ஆபாச தளங்கள் முறையற்ற தகவல்கள் வெளியீடும் தளங்களின் மீது கூகிள் அதிரடி நடவடிக்கை.

மே 7, 2011 at 5:02 பிப 6 பின்னூட்டங்கள்

இணையதள உலகில் மிகப்பெரும் தேடுபொறியான கூகிள் தற்போது
ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,காப்புரிமை பெற்ற தளங்களில்
இருந்து தகவல்களை திருட்டுத்தனமாக வெளீயீடும் தளங்களை
தனது தேடல் பக்கத்தில் காட்டுவதில்லை என்ற அதிரடியான
முடிவை எடுத்துள்ளது.

சீனாவில் கூகிள் இணையதளத்திற்கு கொடுத்த நெருக்கடி
காரணமாக தற்போது கூகிள் பல அதிரடி நடவடிக்கைகளை
எடுத்துள்ளது. முதலாவதாக ஆபாச தளங்கள், நாட்டின் சட்டதிற்கு
தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல் வெளியீடப்பட்டுள்ள
தளங்கள், காப்பிரைட் அனுமதி பெற்ற தளங்களில் இருந்து
தகவல்களை திருடி வெளியீடப்படும் இணையதளங்களை
கூகிள் தேடுபொறியில் காட்டுவதில்லை. இந்த அதிரடியான
நடவடிக்கையால் கூகிளால் காட்டப்படும் பல தேவையில்லாத
குப்பையான இணையதளங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.

படம் 1

மற்ற நிறுவனங்களைப்போல விரைவில் செயல்படுத்தப்படும்
என்ற பேச்சுக்கே இடமில்லாத கூகிள் உடனடியாக இந்த
சேவையை செயல்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும் தகவல்களை
நீக்கிய பின் கூகிள் காட்டும் தேடுதல் முடிவு படம் 1-ல்
காட்டப்பட்டது போல் இருக்கும். சைபர் கிரைம் போலீசார்
தவறான தகவல்களை வெளியீடும் தளங்களைப் பற்றிய
தகவல்களை கேட்டால் அவர்களைப்பற்றிய அத்தனை
தகவல்களையும் கொடுக்கத்தயார் என்கிறது கூகிள். இதனால்
இனி உங்கள் தளத்தின் தகவல்கள் திருடப்பட்டால் உடனடியாக
நாம் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கலாம். தவறான தவல்களை வெளியீடும்
தளங்கள் இனியாவது அது போன்ற தகவல்களை நீக்க
வேண்டும் அப்போது தான் கூகிள் துணை அவர்களுக்கு
இருக்கும்.கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி

ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க

பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.

டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்

 
வின்மணி சிந்தனை
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நபர்களுக்கு
ஆண்டவன் பெரும் பொருளை அள்ளி கொடுப்பான்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சுசீந்திரம் கோவில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் உயரம் என்ன?
2.திருப்பதியின் வேறுபெயர் என்ன ?
3.கந்தபுராணம் எத்தனை காண்டங்களை கொண்டது ?
4.கன்னியாகுமரியில் எத்தனை தீர்தங்கள் சேர்கின்றன ?
5.காஞ்சி என்றால் என்ன பொருள் ?
6.சூரியனை வழிபடும் பிரிவின் பெயர் என்ன ?
7.திருமலை எத்தனை அடி உயரம் கொண்டது ?
8.விஷ்ணுவை வழிபடும் பிரிவின் பெயர் என்ன ?
9.பொய்கை ஆழ்வார் பிறந்த இடம் எது ?
10.சிவனை வழிபடும் பிரிவின் பெயர் என்ன ?
பதில்கள்:
1.18 அடி, 2.சேஷாசலம், 3.ஆறு,4.16,5.ஓட்டியாணம், 
6.செளரம்,7.2800 அடி, 8.வைணவம், 9.காஞ்சி,10.சைவம்.
 
இன்று மே 7 

 இரவீந்திரநாத் தாகூர்

பெயர் : இரவீந்திரநாத் தாகூர், 
பிறந்த தேதி : மே 7, 1861
புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன
பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக
குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய
மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்
தேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக
இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

சென்னை முதல் அமெரிக்கா வரை ஒவ்வொரு இடத்தின் கால நிலையையும் இனி வரும் காலநிலையையும் துல்லியமாக அறியலாம். கணினியின் பழைய பாகங்களை வாங்க அமெரிக்காவில் ஒரு புதிய முயற்சி.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Devarajan  |  5:49 பிப இல் மே 8, 2011

    இணைய வழியில் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் கூகிள் எடுத்த அதிரடி முடிவு..!!

    மறுமொழி
  • 3. Life Direction Network  |  8:32 முப இல் மே 9, 2011

    பல பதிவர்கள் எழுதும் சிறந்த பதிவுகளை ஒரே நிமிடத்தில் திருடி பேர் வாங்கி விடுகிறார்கள், இதில் வேதனை என்னவென்றால் பல திருட்டுப் பதிவுகளே தேடல் முடிவில் முதலில் காட்டப்படுகின்றன. கூகுளின் இந்த அதிரடி முடிவு திருட்டு பிரச்சனை மட்டுமல்லாமல், பல சீர்கேடுகளை சீர்படுத்தும் வகையாகவும் அமையும். இந்த முடிவு மனதிற்கு ஆறுதலளிக்கின்றது, நல்ல தகவலை தந்துள்ளீர்கள் நன்றி.

    மறுமொழி
  • 5. Jeyamaran  |  10:17 பிப இல் மே 9, 2011

    nalla thagaval…………..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: