புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.
ஜூன் 1, 2011 at 7:09 முப 4 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே தன் திறமையைக் காட்டி பணம் சம்பாதிக்க எண்ணும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும் ஆம் ஆன்லைன் மூலம் புரோகிராமர் பணம் சம்பாதிக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
விளம்பரத்தை சொடுக்கினால் போதும் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் பல கும்பல்களை நம்பி இனியும் ஏமாற வேண்டாம். கணினியில் புரோகிராம் எழுத்தெரியுமா ? உங்கள் புரோகிராம்கள் விலை போகாமல் இருக்கிறதா ? இனி எந்த கவலையும் வேண்டாம் உங்கள் புரோகிராம்களை எளிதாக ஆன்லைன் மூலம் விற்று பணம் சம்பாதிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.binpress.com
ஆன்லைன் மூலம் கணினித்துறையில் இருக்கும் பல நண்பர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி என்று இமெயில் மூலம் நம்மிடம் கேட்கும் கேள்விக்கு பதிலாக இந்தப்பதிவு இருக்கும். கணினி மொழிகளில் உங்களுக்கு எந்த மொழி தெரிந்தாலும் அந்த மொழியில் நீங்கள் எழுதும் புரோகிராம் Code -ஐ வாங்க பல பேர் காத்திருக்கின்றனர். C முதல் VB வரை , ஜாவா முதல் ஆண்டிராய்டு வரை , C# முதல் PHp வரை உங்கள் புரோகிராமை ஆன்லைன் மூலம் இத்தளத்தில் விற்பனைக்கு வைக்கலாம். விலையையும் நாமே நிர்ணயம் செய்து கொள்ளலாம். நாம் உருவாக்கிய புரோகிராம் தேவைப்படும் நபர்கள் ஆன்லைன் மூலம் தேடி நம் புரோகிராம் அவர்களுக்கு பிடித்திருந்தால் நாம் தெரிவித்துள்ள பணத்தை செலுத்தி நம் புரோகிராமை வாங்கிக்கொள்கின்றனர். இப்போது அதிகமாக ஆண்டிராய்டு அப்ளிகேசன் தொடர்பான புரோகிராம்களை பல ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இத்தளத்தில் சென்று தேடி பலரது புரோகிராம்களை வாங்குகின்றனர் என்பதும் கூடுதல் செய்தி. இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் புரோகிராமையும் விற்பனை செய்யலாம். ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் புரோகிராமருக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை மானத்தை விற்று அடிமையாய் இருந்து பணம் சம்பாதிப்பதை விட வறுமையில் இருப்பதே உயர்ந்தது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.கொசுக்களே இல்லாத நாடு எது ? 2.மீன்கள் இல்லாத நதி எது ? 3.வருமானவரி இல்லாத நாடு எது ? 4.எலும்புக்கூடு இல்லாத மீன் ? 5.எழுதப்படிக்கத் தெரியாத முகலாய மன்னர் யார் ? 6.குதிக்கத்தெரியாத மிருகம் எது ? 7.நதிகளே இல்லாத நாடு எது ? 8.கடலில் கலக்காத நதி எது ? 9.கண்கள் இருந்தும் பார்வை இல்லாத விலங்கு ? 10.காகங்கள் இல்லாத நாடு எது ? பதில்கள்: 1.பிரான்ஸ்,2.ஜோர்டான்,3.குவைத், 4.ஜெல்லி மீன், 5.அக்பர்,6.யானை,7.சவுதி அரேபியா,8.யமுனை, 9.வவ்வால்,10.நியூஸிலாந்து.
இன்று ஜீன் 1
பெயர் : நீலம் சஞ்சீவ ரெட்டி, மறைந்த தேதி :ஜீன் 1, 1996 இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964-லிலும் முதலமைச்சராக இருந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையா.
1.
sukumar | 9:02 முப இல் ஜூன் 1, 2011
நல்ல பதிவு நன்றிகள் பல.
2.
winmani | 4:28 பிப இல் ஜூன் 1, 2011
@ sukumar
மிக்க நன்றி
3.
மணி | 1:43 பிப இல் ஜூன் 1, 2011
//4.எலும்புக்கூடு இல்லாத நாடு எது ? -ஜெல்லி மீன்
கொஞ்சம் இத மாத்துங்க.
அருமையான தகவல்.. நன்றி
4.
winmani | 4:33 பிப இல் ஜூன் 1, 2011
@ மணி
மிக்க நன்றி , திருத்தியாச்சு.