டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.
ஏப்ரல் 8, 2011 at 11:50 பிப பின்னூட்டமொன்றை இடுக
டைட்டானிக் படம் நாம் பார்த்திருப்போம் ஆனால் டைட்டானிக்
கப்பலின் பாகங்கள் எப்படி சிதைவுற்றது பற்றிய முழுமையான
விபரங்களை வீடியோவுடன் அனைவருக்கும் புரியும் படி
சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்
பதிவு.

படம் 2
டைட்டானிக் கப்பல் எப்படி எங்கே சென்று என்னவாகி இருக்கும் ?
என்ற பல கேள்விகளுக்கான பதிலாக இந்தத்தளம் டைட்டானிக்
கப்பல் எப்படி பாதிப்புக்குள்ளாயிருக்கும் என்பதை நமக்கு
உயிரோட்டமாக அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்தத்
தளம்.
இணையதள முகவரி : http://www.expeditiontitanic.com
கோடிக்கணக்கான பணத்தை அள்ளி குவித்த டைட்டானிக் படம்
நம் அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் டைட்டானிக் கப்பல்
பற்றிய அறிய பல தகவல்களை கற்பனையான தோற்றத்துடன்
நம் கண் முன் காட்டுகிறது இந்தத்தளம். Expedition titanic என்பது
தான் இத்தளத்தின் பெயர் டைட்டானிக் கப்பலின் அனைத்து
எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் இத்தளம்
கப்பலுக்குள் நாம் செல்வது போலவே உருவாக்கப்பட்டுள்ளது.
கப்பலின் உயரம் என்ன என்பது முதல் அதன் அடிப்பாகம் வரை
அனைததையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றாக சொடுக்கி
ஒவ்வொரு பாகத்தைப்பற்றியும் விரிவாக படத்துடனும்
வீடியோவுடனும் தெரிந்து கொள்ளலாம் டைட்டானிக் கப்பல் பற்றி
அறிய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
பதிலீடாக (alternative) உள்ளதை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையதளம்
ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.
தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்.
நம்மிடம் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயனுள்ள இணையதளம்.
வின்மணி சிந்தனை தொடர் முயற்சி பல தோல்விகளை கொடுக்கும் ஆனால் கிடைக்கும் வெற்றியும் பெரியதாக இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.முதன் முதலில் உருவான தபால் தலைகள் எந்த நிறத்தில் இருந்தது ? 2.உலகஅஞ்சல்ஒன்றியம் என்ற அமைப்பு எந்த நாட்டில் உள்ளது? 3.முதன் முதலில் டெலிபோன்டைரக்டரி எங்கு வெளியீடப்பட்டது? 4.முதன் முதலில் தமிழ்த்தந்தி எங்கு அறிமுகானது ? 5.உலகிலேயே எந்த நாட்டில் தபால் நிலையங்கள் அதிகம் ? 6.நினைவுத்தபால் தலையை முதலில் வெளியீட்ட நாடு எது ? 7.அமெரிக்காவில் குதிரைதபால் போக்குவரத்து எந்த நூற்றாண்டில் நடைபெற்றது ? 8.முதன் முதலில் இருவண்ணங்களில் தபால் தலையை வெளியீட்ட நாடு எது ? 9.முதன் முதலில் தபால் தலையில் வெளியான உருவம் ? 10.ஏர்மெயில் சேவையை முதலில் பயன்படுத்தி செயல்படுத்தியவர்கள் யார் ? பதில்கள்: 1.கருப்பு,2.சுவிட்சர்லாந்து,3.1880,4.ஈரோட்டில், 5.இந்தியாவில்,6.அமெரிக்கா,7.18-ம், 8.இந்தியா, 9.விக்டோரியா மகாராணி,10.பிரெஞ்சுகாரர்கள்.
இன்று ஏப்ரல் 8பெயர் : கோபி அன்னான் , பிறந்த தேதி : ஏப்ரல் 8, 1938 கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகம் ஆவார். 1996 இல் இப்பதவிக்குத் தெர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் ஜனவரி 1, 1997 முதல் பதவி ஏற்றார். மனிதநேயமிக்க நல்லவர் சிறந்த பல கருத்துக்களையும் நல்ல திட்டங்களையும் வகுத்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
இன்று ஏப்ரல் 8பெயர் : கோபி அன்னான் , பிறந்த தேதி : ஏப்ரல் 8, 1938 கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகம் ஆவார். 1996 இல் இப்பதவிக்குத் தெர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் ஜனவரி 1, 1997 முதல் பதவி ஏற்றார். மனிதநேயமிக்க நல்லவர் சிறந்த பல கருத்துக்களையும் நல்ல திட்டங்களையும் வகுத்தவர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்..
Subscribe to the comments via RSS Feed