நம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால்.
மே 5, 2011 at 2:01 முப 3 பின்னூட்டங்கள்
தினமும் ஆங்கில டிக்ஸ்னரி-ஐ கையில் வைத்துக்கொண்டு ஆங்கில
வார்த்தை படிப்பதைவிட விளையாட்டான சவால் மூலம் நாம்
எளிதாக பல ஆங்கில வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஒரு ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் தெரிவித்து
அதைப்பற்றிய சிறு குறிப்பையும் கொடுத்து அது பெயர்ச்சொல்லா
அல்லது வினைச்சொல்லா என்பதையும் தெரிவித்து அது எந்த
வார்த்தை என்பதை கண்டுபிடிக்க வேண்டும் இப்படி நமக்கு
ஆங்கில சொற்களின் அறிவை வளர்க்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://knoword.org
இத்தளத்திற்கு சென்று Click here to Start என்பதை சொடுக்கி சவாலுக்கு
தயாராகலாம். முதல் எழுத்தை வைத்து வார்த்தை கண்டுபிடிக்க
வேண்டும் ஆனால் இதற்கான கால அளவு 1 நிமிடம் தான் அதற்குள்
கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்திற்கு சரியான வார்த்தையை தட்டச்சு
செய்தால் போதும். நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தை சரியாக
இருக்கும் பட்சத்தில் நமக்கு Score என்பதில் நமக்கு மதிப்பெண்
கிடைக்கும். நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக்
கொண்டு நம் மதிப்பெண்ணை சேமித்தும் வைக்கலாம். ஒரு வார்த்தை
கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாம் Skip என்ற பொத்தானை சொடுக்கி
அடுத்த வார்த்தைக்கான முதல் எழுத்தை பார்க்கலாம். பொழுதுபோக்கு
நேரத்தில் இது போன்ற பயனுள்ள விளையாட்டின் மூலம் நம்
ஆங்கில சொற்களஞ்சியத்தின் அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
ஆங்கில vocabulary -ஐ வேடிக்கையாக சொல்லும் வித்தியாசமான தளம்.
ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.
ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
ஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.
வின்மணி சிந்தனை விளையாட்டாக நாம் கற்றும் கொள்ளும் எதையும் சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பூமிக்கு எத்தனை கிலோமீட்டர் உயரம் வரை ஓசோன் உள்ளது? 2.மும்பை நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 3.சுதேசமித்திரன் பத்திரிகை வெளியான ஆண்டு ? 4.உலகின் முதல் நாவல் எந்த மொழியில் எழுதப்பட்டது ? 5.முதன் முதலாக பைபிள் எந்த ஆண்டு அச்சடிக்கப்பட்டது ? 6.இங்கிலாந்தில் பெருமளவு விறப்பது எந்த வகை புத்தகங்கள் ? 7.பத்திரிகையில் விளம்பரம் செய்யும் வழக்கம் எந்த ஆண்டு முதல் தொடங்கியது ? 8.பகவத் கீதை சுமார் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது ? 9.இந்தி மொழி எத்தனை சதவீத மக்களால் பேசப்படுகிறது ? 10.மலையாள மொழியின் கிளை மொழி எது ? பதில்கள்: 1.24 கி.மீ, 2.1830, 3.1929,4.இத்தாலி,5.கி.பி.1475, 6.ஜோதிடப் புத்தகங்கள்,7. 1647, 8. 55 மொழிகளில், 9.43%,10.துளு.
இன்று மே 5
பெயர் : முதலாம் நெப்போலியன், மறைந்த தேதி : மே 5, 1821 பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவர். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர், பிரெஞ்சுப் பேரரசர், இத்தாலியின் மன்னர், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின் காப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளான். PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால்..
1.
Ilakkuvanar Thiruvalluvan | 7:13 முப இல் மே 7, 2011
துளு தமிழ்மொழியின் சேய்மொழி. தமிழில் இருந்து பிரிந்த கன்னட மொழிக்கும் துளு மொழிக்கும் ஒற்றுமை உள்ளது. கன்னடத்தின் கிளை மொழி துளு என்று சொன்னாலும் இரண்டிற்கும் மூல மொழி தமிழே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
2.
winmani | 3:07 பிப இல் மே 7, 2011
@ Ilakkuvanar Thiruvalluvan
மிக்க நன்றி ஐயா , தங்களின் பின்னோட்டத்தின் மூலம் அறிய தகவல் ஒன்றை தெரிந்து கொண்டோம்.
3.
Elamurugan | 5:35 முப இல் மே 8, 2011
இன்டர்நெட் பிரச்சினையால் உங்கள் தளம் தொடர்ந்து படிக்க முடியாத வருத்தம்.மிக பயனுள்ள தகவல் .மிக்க நன்றி
இளமுருகன்
நைஜீரியா.