வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.

ஏப்ரல் 21, 2012 at 8:04 பிப 2 பின்னூட்டங்கள்

தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இணையதள முகவரி : https://www.kareer.me

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Start Your FREE Resume Now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் தகவல்களை முழுமையாக கொடுக்க வேண்டும், இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த பின்னர் நம் பயோடேட்டாவே புதுமையாகவும் அழகாகவும் வடிவமைத்து நாம் எதில் திறமைசாலிகள் என்பதை பயோடேட்டா வெளிப்படையாக காட்டுகிறது. இத்துடன் நாம் நம்மைப்பற்றிய ஒரு அறிமுகத்தையும் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை வெப்காமிரா உதவியுடன் பதிவு செய்தும் அனுப்பலாம். நம் பயோடேட்டாவை பார்ப்பவர்கள் நம் வீடியோவையும் பார்ப்பதுடன் அவர்கள் நம் பயோடேட்டாவைப்பற்றி என்ன கருத்து சொல்கின்றனர் என்பதை பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது அத்துடன் நாம் உருவாக்கிய பயோடேட்டாவை எளிதில் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதுமை விரும்பிகளும் வேலையில்லாத நம் நண்பர்களும் இது போல் ஒரு அழகான பயோடேட்டா உருவாக்கி எளிதில் பெரிய வேலையை பெறலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

CVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்.

மேலதிகாரிகளை ஈர்க்கும்படி பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

இலவசமாக ஏஜெண்ட் மூலம் சரியான வேலையைத் தேடலாம்.

 

தினம் ஒரு புத்தகம்
நாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய
" குருகுலப் போராட்டம் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
சரியான துறையில் கிடைக்கும் தகுந்த வேலைக்காக
பல காலம் காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை.
 
இன்று ஏப்ரல் 21

பெயர் : பாரதிதாசன் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 21, 1964
பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் 
புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் 
சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் 
சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் 
பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர்
என்றும் பாவேந்தர்  என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ்
நடத்தி வந்தார்.

 

 

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், வேலைவாய்ப்பு. Tags: .

குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில். யூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Seenivasan.K  |  6:57 முப இல் ஏப்ரல் 28, 2012

    Dear Brother
    I have tried kareer.me website.
    That is useful for US and UK citizens.
    I cannot add our INDIAN pin codes, State on that.
    Thanks

    மறுமொழி
    • 2. winmani  |  1:47 பிப இல் ஏப்ரல் 28, 2012

      @ Seenivasan.K
      ஆம் , வெகு விரைவில் இந்த சேவை இந்தியாவுக்கும் வரும்,மிக்க நன்றி !

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...