உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம்
ஜூன் 21, 2011 at 12:39 பிப 2 பின்னூட்டங்கள்
சில நொடிகளில் நாம் கொடுக்கும் வார்த்த்தையை ஒரே நேரத்தில் 20 மொழிகளில் அழகாக மொழி பெயர்த்து கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும் , ஒரு முறை நாம் தட்டச்சு செய்ய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழிபெயர்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.translation-telephone.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் Translate ( மொழி மாற்றம் ) செய்ய வேண்டிய வார்த்தையை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நமக்கு காட்டப்படும். கூகிள் துணையுடன் இது வார்த்தைகளை மொழி பெயர்த்து நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு மொழியின் பெயரும் அந்த மொழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளும் நமக்கு காட்டப்படும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் URL இணையதள முகவரியை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மாற்றிய வார்த்தையை அவர்களும் தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி
கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்
அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி
ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை
வின்மணி சிந்தனை குறை கூறும் பழக்கத்தை கைவிட்டாலே மனம் அமைதியாகிவிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.புயலால் தனுஷ்கோடி பாதிக்கபப்ட்ட ஆண்டு ? 2.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த இடம் எது ? 3.செயற்கை இழை (ரேயான்) தயாரிக்கும் முக்கிய இடம் எது ? 4.குடும்ப விளக்கு என்னும் நூலை எழுதியவர் யார் ? 5.சுப்பிரமணிய பாரதி நடத்திய நாளேடு எது ? 6.கேரளாவையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் கணவாய் ? 7.சமத்துவபுரம் திட்டம் கொண்டுவந்த முதலமைச்சர் யார் ? 8.தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர் யார் ? 9.தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார் ? 10.தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது ? பதில்கள்: 1.1964, 2. இராமேஸ்வரம், 3.மேட்டுப்பாளையம், 4.பாரதிதாசன்,5.இந்தியா,6.பாலகாட் கணவாய், 7.கருணாநிதி, 8.முதலமைச்சர், 9.பத்மினி ஜேசுதுரை,10.தஞ்சாவூர்.
இன்று ஜூன் 21
பெயர் : சிரின் எபாடி , பிறந்த தேதி : ஜூன் 21, 1947 ஈரானிய மனித உரிமைகள் போராளியாவார். இவர் ஈரானில் குழந்தைகளின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பை நிறுவி செயற்பட்டார். 2003 ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியிருக்கிறது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம்.
1.
shareef | 5:07 பிப இல் ஜூன் 21, 2011
english to tamil translation
mattum poda mattreengale????????
thank u 4 sharing
2.
winmani | 10:10 பிப இல் ஜூன் 21, 2011
@ shareef
நம் தாய் மொழியான தமிழை மொழிபெயர்ப்பது எளிதான காரியம் இல்லை , அதிக முயற்சி வேண்டும்.
மிக்க நன்றி