Archive for ஏப்ரல், 2012
அழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.
செல்லப்பிராணிகள் மற்றும் விலங்கினங்களின் அழகான தருனங்களை புகைப்படத்தில் கொடுத்து பல வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரு தளத்தைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
அணில் முதல் வவ்வால் வரை , குரங்கு முதல் யானை வரை, தவளை முதல் முதலை வரை என் அனைத்து உயிரினங்களின் அழாகன படங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கும் இத்தளத்தைப் பற்றி இனி பார்க்கலாம்…
Continue Reading ஏப்ரல் 23, 2012 at 11:40 முப பின்னூட்டமொன்றை இடுக
யூடியுப் வீடியோக்களை ரிங்டோன் – ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.
ஆன்லைன் மூலம் ரிங்டோன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்த போதும் சில நேரங்களில் யூடியுப் வீடியோக்களில் உள்ள குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் வெட்டி ரிங்டோன் ( Ringtone) ஆக உருவாக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம் 1
எந்தவிதமான மென்பொருள் துணையும் இன்றி ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் எளிதாக யூடியுப் வீடியோவில் இருந்து ரிங்டோன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இனி இதைப்பற்றி பார்க்கலாம்…
Continue Reading ஏப்ரல் 22, 2012 at 11:47 முப பின்னூட்டமொன்றை இடுக
வீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.
தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் பல புதுமையான சிந்தனைகளையும் தினமும்வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று வீடியோவுடன் பயோடேட்டா உருவாக்க ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்ற சொல் சரியாக இப்போது தான் பொருந்தி வருகிறது.பயோடேட்டா உருவாக்குவதில் பல வித்தியாசமான புதுமையான ஐடியாக்களை நாளும் பல இணையதளங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இதுவரை யாரும் யோசிக்காத வண்ணம் புதுமையான முறையில் வீடியோவுடன் நம் பயோடேட்டா உருவாக்கலாம் என்பதை ஒரு தளம் அறிமுகப்படுத்தியுள்ளது இனி இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்…
Continue Reading ஏப்ரல் 21, 2012 at 8:04 பிப 2 பின்னூட்டங்கள்
குழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.
விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 20, 2012 at 8:50 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆண்ட்ராய்டு மொபைல் போனை குறிவைத்து தாக்க வருகிறது மால்வேர் – எச்சரிக்கை ரிப்போர்ட்.
உலக அளவில் அனைத்து மக்களிடமும் வேகமாக தனக்கென்று ஒரு இடம் பிடித்துக்கொண்டு முன்னேறி வரும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் துணை புரியும் மொபைல் போன்கள்களை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மால்வேர் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இதில் இருந்து எப்படி நம் ஆண்ட்ராய்டு மொபைல் போன் -ஐ பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய சிறப்பு பதிவு.
படம் 1
ஆண்டிராய்டு போனில் வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட அப்ளிகேசனை நிறுவிய சில நிமிடங்களிலே ஆண்ட்ராய்டு போனை செயல் இழக்க செய்யும் அளவிற்கு வெளிவந்திருக்கும் இந்த மால்வேர் எப்படிபட்டது இதிலிருந்து நம் மொபைல் போன்-ஐ பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்…
Continue Reading ஏப்ரல் 19, 2012 at 4:45 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஆடைகள் வடிவமைக்க அசத்தலான ஐடியாக்களை கொடுக்கும் பயனுள்ள தளம்.
மானத்தை மறைக்கத்தான் ஆடை என்று இருந்தது ஒரு காலத்தில் ஆனால் தற்போது ஆடை வடிவமைப்பில் நாளும் பல்வேறு கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது அத்தனையும் மக்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது அந்த வகையில் இன்று
நாம் பார்க்க இருக்கும் தளத்தில் ஆடைகள் உருவாக்க பலவிதமான புதுமையான ஐடியாக்களை அள்ளி கொடுக்கிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் முதல் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் , குழந்தைகள் என அனைவரும் தங்களுடைய உடல் வடிவமைப்புக்கு தகுந்தாற் போல் எப்படி எல்லாம் ஆடை வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்வதற்காக இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது…
Continue Reading ஏப்ரல் 18, 2012 at 9:53 முப பின்னூட்டமொன்றை இடுக
குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.
ஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்…
Continue Reading ஏப்ரல் 17, 2012 at 12:07 பிப 3 பின்னூட்டங்கள்
அழகான பொத்தான் (Button) எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
நம் இணையதளத்திற்கு என்று நம் விருப்பப்படி ஒரு பொத்தான் (Button) உருவாக்க வேண்டும் என்பவர்கள் இதற்காக புதிதாக எந்த மென்பொருளையும் தேடிச்சென்று படிக்க வேண்டாம் சில நிமிடங்கள் அழகான பொத்தான் உருவாக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[படம் 1]
படம் 1
இணையதளத்திற்கு Button என்ற ஒன்று மிக முக்கியமான ஒன்று அனைவரையும் கவர்ந்து இழுக்கவும், சொல்ல வேண்டிய செய்திகளின் தலைப்பை கொண்டும் நாம் எளிதாக பொத்தான் உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 16, 2012 at 11:30 முப பின்னூட்டமொன்றை இடுக
தட்டச்சு செய்யும் வார்த்தைகளை ஒலி கோப்பாக வாசிக்கும் பயனுள்ள தளம்.
தட்டச்சு செய்த வார்த்தைகளை படிக்க நாளும் ஒரு இலவச மென்பொருளும் பல இணைய தளங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளம் நாம் தட்டச்சு செய்த வார்த்தையை அழகான தரமான ஆடியோவாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
நம் பெயரை அல்லது நம் நிறுவனத்தின் பெயரை வெளிநாட்டினர் படித்தால் எப்படி இருக்கும் கூடவே நாம் பேசும்விதமும் அவர்கள் வார்த்தையை உச்சரிக்கும் விதமும் சற்றுவித்தியாசமாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளை ஆண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் பெண் குரலில் படித்தால் எப்படி இருக்கும் என்றும் அழகாக படித்துக் காட்டுகிறது…