ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம்.

பிப்ரவரி 10, 2011 at 7:50 பிப 7 பின்னூட்டங்கள்

கணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம்
இருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும்,
நாம் பயன்படுத்தும் அத்தனை கணினிகளில் இருக்குமா ? இப்படி
நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது,
ஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும்
புரோகிராம் எழுதிப்பழகலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கணினி புரோகிராம் துறையில் இப்ப தான் நுழைகிறேன், எனக்கு
புரோகிராம் எப்படி Run செய்து பார்க்க வேண்டும் என்று கூட தெரியாது,
சொந்தமாக என்னிடம் கணினி கிடையாது இப்படி பல கேள்விகளுக்கு
தீர்வாக வந்துள்ள இத்தளம் மூலம் C புரோகிராம் முதல் Php புரோகிராம்
வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் இயக்கிப்பார்க்கலாம்.

இணையதள முகவரி : http://ideone.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த மொழியில் புரோகிராம் எழுத
வேண்டுமோ அந்த மொழியை வலதுபக்கம் இருக்கும் Choose Language
என்பதில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நம் புரோகிராமை எழுதிவிட்டு
Run code என்ற ஆப்சனையும் தேர்ந்தெடுத்துவிட்டு Submit என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் அடுத்து வரும் திரையில்
நாம் எழுதிய புரோகிராம்-க்கான Output கிடைக்கும்.கணினித்துறையில்
புரோகிராம் எழுத நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும். கணினியில் ஆன்லைன் மூலம்
புரோகிராம் எழுதுவது பற்றிய நம் முந்தைய பதிவைப் பார்க்க இங்கு
சொடுக்கவும்.

C , C++ , PHP புரோகிராம் – களை இனி ஆன்லைன் மூலம் இயக்கலாம்.

வின்மணி சிந்தனை
அன்பை மற்றவர்களிடம் காட்டுங்கள் மனதிற்கு நோய்
வராமல் இருக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’ஸ்லம் டாக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக இரண்டு
 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர் ?
2.2009ம் ஆண்டு சமூகப்பணிக்காக பத்மபூஷன் விருது
  பெற்றவர் யார் ? 
3.2002 முதல் 2007 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக
  இருந்தவர் யார் ? 
4.மகாத்மா காந்து ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறைப்
  படுத்தப்பட்ட ஆண்டு ? 
5.இந்தியாவின் முதல் முழு கல்வியறிவு பெற்ற மாவட்டம் ?
6.அமெரிக்க விண்கலம் கொலம்பியாவில் பயணம் செய்த
  முதல் இந்தியப்பெண் யார் ? 
7.தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறைத் தலைவர் ?
8.வாணிபத்தில் உலகில் ஐந்தாவது இடத்தைப்பெற்றுள்ள
  இந்தியப்பெண் யார் ? 
9.20- வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு
  நடைபெற்ற இடம் ? 
10.ஐ.நா.வின் கொடியில் எம்மரத்தின் கிளைகள் இடம்
  பெற்றுள்ளன ? 
பதில்கள்:
1.ஏ.ஆர்.ரகுமான்,2.சரோஜினி வரதப்பன்,3.A.P.J.அப்துல்
  கலாம்,4.2009, 5.எர்ணாகுளம்,கேரளா,6.கல்பனா சாவ்லா,
7.லத்திகா சரண்,8.இந்திரா நூயி,9.புதுடெல்லி,10.ஆலிவ்.
இன்று பிப்ரவரி 11 
பெயர் :ரெனே டேக்கார்ட்,
மறைந்த தேதி : பிப்ரவரி 11, 1650
ஒரு பிரெஞ்ச்சு நாட்டு மெய்யியல் அறிஞர்.
இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின்
தந்தை எனப் பலரும் கருதுவர்.இவர்
கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர்.
இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டஸ் கார்ட்டேசியஸ்
(Renatus Cartesius) என அறியப்படுகின்றார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

எக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம். கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம்.

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. இரா.கதிர்வேல்  |  8:47 பிப இல் பிப்ரவரி 24, 2011

    உண்மையிலேயே என்னைப் போன்ற B.E CSE படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.

    என்னுடைய வலைப்பூவில் இணைப்பு கொடுத்தாச்சு.

    மறுமொழி
    • 2. winmani  |  10:33 பிப இல் பிப்ரவரி 24, 2011

      @ இரா.கதிர்வேல்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. ♠புதுவை சிவா♠  |  11:19 பிப இல் பிப்ரவரி 24, 2011

    Thanks winmani useful info

    மறுமொழி
    • 4. winmani  |  11:24 பிப இல் பிப்ரவரி 24, 2011

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. produkcja zwierzęca forum  |  2:32 பிப இல் மார்ச் 1, 2011

    I’m impressed, I have to say. Actually not often do I encounter a weblog that’s both educative and entertaining, and let me let you know, you’ve hit the nail on the head. Your idea is excellent; the problem is one thing that not sufficient individuals are speaking intelligently about. I’m very blissful that I stumbled throughout this in my seek for something regarding this.

    மறுமொழி
  • 6. ந.ர.செ. ராஜ்குமார்  |  12:04 முப இல் மே 27, 2011

    ஒவ்வொரு இடுகையிலும் “இன்று” பகுதி இடம்பெறுவது தங்கள் வலைப்பூவின் தனிச்சிறப்பு. அந்த வரிசையில் வினா விடைகளையும் சேர்த்துத் தருவது தனிமுத்திரை பதிக்கிறது.

    மறுமொழி
    • 7. winmani  |  12:08 முப இல் மே 27, 2011

      @ ந.ர.செ. ராஜ்குமார்
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,756 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: