Archive for ஏப்ரல் 27, 2011
இணைய நண்பர்களுக்கான வின்மணியின் 500 வது நாள் மற்றும் 500 வது சிறப்பு பதிவு.
வின்மணி வலைப்பூ தொடங்கி இன்றோடு 500 வது நாள் மற்றும்
500 பதிவும் கூட, திரும்பி பார்ப்பதற்குள் 499 நாட்கள் ஓடிவிட்டது
தமிழில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப தகவல்களுக்கு உலக
அளவில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருப்பது நமக்கு
பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது, எத்தனையோ
வாழ்த்துக்கள் , எத்தனையோ பாராட்டுக்கள் , எத்தனையோ பிழைகள்
என அனைத்தையும் சுட்டி காட்டி நாம் இந்த வெற்றியை
சுவைத்திருக்கிறோம் என்றால் இதற்கு எல்லாம் வல்ல
இறைவனின் ஆசியும், நம் இணைய நண்பர்களின் அன்பும் தான்
காரணம். உங்கள் அனைவருக்கும் நம் வின்மணியின் சார்பில்
எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையதள பெயர் பதிவு ( Domainname Register), இணையதள
இடவசதி ( Webhosting ) மற்றும் இணையதள வடிவமைப்பு (Webhosting ),
இணையதள பாதுகாப்பு போன்ற அனைத்து தகவல்களையும் சேவையும்
அளிப்பதற்காக தமிழ் மொழியில் ஒரு தளம் வந்துள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
வின்மணியின் ” இணையதளம் உருவாக்க ” என்ற பகுதியின் மூலம்
நமக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலும் சொந்தமாக இணையதளம்
ஆரம்பிக்க எவ்வளவு செலவு ஆகும் ?, எங்கு சென்று இணையதள
பெயர் பதிவு செய்ய வேண்டும் ?, இணையத இடம் மலிவு விலையில்
பலர் கொடுக்கின்றனரே அங்கு சென்று இணையதள இடம்
(Webhosting Space) வாங்கலாமா ? என்று இமெயில் மூலம் வரும்
பலவிதமான கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஏப்ரல் 27, 2011 at 1:58 முப 43 பின்னூட்டங்கள்