உங்கள் தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா என்று சோதிக்க ஒரு ஆன்லைன் டூல்.
ஏப்ரல் 7, 2011 at 10:33 பிப 2 பின்னூட்டங்கள்
புதிதாக இணையதளம் உருவாக்கினால் மட்டும் போது நாம் உருவாக்கிய
தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா ? தேவையான இடங்களின்
சரியான செய்தியை கொடுத்திருக்கிறோமோ அத்தனை வயதினரும்
படிக்கும் வண்ணம் நம் தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை
இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம் சோதிக்க ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படம் 2
இணையதள வடிவமைப்பு உருவாக்குவதற்கு நாம் எவ்வளவு சிரமம்
எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு இணையதளத்தில்
பயன்படுத்தப்படும் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சோதித்து
கொள்ள வேண்டும் நம் தளத்தில் பயன்படுத்தி இருக்கும் அல்லது
பயன்படுத்தப்போகும் வார்த்தையை சோதிக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.read-able.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இணையதளத்தை
சோதிக்க வேண்டும் என்றால் Test by URL என்ற மெனுவை சொடுக்கி
வரும் Web Address என்ற கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை
கொடுத்து Calculate Readability என்ற பொத்தானை சொடுக்கினால்
போதும் அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் முழுமையாக
சோதிக்கப்பட்டு நமக்கு முடிவுகள் காட்டப்படும். எத்தனை வயதுள்ள
குழந்தைகள் உங்கள் தளத்தை படிக்கும் படி இருக்கிறது என்றும்
ஒவ்வொன்றும் விரிவாக நமக்கு காட்டப்படும். இங்கு வரும் பச்சை
நிறம் அனைத்து வயதினமும் படிக்கும் வண்ணம் சிறந்த தளமாக
இருக்கிறது என்பதை காட்டவும், சிகப்பு வண்ணம் வார்த்தைகள்
அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்படி இல்லை என்பதை
காட்டுவதற்காகவும் உள்ளது. இணையதளம் உருவாக்கும் முன்
வார்த்தைகளை சோதிக்க விரும்புபவர்கள் Test by Direct Input
என்ற மெனுவை சொடுக்கி நேரடியாக வார்த்தைகளை கொடுத்து
சோதித்துக்கொள்ளலாம். Winmani.wordpress.com என்ற நம்
தளத்தை கொடுத்து சோதித்து பார்த்தோம் முழுவதும் பச்சையாக
காட்டியதை படம் 2 காட்டுகிறது. இணையதளம் உருவாக்க
விரும்புபவர்கள் முதல் இணையதளம் வைத்திருக்கும் அனைவரும்
தங்கள் தளத்தை சோதித்துக்கொள்ள இந்தத்தளம் பயனுள்ளதாக
இருக்கும்.
உங்கள் கோப்பில் வைரஸ் இருக்கிறதா எளிதாக சோதிக்கலாம்
MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.
ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க
ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.
வின்மணி சிந்தனை நாம் பேசும் அன்பான வார்த்தைகள் கூட நாம் வாழ்ந்த பின்னரும் யாரையும் விட்டு நீங்காது வாழும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.நெப்போலியன் எந்த வயதில் இத்தாலி நாட்டை வென்றார் ? 2.வின்ஸ்டன் சர்ச்சில் எந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்பரிசை வென்றார் ? 3.இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் யார் ? 4.அமெரிக்காவின் காந்தி என அழைக்கப்படுபவர் யார் ? 5.சுதந்திர சீனாவின் முதல் ஜனாதிபதி யார் ? 6.விக்டோரியா மகாராணி எந்த வயதில் பட்டத்திற்கு வந்தார் ? 7.அறிஞர் அண்ணா எந்த ஆண்டு மறைந்தார் ? 8.ஸ்டாலின் என்றால் என்ன பொருள் ? 9.அமெரிக்காவின் 42 வது ஜனாதிபதி யார் ? 10.கனடாவின் முதல் பிரதமர் யார் ? பதில்கள்: 1.26 வயதில்,2.1953,3.மார்க்ரெட் தாட்சர்,4.மார்ட்டின் லூதர் கிங், 5.சன் - யாட்- சன்,6.19-ம் வயதில்,7.1969, 8.இரும்பு மனிதர், 9.பில் கிளிண்டன்,10.சர்.ஜான்.ஏ.மேக்டொனால்ட்.
இன்று ஏப்ரல் 7பெயர் : ரவி சங்கர் , பிறந்த தேதி : ஏப்ரல் 7, 1920 பாரத ரத்னா பண்டிதர் ரவி சங்கர் உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இவருக்கு 1999ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இசைத்துறையில் உங்கள் பணி எங்கள் மனதை இன்றும் சந்தோஷமாக வைத்திருக்கிறது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா என்று சோதிக்க ஒரு ஆன்லைன் டூ.
1.
Life Direction Network | 6:18 பிப இல் ஏப்ரல் 9, 2011
விண்மணிக்கு அனைத்தும் பச்சைக்கொடியாகத்தான் வருகிறது, ஆனால் http://www.read-able.com என்ற அந்த தளத்தின் முடிவுகள் அப்படி வரவில்லையே?
2.
winmani | 7:06 முப இல் ஏப்ரல் 10, 2011
@ Life Direction Network
இதற்கு நாம் பொறுப்பல்ல நண்பரே.
நன்றி