உலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.
மே 3, 2012 at 7:42 பிப 2 பின்னூட்டங்கள்
புதிதாக இணையதளம் அல்லது வலைப்பூ உருவாக்கியாச்சு அடுத்து நம் தளத்தை தற்போது எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதைப்பற்றிய அனைத்து தகவல்களை எண்ணிக்கையாகவோ அல்லது மேப் வடிவிலோ எளிதாக காட்டலாம் நமக்கு உதவ ஒரு Script ( ஸ்கிரிப்ட்) உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நம் இணையதளத்தை தற்போது உலக அளவில் எங்கெல்லாம் எத்தனை பேர் பார்வையிடுகின்றனர் என்பதைப்பற்றிய தகவல்களை நம் தளத்தில் காட்ட வேண்டும் என்றால் எந்தவிதமான புரோகிராம் அறிவும் இல்லாமல் எளிதாக இத்தளத்தில் கிடைக்கும் கோடிங்-ஐ அப்படியே காப்பி செய்து நம் தளத்தில் சேர்த்தால் போதும் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://whos.amung.us/showcase
இத்தளத்திற்கு சென்று Our Widgets and Browser Extensions என்ற மெனுவில் இருக்கும் பலவகையான Widget – களில் இருந்து நமக்கு தேவையான Widget தேர்ந்தெடுக்கலாம் ஒவ்வொரு Widget ஐயும் சொடுக்கி அதன் Preview உடன் பார்க்கலாம், இதில் எந்த மேப் அல்லது எண்ணிக்கையிலான வடிவமைப்பு நமக்கு பிடித்திருக்கிறதோ அதில் கோடிங் ஸ்கிரிப்ட் மேல் வைத்து சொடுக்கினால் போதும் காப்பியாகிவிடும், பின் நம் தளத்தில் எங்கு அதை சேர்க்க வேண்டுமோ அங்கு சென்று Paste என்பதை சொடுக்கி சேர்க்கலாம், கோடிங் காப்பி செய்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் Color என்பதில் நமக்கு எந்த கலர் சரியாக இருக்கும் என்பதை பார்த்து தேர்ந்தெடுத்து பின் கோடிங்- ஐ காப்பி செய்து பேஸ்ட் செய்யவும், பலபேர் எங்கள் தளத்திலும் இதுபோல் எத்தனைபேர் பார்க்கின்றனர் என்ற அட்டையை ஒட்ட வேண்டும் என்று கேட்டிருந்தனர் அவர்களுக்க்கும் இந்த சிறப்புப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் 12 நாட்களில் உருவாக்கும் டையேஸ்போரா
உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் மிகவும் பயனுள்ள இணையதளம்
நம் கணினிக்கு அற்புதமான கண்ணை கவரும் அழகான வால்பேப்பர் (Wallpaper Background).
கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.
தினம் ஒரு புத்தகம் சுஜாதா, அவர்கள் எழுதிய " பாதரசம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை அழகான நண்பர்கள் வாழ்க்கையில் கிடைப்பது பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம்.
இன்று மே 3
பெயர் : சுஜாதா , பிறந்த தேதி : மே 3, 1935 தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன்.தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், புரோகிராமர் உதவி. Tags: உலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எ.
1.
தனபாலன் | 8:29 பிப இல் மே 11, 2012
“பயனுள்ள பதிவு ! நன்றி !”
2.
Peraveen | 7:44 முப இல் மே 22, 2012
We miss u sujatha sir…