கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

ஜனவரி 28, 2011 at 12:32 பிப 4 பின்னூட்டங்கள்

கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில்
தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும்
நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

எதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான்
வல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும்
சொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்
உருவாக்குபவர்கள் கணினியில் தங்கள் தளம் தெரிவதற்கும்
மொபைலில் தெரிவதற்கும் தனித் தனியாகதான் உருவாக்கி
கொண்டு தான் இருக்கின்றனர், பல நிறுவனங்களும் இதற்கு
போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க
சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி
கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான
கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது ஆம் உங்கள் தளங்களை
மட்டும் கொடுங்கள் நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி
காட்டுகிறோம் யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே,

சில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம்
என்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத
அளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி
இருக்கும் இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க
விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற
பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம்
வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு
எழுத்தை மட்டும் பார்க்கலாம்.

முகவரி : http://google.com/gwt/n

வின்மணி சிந்தனை
ஒழுங்காக விரதங்களை கடைபிடிப்பவர்கள் உடலில் 
நோய் வருவது இல்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முகலாயர்கள் பயன்படுத்திய நாணயம் எது ?
2.இந்தியாவை தாய்க்கு சமமாக மதித்தவர் யார் ?
3.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமையிடம்
  எங்குள்ளது ?
4.முதல் காங்கிரஸ் மாநாடு யார் தலைமையில் நடந்தது ?
5.சிவாஜியின் ஆன்மிகக் குரு யார் ?
6.சுயராஜ்ய கட்சி என்பதை நிறுவியவர் யார் ?
7.பத்திரிகைகளின் கட்டுப்பாட்டை நீக்கியவர் யார் ?
8.துணைப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?
9.I.N.A -வைத் தோற்றுவித்தவர் யார் ?
10.முதல் நிதிவாரியம் எங்கு அமைக்கப்பட்டது ?
பதில்கள்:
1.தாம், 2.பாரதியார்,3.பெங்களூர்,4.W.V.பானர்ஜி,
5.துக்காராம்,  6.C.R.தாஸ், 7.சார்லஸ் மெட்காஃப்,
8.வெல்லெஸ்ஸி பிரபு, 9.நேதாஜி, 10.கொல்கத்தா.
இன்று ஜனவரி 28 
பெயர் : ராஜா ராமண்ணா
பிறந்த தேதி : ஜனவரி 28, 1925
கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தவர்.
பாம்பே, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின்
ஆணையாளராக எட்டாண்டுகள் பணியாற்றினார்.
பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் 
ஆணைக்குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு
முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம், இந்திய விஞ்ஞானப்
பள்ளித் துறை மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம்
ஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம். TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  4:57 பிப இல் பிப்ரவரி 7, 2011

    நல்ல தகவல் நன்றி சார்!

    மறுமொழி
  • 2. umpathy  |  6:23 பிப இல் பிப்ரவரி 7, 2011

    ithula appidiya url copy panni short panni mobile site nu sollidalam.
    Thanx sir

    மறுமொழி
  • 4. ali  |  10:20 முப இல் பிப்ரவரி 8, 2011

    நன்றி சார்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...