ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.
பிப்ரவரி 18, 2011 at 10:45 முப 8 பின்னூட்டங்கள்
ஆன்லைன் மூலம் எண்ணற்ற பல சேவைகள் இன்றும் நமக்கு
கிடைத்துகொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இன்று
ஆங்கில Vocabulary -ஐ மேம்படுத்துவதற்கு வசதியாக
ஆன்லைன் மூலம் விளையாடும் விளையாட்டு வந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
எந்த ஒரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில்
நாம் வல்லவர்களாக இருக்கலாம், இதே போல் தான் ஆங்கில
மொழியில் சொல்வளம் (Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு
தளம் உதவுகிறது.
இணையதள முகவரி :http://vocabgenii.com
எதையும் விளையாட்டாக கூறினால் பலரும் ஏற்றுக்கொள்வர்
என்பதை மனதில் கொண்டு ஆங்கில சொல்வளத்தை வைத்து
ஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்
தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு
உருவாக்கி கொண்டு நுழையலாம். ஆங்கிலம் ஆரம்ப நிலையில்
இருப்பவர்கள் முதல் Expert வரை அனைவரும் தங்களுக்கு
தகுந்தபடி Level ஐ தேர்ந்தெடுத்து விளையாடலாம். தினமும்
டிக்ஸ்னரியில் பல வார்த்தைகள் படிப்பதை கொள்கையாக
வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலம் எங்கிருந்து
வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி தங்களின்
Vocabulary அறிவை வளர்த்துக்கொள்ளலாம். கண்டிப்பாக
இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை எதையும் விளையாட்டாக ஏற்கும் பக்குவம் மனிதனுக்கு வந்துவிட்டால் துன்பப்படுவதும் பொறாமைப்படுவதும் குறையும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை ? 2.சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம் ? 3.ரூ.5000க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி ? 4.சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய் ? 5.எது தனிக் கனி அல்ல ? 6.ஒரு a.m.u என்பது எதற்குச் சமம் ? 7.கொல்லப்பட்ட தடுப்புசிகளுக்கு உதாரணம் ? 8.வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு ? 9.வெண்கலத்தின் இணைப்பு யாது ? 10.1 + tan(square) θ இன் மதிப்பு ? பதில்கள்: 1.1.027 பில்லியன்,2.பள்ளி,3.ரூ.500,4.தோல் புற்றுநோய், 5.நெட்டிலிங்கம்,6.931 MeV,7.காலரா தடுப்பு மருந்து,8.0.01 செ.மீ, 9.காப்பர் வெள்ளீயம், 10.sec (square) θ .
இன்று பிப்ரவரி 18பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ணர், பிறந்த தேதி : பிப்ரவரி 18, 1836 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர் சுவாமி விவேகானந்தரின் குருவாவார்.அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.உங்களால் பாரத தேசத்திற்கு பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு..
1.
kakkoo-Manickam | 12:26 பிப இல் மார்ச் 3, 2011
Thank you
2.
winmani | 12:27 பிப இல் மார்ச் 3, 2011
@ kakkoo-Manickam
மிக்க நன்றி
3.
♠புதுவை சிவா♠ | 12:42 பிப இல் மார்ச் 3, 2011
Thanks winmanni
4.
winmani | 12:44 பிப இல் மார்ச் 3, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
5.
srithar | 4:33 பிப இல் மார்ச் 3, 2011
arputham
6.
winmani | 1:17 முப இல் மார்ச் 4, 2011
@ srithar
நன்றி
7.
Dhanagopal | 9:12 பிப இல் ஜூன் 26, 2011
Very good ………keep it up your….you are doing best always…
8.
winmani | 12:40 முப இல் ஜூன் 27, 2011
@ Dhanagopal
மிக்க நன்றி