தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) – ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.
ஜூன் 27, 2011 at 2:01 பிப 2 பின்னூட்டங்கள்
தொலைக்காட்சியில் சில சமயங்களில் நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் நம் மனதை புண்படுத்தும்படியோ அல்லது மத உணர்வுகளை தூண்டும்படியோ இருக்கலாம் இப்படி ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பற்றிய புகார்களை நேரடியாக Indian Broadcasting Foundation மூலம் பதிவு செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
இந்தியாவில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகள் முதல் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்சிகள் வரை உங்களுக்கு பிடிக்காத நிகழ்சிகளை காரணத்துடன் நேரடியாக அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் புகார்களை பதிவு செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://ibfindia.com/guidelines.php
Indian Broadcasting Foundation என்ற அமைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நம் மனதை புண்படுத்திய நிகழ்சிகளை அதற்கான காரணத்துடன் பதிவு செய்யலாம். இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் இருக்கும் Download the Complaint Form என்பதை சொடுக்கி பிடிஎப் வடிவில் படிவத்தை தறவிரக்கலாம் அல்லது நேரடியாக ஆன்லைன் மூலமும் புகார்களை அனுப்பலாம் , நேரடியாக புகார்களை அனுப்ப http://ibfindia.com/onlineform.php என்ற இணைய பக்கத்தை சொடுக்கி நம் புகார்களை அனுப்பலாம். சில தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஆபாசம் அல்லது தமிழ்மக்களை , கலாச்சாரத்தை , இழிவுபடுத்தி வரும் நிகழ்சிகளை பற்றிய உங்கள் புகார்களையும் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தொலைக்காட்சி நிகழ்சிகளைப் பற்றிய புகார்களை பதிவு செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
சென்னையில் குடிநீர் வரவில்லையா ஆன்லைன்-ல் புகார் செய்யலாம்.
நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
ஆன்லைன் மூலம் உலகத்தின் 1402 டிவி சேனல்களையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கலாம்
நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி
வின்மணி இன்றைய சிந்தனை நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த செயலுக்கும் நாம் துணை புரியக்கூடாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய காரணமானவர் ? 2.திற்பரப்பு அருவி உள்ள இடம் எது ? 3.எண்ணூர் துறைமுகம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 4.முதல் தபால் நிலையம் அமைக்கப்பட்ட இடம் எது ? 5.ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தொடர்புடைய ஆறு எது ? 6.மலையும் மலை சார்ந்த இடமும் கொண்டது ? 7.திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ள இடம் எது ? 8.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி நாள் ? 9.தமிழ்நாட்டின் சராசரி வெப்ப நிலை என்ன ? 10.தனித்தமிழ் இயக்கத் தந்தை யார் ? பதில்கள் 1.நேசமணி, 2.கன்னியாகுமரி,3.2001, 4.சென்னை, 5.காவேரி, 6.குறிஞ்சி, 7.வேலூர்,8.ஜூலை 15, 9.21 டிகிரி C, 10.மறைமலை அடிகள்.
இன்று ஜூன் 27
பெயர் : அகிலன் , பிறந்த தேதி : ஜூன் 27, 1922 புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தொலைக்காட்சி நிகழ்சி பற்றிய புகார் ( Complaints) - ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செ.
1.
Life Direction Network | 9:45 பிப இல் ஜூன் 27, 2011
யாரும் எதிலும் எல்லை மீறி போகாமல் இருந்தால், நம் நாட்டை, நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாத்து, நம்
அடுத்த தலைமுறையினருக்கும் நல்ல பண்புகளை நாம் கற்றுக்கொடுக்க முடியும்.
இது போன்ற அமைப்புகள் ஒவ்வொரு துறையிலும்
தொடர்ந்து செயல்பட்டால் எதையும் அதன் எல்லையை மீறாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள
முடியும்.
மிகப்பெரிய சினிமா இயக்குனர்கள் சினிமாவில்
யோசிப்பதை நிஜத்தில் செயல்படுத்தியுள்ளதைப்
போல தோன்றுகிறது, நல்ல முயற்சி, நல்ல பதிவு நன்றி.
2.
winmani | 12:32 முப இல் ஜூன் 28, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி