நம் கணினிக்கு அற்புதமான கண்ணை கவரும் அழகான வால்பேப்பர் (Wallpaper Background).
ஜனவரி 15, 2012 at 5:59 முப 2 பின்னூட்டங்கள்
கணினியில் திரையை அழகுபடுத்தி கொள்வதில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் இதற்காக நாம் சிறந்த வால்பேப்பர் படங்களை தேடி பல தளங்களுக்கு செல்வோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளம் அழகான அற்புதமான பல பேக்ரவுண்ட்களை நமக்கு அள்ளி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

வால்பேப்பர்
பல தளங்களில் வால்பேப்பர் தரவிரக்க சென்றால் அதிகப்படியான விளம்பரங்களும் அதையும் தாண்டி தங்கள் தளத்தின் பெயரையும்
சேர்த்தே வால்பேப்பர் கொடுக்கின்றனர் ஆனால் எந்த விளம்பரமும் இல்லாமல் அழகான வால்பேப்பரை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.kuvva.com
இத்தளத்திற்கு சென்று நாம் Signup என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயர் மற்றும் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக ஒரு
பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளவும் அதன் பின் நாம் பார்க்கும் அழகான வால்பேப்பர் அனைத்தையும் நம் கணினியில் தரவிரக்கி வைத்துக்கொள்ளலாம்.Download Size என்பதில் நம் கணினியின் திரையின் அளவை தேர்ந்தெடுத்து தறவிரக்கலாம். சிறந்த வால்பேப்பர் மட்டும் கொடுக்கும் தளங்களில் இத்தளம் அதிகமான மக்களை ஈர்த்ததுள்ளது, கணினிக்கு அழகான வால்பேப்பர் விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்தை தெரிவித்து கொள்கிறோம். இன்று முதல் நம் வின்மணியில் தினம் ஒரு இபுத்தகம் வழங்க இருக்கிறோம், அரிய பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கும் ஓபன்ரீடிங்ரூம் நிறுவனர் நண்பர் ரமேஷ் அவர்களிடம் புத்தகம் பற்றி கேட்ட போது அவர் புத்தகம் மட்டுமலாது அவர் அன்பையும் சேர்த்து வழங்கினார், நம் வின்மணியில் புத்தகங்களை பகிர்ந்து கொள்வதற்கான அனுமதி வழங்கியுள்ள நண்பருக்கு நம் அனைத்து தமிழ் உறவுகளின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.
நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர்
நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்.
குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.
தினம் ஒரு புத்தகம் தமிழ் மறைக்காவலர் வீ.முனிசாமி அவர்கள் எழுதிய ”வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை ” புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை இயற்கைக்கும் , உழவர்களுக்கும் பொங்கல் தினம் மட்டுமின்றி எல்லா நாளும் மனம் நிறைந்த நன்றியுடன் இருக்க வேண்டும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to qualify தகுதி பெறு,தராதரம் பெறு to quantify திட்டமிடு, நிர்ணயி to quarrel கலகம் , சண்டையிடு to quell அடக்கு to Queryling விசாரித்தல் , கேள்வி கேட்டல் to question கேள் , உற்றுக்கேள் to quote மேற்கோள் எடு ,வேரோடு பிடுங்கு to quotes எடுத்துக்கூறு to qurrel சச்சரவு செய் quag சேறு
இன்று ஜனவரி 15
பெயர் : தேவநேயப் பாவாணர், மறைந்த தேதி : ஜனவரி 15, 1981 மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுனரும் ஆவார்.40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.இவரை கவுரவப்படுத்த இந்தியா தேவநேயப் பாவாணரின் படத்துடன் அஞ்சல்தலை வெளீயிட்டுள்ளது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் கணினிக்கு அற்புதமான கண்ணை கவரும் அழகான வால்பேப்பர் (Wallpaper Background)..
1.
SURESHBABU | 6:27 பிப இல் ஜனவரி 18, 2012
தினம் ஒரு புத்தகம் வழங்கும் உங்களது சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
2.
ஜெய் சங்கர் | 9:32 பிப இல் ஜனவரி 19, 2012
நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்ல வார்த்தை இருப்பின் அவை அனைத்தும் உம்மையே சாரும் நண்பரே…..
உமது முயற்சி என்றென்றும் தொடர எனது நல்வாழ்த்துக்கள்..
இவண்,
ஜெய்சங்கர்