தேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்.
பிப்ரவரி 19, 2011 at 5:47 பிப 3 பின்னூட்டங்கள்
தேடுபொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகிள்
மட்டும் தான் ஆனாலும் பல தேடுபொறிகள் கூகிளிடம் இல்லாத
தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது, இதற்காக நாம் ஒவ்வொறு
தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து கொண்டு
நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது இண்ஸ்டன்ட் ஆக
தேடி ஒரே தளத்தில் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே
உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகிள்,யாகூ,ஆஸ்க்,
விக்கிப்பிடியா,அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப்,அமேசான் போன்ற
அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு
உதவி செய்கிறது.
இணையதள முகவரி : http://www.soovle.com
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான
வார்த்தையை கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடுபொறியிலும்
எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைகான
Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம்
எந்ததளத்தில் தேடவேண்டுமோ அந்த தளத்தை சொடுக்கி
நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம், தேடுவதற்கு நேரம்
இல்லை என்று சொல்லும் அனைவருக்கும் இந்தததளம்
தேடும் நேரத்தை மிச்சப்படுத்திக்கொடுக்கும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.
வின்மணி சிந்தனை பொருளைத் தேடி தேடி எங்கும் அலையும் நாம் வாழ்வின் அந்திம காலத்தில் தான் புண்ணியம் செய்ய நினைக்கிறோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியா பின்பற்றும் ஆட்சி முறை ? 2.முதல் இருப்பு பாதை 1853 ஆம் ஆண்டு எதற்கிடையில் நிறுவப்பட்டது ? 3.டேனியர்கள் வணிகத்தலம் அமைத்த இடம் எது ? 4.யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது ? 5.குயில் இதழின் ஆசிரியர் யார் ? 6.இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது ? 7.ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றழைக்கப்படுவது ? 8.இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ? 9.மாநில ஆளுநர் எத்தனை வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் ? 10.x^2 + 10x + 21 =0 என்ற சமன்பாட்டின் தீர்வு கணம் ? பதில்கள்: 1.பாராளுமன்ற மக்களாட்சி முறை,2.பம்பாய் மற்றும் தானே, 3. தரங்கம்பாடி,4.ஆங்கில அரசு,5.பாரதிதாசன்,6.மும்பை, 7.இந்திய தேசிய இராணுவம்,8.1950, 9.35, 10.{ -7,-3} .
இன்று பிப்ரவரி 19பெயர் : உ.வே.சாமிநாதையர், பிறந்த தேதி : பிப்ரவரி 19, 1855 பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தேடுபொறியில் தேடும் வார்த்தைக்கு உதவிய செய்ய 7 பிரம்மாண்டங்கள் இணைந்த ஒர.
1.
www.sureshbabuvinitulaa.blogspot.com | 6:17 பிப இல் மார்ச் 4, 2011
பயனுள்ள தகவல்.
2.
winmani | 6:25 பிப இல் மார்ச் 4, 2011
@ sureshbabuvinitulaa
மிக்க நன்றி
3.
LVISS | 9:12 முப இல் மார்ச் 5, 2011
Amazing Thanks for the post . But a small monitor may not hold all the answers within it, I tried the word ‘white’ and found the results clogging my 18″ screen