கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.
செப்ரெம்பர் 2, 2012 at 6:37 முப 2 பின்னூட்டங்கள்
எதைத்தேடினாலும் கொடுக்கும் கூகிள் தேடுபொறி உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை அல்லது கூகிளில் சில பிழை செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம், இப்படி பிழைசெய்திகளையும் கூகிள் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரியப்படுத்தினால் பரிசு கொடுக்க ஒரு தளம் இருக்கிறது.
- Bug Google Contest
பெரிய புரோகிராம் எழுதிதான் பெரிய ஆளாக வேண்டும் என்பதில்லை கூகிளின் பிழையை அல்லது கூகிள் ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியே நாம் உலக அளவில் பிரபலமாகலாம் பரிசுகளையும் வெல்லலாம். இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.buggoogle.com/
இணையத்தில் உலாவரும் அனைவரும் இந்தப்போட்டியில் பங்கேற்கலாம், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், கிராமத்து புத்திசாலிகள் என யார் வேண்டுமானாலும் எந்த நாட்டில் இருந்தாலும் Bug Google போட்டியில் பங்கேற்கலாம். கூகிள் தேடுபொறி உங்களுக்கு பிடிக்கவில்லையா ? அல்லது பிழை செய்தி சொல்கிறதா ? ஏன் பிடிக்கவில்லை ? எதற்காக பிடிக்கவில்லை ? என்ற காரணத்தை விரிவாக எழுதி Bug Google -ற்கு இமெயில் மூலம் தெரியப்படுத்தி சிறந்த பல பரிசுகளை வெல்லுங்கள். இமெயில் முகவரி : contest@buggoogle.com இந்தப்போட்டிக்கு அக்டோபர் 12-ம் தேதி இரவு 12 மணி வரை வரும் பதில்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Bug என்ற வார்த்தையில் இருக்கும் B என்ற எழுத்தை பூனையாக மாற்றி பூச்சிகளை பார்க்கும்படி லோகோ வடிவமைத்துள்ளனர். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் உறவுகளிடமும் இந்தப்பதிவை பேஸ்புக் , டிவிட்டர் என எடுத்துச்செல்லுங்கள். பெரும்பாலான நம் தமிழர்கள் இந்தப்போட்டியில் பங்குபெற்று பல பரிசுகளை பெறவேண்டும் என்பதே நம் நோக்கம். யாருக்குத்தெரியும் நாளை நீங்கள் அனுப்பும் பின்னோட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த Bug Google ஹீரோ நீங்கள் தான்.
கூகிள் ஒரு ரகசிய உளவாளி – வின்மணி வழங்கும் சிறப்பு பதிவு.
கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பு பதிவு.
கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.
கூகிள் பிளஸ்-ல் இருந்து டிவிட் செய்ய உதவும் பயனுள்ள நீட்சி.
தினம் ஒரு புத்தகம்
நா. பார்த்தசாரதி,, அவர்கள் எழுதிய
“ வெற்றி முழக்கம் ” புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
அடுத்தவர் வெற்றிக்கு நாம் உதவினால் நம் வெற்றிக்கு
கடவுள் எல்லா வழிகளிலும் உதவுவார்.
Entry filed under: இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: google.
1.
திண்டுக்கல் தனபாலன் | 9:40 முப இல் செப்ரெம்பர் 2, 2012
Google யோசிக்க வைத்து விட்டது… பகிர்வுக்கு நன்றி…
2.
Dr.Durai. Manikandan | 9:08 பிப இல் செப்ரெம்பர் 9, 2012
நல்ல செய்தி. மாணவர்களிடம் எடுத்துக்கூறுகிறேன் சார். நன்றி
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.