும் ஆனால் நோபல் பரிசு நிறுவனம் வழங்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டு மூலம் கூட அறிவை வளர்க்கலாம் , மிகப்பெரிய நிறுவனமான நோபல் பரிசு நிறுவனம் நேரடியாக 30 -க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.nobelprize.org/educational/all_productions.html
நோபல் பரிசு என்ற இத்தளத்திற்கு சென்று பல வகையான அறிவை வளர்க்கும் விளையாட்டுகளில் ஒவ்வொன்றாக விளையாட ஆரம்பிக்கலாம் மன்னிகவும் அறிவை வளர்க்க ஆரம்பிக்கலாம், ஒவ்வொரு விளையாட்டுக்கு முன்னும் அந்த விளையாட்டு பற்றி விதிமுறைகளுடன் கூடுதலாக விபரங்களையும் அளிக்கின்றனர். உதாரணமாக எந்த ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் இருந்து அதிகப்படியான தகவல்களையும் புதுமையான பல விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே சிறப்பாக இருக்கிறது, விளையாட்டின் விதிமுறை தெரிந்து கொண்டு நாம் விளையாடும் விளையாட்டுகள் நம் அறிவை வளர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்த நோபல் பரிசு தளம் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.
உலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்.
இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.
தினம் ஒரு புத்தகம் புலவர் த. கோவேந்தன், அவர்கள் எழுதிய " அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை நல்லவர்களுக்குத்தான் சோதனை அதிகமாக வரும் ஒரு போதும் அதைக்கண்டு வருந்தி நிற்க வேண்டாம்.
இன்று மே 2
பெயர் : லியொனார்டோ டாவின்சி மறைந்த தேதி : மே 2, 1519 ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகள் பகுதி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விளையாட்டு. Tags: நோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்.
Subscribe to the comments via RSS Feed