கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தின் அளவை துல்லியமாக நொடியில் அறியலாம்.
ஜூன் 23, 2011 at 10:49 முப 2 பின்னூட்டங்கள்
குரோம் உலாவியில் நாம் ஒரு வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அத்தளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அந்த புகைப்படத்தை காப்பி செய்து அல்லது வேறு ஏதாவது மென்பொருள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இனி படத்தை மட்டுமல்ல படம் வலது பக்கத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது இத்தளத்தில் லோகோ size என்ன என்பது முதல் அத்தனையும் அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
தற்போது அனைத்து நண்பர்களும் தங்களுக்கென்று அல்லது தங்கள் நிறுவனத்திற்கென்று சொந்தமாக வலைப்பூ உருவாக்கி கொள்கின்றனர் பல நேரங்களில் நமக்கு ஒரு தளத்தின் வடிவமைப்பு பிடித்திருக்கும் ஆனால் அதன் அளவுகளை துல்லியமாக தெரிந்துகொள்ள நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களைத் தான் தேடிச்சென்றிருப்போம்.ஆனால் இனி நம் குரோம் உலாவியில் இருந்து கொண்டே ஒரு வலைப்பூவில் இருக்கும் அனைத்தின் அளவையும் எளிதாக அறியலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/aonjhmdcgbgikgjapjckfkefpphjpgma#
கூகிள் குரோம் உலாவியில் நாம் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி நிறுவலாம் அடுத்த சில நொடியில் குரோம் டூல்பாரில் நமக்கு (ஸ்கேல் ) படம் 1-ல் உள்ளது போல் வந்துவிடும். இனி அந்த ஸ்கேல்-ஐ சொடுக்கி எந்த ஒரு தளத்திலும் உள்ள ஒரு படத்தின் அளவு முதல் படத்திற்கு வலது பக்கம் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பது முதல் ஒவ்வொரு பின்னோட்டத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பது வரை அனைத்தும் அறியலாம். வலைப்பதிவர்களுக்கும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.
நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.
உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.
கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை நல்லவர்களைத் தேடுவதை விட நாம் நல்லவர்களாக மாறினால் நம்மிடம் சேருபவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டின் முதல் பெண் கமிஷினர் யார் ? 2.சேரர்களின் துறைமுக நகரம் எது ? 3.நாயன்மார்கள் பாடிய தொகுப்புக்கு பெயர் ? 4.ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படும் இடம் எது ? 5.பூட்டு உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம் எது ? 6.தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார் ? 7.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட ஆண்டு ? 8.இந்திய அருமண் தொழிற்சாலை உள்ள இடம் எது ? 9.அதிக அளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் மாவட்டம் எது ? 10.பாண்டியர்களின் துறைமுக நகரம் எது ? பதில்கள்: 1.லத்திகா சரன், 2. முசிறி , தொண்டி, 3.சைவத்திருமுறைகள், 4.காஞ்சிபுரம், 5.திண்டுக்கல்3, 6.அறிஞர் அண்ணா, 7.1979, 8.மணவாளக்குறிச்சி, 9. பெரம்பலூர்,10.கொற்கை.
இன்று ஜூன் 23
பெயர் : வி. வி. கிரி , மறைந்த தேதி : ஜூன் 23, 1980 வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.இந்தியாவின் தலைசிறந்த விருதான,பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகிள் குரோம் நீட்சியின் மூலம் வலைப்பூவில் இருக்கும் படம் மற்றும் இடத்தி.
1.
rathnavel natarajan | 3:19 பிப இல் ஜூன் 23, 2011
நல்ல பதிவு.
2.
winmani | 7:12 பிப இல் ஜூன் 23, 2011
@ rathnavel natarajan
மிக்க நன்றி