வார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.
மே 4, 2012 at 2:50 பிப பின்னூட்டமொன்றை இடுக
நாம் தேடும் வார்த்தைகளுக்கு Graph வடிவில் ஒவ்வொரு வார்த்தையும் அது தொடர்புடைய பல கூடுதல் வார்த்தைகளை கோர்வையாக கொடுத்து நம்மை அசத்த ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆங்கில வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தில் இருந்து நாம் தேடும் வார்த்தைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் Graph வடிவில் தொடர்புடைய வார்த்தைகளை அழகாக காட்டும் இந்தத் தளத்தைப் பற்றி இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://graphwords.com
இத்தளத்திற்கு சென்று Draw thesaurus என்று இருக்கும் கட்டத்திற்குள் ஆங்கில சொற்களஞ்சியத்தில் இருந்து நாம் தேட விரும்பும் வார்த்தையை கொடுத்து Draw என்ற பொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக வரும் திரையில் நாம் தேடிய வார்த்தையை ண்டு உருவாக்கப்பெற்ற மேப் அழகாக காட்டப்படும் இதில் இருந்து ஒவ்வொரு வார்த்த்தையும் சொடுக்கி அதிலிருந்து மேற்கொண்டு செல்லலாம், ஒவ்வொரு வார்த்தைகளையும் எளிதாக தேடுவதோடு மட்டுமல்லாமல் அதில் இருந்து கூடுதல் விபரங்களையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம்
நம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால்.
தேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவி செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.
ஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.
தினம் ஒரு புத்தகம் பி.எஸ். ராமையா, அவர்கள் எழுதிய " திரிலோகாதிபத்திய ரகசியம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை கடவுள் உண்மையிலே கல்நெஞ்சக்காரன் தான் நல்லவர்களைத்தான் அதிகம் சோதிக்க்கிறான்.
இன்று மே 4
பெயர் : திப்பு சுல்தான், மறைந்த தேதி : மே 4, 1799 மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Entry filed under: அனைத்து பதிவுகளும், குழந்தைகள் பகுதி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: வார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்..
Subscribe to the comments via RSS Feed