ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.

நவம்பர் 12, 2010 at 4:42 முப 5 பின்னூட்டங்கள்

3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு
இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று
நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக
3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

முப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல
நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும்
3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம்
கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே
அதுவும் நேரம் ஒதுக்கி ஆன்லைன் மூலம் 3D படம் வரையத்
தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம்
உள்ளது.

இணையதள முகவரி :  http://www.3dtin.com

3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல்
இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு
சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம்
மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும்
பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் முதல் பெயிண்ட் பிரஷ்
வரை அத்தனையும் கிடைக்கிறது ஆன்லைன் மூலம் எளிதாக
வரைந்து பழகலாம். சிங்கையில் இருந்து தோழி கிருஷ்ணவேணி
அவர்கள் 3D-ல் படம் வரைய கற்றுத்தரும் இணையதளம் பற்றி
1 மாதத்திற்கு முன் கேட்டிருந்தார் அவருக்கும் 3D பற்றி அறிய
விரும்பும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

வின்மணி சிந்தனை
அடுத்தவரைப் பற்றி குறை கூறும் மனிதனிடம் இருந்து
எப்போதும் விலகி இருப்பது நல்லது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எளிதில் கடத்தி எனப்படும் உலோகம் எது ? 
2.ஓராண்டு விண்வெளியில் தங்கிய விண்கூடம் எது ? 
3.ரொட்டி நாடு என்று எந்த நாட்டை அழைக்கிறோம் ? 
4.ஆலவாய் என்பது எந்த நகரைக் குறிக்கிறது ? 
5.நிலவினில் ஓடிய காரின் பெயர் என்ன ? 
6.தமிழ் மாதங்களில் 32 நாட்கள் வரும் மாதம் எது ?
7.ரோஜாச் செடியில் இருந்து எடுக்கப்படும் வாசனைத்
 திரவியம் எது ? 
8.நமீபியாவின் தலைநகரம் எது ? 
9.மருணீக்கியார் என்று அழைக்கப்பட்டவர் யார் ? 
10.சாலர்ஜங் மியூசியம் எங்கே உள்ளது ?
பதில்கள்:
1.தாமிரம், 2.மிர் விண்கூடம்,3.ஸ்காட்லாந்து, 4.மதுரை, 
5.லூனார் ரோவர்,6.ஆனி,  7.அத்தர், 8.விந்தோக்,
 9.திருநாவுக்கரசர்.10.ஹைதராபாத்.
இன்று நவம்பர் 12 
பெயர் : சுன் இ சியன்,
பிறந்த தேதி : நவம்பர் 12, 1866
தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில்
ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என
இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த 
மக்களுக்கான மூன்று கொள்கைகள் சீன அரசியல்
தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

படத்தை எழுத்தாக (ASCII) மாற்றித் தரும் புதுமையான தளம். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. HARESH NARAYAN  |  10:33 முப இல் நவம்பர் 14, 2010

    பயனுள்ள தகவல்கள்..! வினா விடைகளும் அருமை..!


    DREAMER

    மறுமொழி
    • 2. winmani  |  6:41 பிப இல் நவம்பர் 14, 2010

      @ HARESH NARAYAN
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. எஸ். கே  |  12:14 பிப இல் நவம்பர் 14, 2010

    மிகவும் அருமை! நன்றி!

    மறுமொழி
    • 4. winmani  |  6:42 பிப இல் நவம்பர் 14, 2010

      @ எஸ். கே
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. ramakrishnan.T  |  4:17 பிப இல் நவம்பர் 16, 2010

    how to connect the home group

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: