Archive for ஜூன் 22, 2011
தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் – முதலமைச்சர் பார்வைக்கு…
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.
படம் 1
வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்…
Continue Reading ஜூன் 22, 2011 at 3:32 முப 37 பின்னூட்டங்கள்