அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.
ஏப்ரல் 23, 2012 at 11:40 முப பின்னூட்டமொன்றை இடுக
செல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.cutestpaw.com
CUTE ANIMALS FOR YOU என்ற இத்தளத்திற்கு சென்று நாம் அழகான பல உயிரினங்களின் தத்ரூபமான புகைப்படங்களை ரசிக்கலாம். இதுவரை எந்த தளங்களிலும் நாம் பார்த்திருக்காதபடி விலங்கினங்களின் அழகான புகைப்படங்கள் பல இத்தளத்தில் இடம் பிடித்துள்ளது, இடது பக்கம் இருக்கும் Categories என்பதில் எந்த உயிரினத்தைப்பற்றிய புகைப்படம் வேண்டுமோ அதை சொடுக்கி குறிப்பிட்டஉயிரினத்தின் புகைப்படத்தை பார்க்கலாம், நம்மிடம் இருக்கும் நம் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தையும் கூட பதிவேற்றலாம். நாம் பார்க்கும் புகைப்படத்தை நம் கணினியில் சேமித்து வைக்கலாம், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க்-களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் அழகான உயிரினங்களை பார்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளை வீடியோவுடன் காட்டும் அசத்தலான தளம்.
நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.
புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்.
தினம் ஒரு புத்தகம் முனுசாமி அவர்கள் எழுதிய " திருக்குறள் அதிகார விளக்கம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை மகிழ்ச்சியையும் அன்பையும் நம் விரோதிகளுக்கு பரிசாக அளிப்போம்.
இன்று ஏப்ரல் 23
பெயர் : வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்த தேதி : ஏப்ரல் 23, 1916 ஒரு ஆங்கிலக்கவிஞரும் நாடக ஆசிரியருமாவார், ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் "பார்ட் ஆஃப் அவான்" (அல்லது வெறுமனே "தி பார்ட்") இவர் அழைக்கப்படுகிறார்.வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள்,154 செய்யுள் வரிசைகள் இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் உள்ளன.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், பயனுள்ள தகவல்கள். Tags: அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத.
Subscribe to the comments via RSS Feed