தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் – முதலமைச்சர் பார்வைக்கு…
ஜூன் 22, 2011 at 3:32 முப 37 பின்னூட்டங்கள்
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.

படம் 1
வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம் பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.
* ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்-ல் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் இணைந்த ஆபாசதள தடுப்பு மென்பொருள் சேர்ந்தே இருக்க வேண்டும்.( Uninstall செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும்).
* குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை கொடுத்து தேடினால் முடிவு காட்டப்படக்கூடாது.
* MP4 , 3GP போன்ற வீடியோ கோப்புகள் கணினியில் Play செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும் அல்லது , இந்த கோப்புகளை லேப்டாப்-ல் காப்பி செய்தால் உடனடியாக Delete ஆகும்படி இருக்க வேண்டும்.
* சமூக வலைதளங்களான பேஸ்புக் , டிவிட்டர் ,ஆர்குட் போன்ற தளங்களை பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.
* வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம் இருக்க வேண்டும்.
* Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.
கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக கூகிளுக்கு சீனாவில் இடம் இல்லை, இப்போது இந்த பதிவின் முக்கியத்துவம் நமக்கு தெரிந்திருக்கும். அரசு கொடுக்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இங்கு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறையும். இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமை.
பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.
நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை
வின்மணி சிந்தனை குற்றம் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்த்தால் பெருமளவு குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும் இடம் எது ? 2.மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் முதலிடம் பிடிக்கும் மாவட்டம் எது ? 3.சோழர்களின் துறைமுக நகரம் எது ? 4.தென்னாட்டு காந்தி என அழைக்கப்பட்டவர் யார் ? 5.நாயன்மார்களின் எண்ணிக்கை என்ன ? 6.பரத நாட்டியம் சிறப்பு பெற்ற மாவட்டம் எது ? 7.கண்ணகிக்கு சிலை வடித்த சேர மன்னர் யார் ? 8.ஆழ்வார்களின் எண்ணிக்கை என்ன ? 9. மகாமகம் நடைபெறும் இடம் எது ? 10.மகாமகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ? பதில்கள்: 1.அலங்காநல்லூர், 2. சேலம், 3.காவேரி பூம்பட்டிணம், 4.அண்ணாத்துரை, 5.63, 6.தஞ்சாவூர், 7.சேரன் செங்குட்டுவன், 8.12, 9.கும்பகோணம்,10.12.
இன்று ஜூன் 22
அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற
தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி
ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில்
திரும்பப் பெற்றுக் கொண்டார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
LifeDirection Network என்ற தளத்தின் உரிமையாளர் அரசு கொடுக்கும் லேப்டாப்-ல் என்னவெல்லாம் பாதுகாப்பு அம்சங்கள் கொடுத்து மாணவர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கலாம் என்று கேட்டிருந்தார் அவருக்காக மட்டுமின்றி நம் அனைவருக்காகவும். இந்தப்பதிவு, இந்தப்பதிவை அவர் வீடியோவாக மாற்றி கொடுத்துள்ளார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு.
1.
பாண்டி | 3:59 முப இல் ஜூன் 22, 2011
என்ன பாஸ் .. இப்படி எல்லாம் பண்ணிட்டா ஆபாசத்த தேடி போக மாட்டானா மாணவன்?
கெட்டு சீரழிபவன் எங்கிருந்தாலும் சீரழிவான்.
நீங்கள் கூறுவது போல் தடை வைத்தாலும் அதை உடைப்பது முடியாத காரியமா?
நீங்க சொல்லுறபடி பார்த்தால் திருட்டு வீசீடி ஒளிச்சு இருக்கலாமே.
இதன் ஒளிச்சு வைக்குற வேலை எல்லாம் விட்டு விட்டு, செக்ஸ் கல்வி கொடுக்குற வழிய பாருங்க. ஒழுக்கம் தானா வரும்.
2.
winmani | 10:40 பிப இல் ஜூன் 22, 2011
@ பாண்டி
பத்து பேரில் ஒருத்தராவது கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமே அதற்காக தான். அதற்கு வழி செய்தது போல் இருக்கக்கூடாது தானே ?
நன்றி
3.
Life Direction Network | 9:24 முப இல் ஜூன் 22, 2011
இது வெறுமனே படித்துவிட்டு, விட்டுவிட வேண்டிய பதிவல்ல, யாரோ செய்வார்கள், யாரோ பார்த்துக்கொள்வார்கள், என்றில்லாமல் இத்தகவலை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச்செல்வது, இளைய தலைமுறைகள் நலனில் அக்கரை கொண்ட நம் ஒவ்வொருவரின் கடமையாகும். வருங்கால இந்தியாவின் நலன் கருதி இப்பதிவை நம்மிடமுள்ள சமூக தளங்களிலும் இணைத்து, அரசு அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச்செல்வோம். நம்மால் இயன்ற, நமக்கு தெரிந்த தலைவர்களிடமும் எடுத்துச் செல்வோம். மாணவர் நலனில் அக்கரைகொண்டு இப்பதிவை வெளியிட்ட விண்மணிக்கு நன்றி.
4.
winmani | 10:48 பிப இல் ஜூன் 22, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி
5.
வடிவேலன் | 10:52 முப இல் ஜூன் 22, 2011
மிக நல்லதொரு பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் கட்டாயம் இந்த பதிவு அரசின் கதவுகளை தட்டுவதன் மூலம் இலவச லேப்டாப் கொடுக்கும் அரசுக்கு மிக்க பாதுகாப்பான லேப்டாப்பினை மாணக்கர்களுக்கு தர இயலும். நன்றி வாழ்த்துக்கள்
6.
winmani | 10:48 பிப இல் ஜூன் 22, 2011
@ வடிவேலன்
மிக்க நன்றி.
7.
பூபால அருண் குமரன் . ரா | 2:28 பிப இல் ஜூன் 22, 2011
நீங்கள் எழுதி இருப்பது சரிதான். மாணவர்கள் கெட்டுபோய் விட கூடாது என்ற எண்ணத்தால் நீங்கள் கூறினாலும், இப்போதைய மாணவர்கள் பல பல மடங்கு தொழில்நுட்ப துறையில் கரை கடந்தவர்கள்.
ஆகவே நிச்சயம் :: “திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற வரிகள் தான் இங்கும் உண்மையாகிறது…
8.
winmani | 10:49 பிப இல் ஜூன் 22, 2011
@ பூபால அருண் குமரன் . ரா
மிக்க நன்றி
9.
பாமரன் | 2:49 பிப இல் ஜூன் 22, 2011
நல்ல..அவசியமான சிந்தனை,
!!!(இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு அதிகாரிகளிடமும் நம் நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமை.)!!!
10.
winmani | 10:51 பிப இல் ஜூன் 22, 2011
@ பாமரன்
மிக்க நன்றி
11.
rathnavel natarajan | 3:39 பிப இல் ஜூன் 22, 2011
நல்ல பதிவு.
12.
winmani | 10:51 பிப இல் ஜூன் 22, 2011
@ rathnavel natarajan
மிக்க நன்றி
13.
லியாக்கத் அலி | 6:13 பிப இல் ஜூன் 22, 2011
எப்பொழுதும் போல நல்ல செய்தியை கொடுத்து இருகின்றிர்கள்
சோழர்களின் துறைமுக நகரம் காவேரி பூம பட்டினம் ( தற்போது பூம்புகார் ) என்று படித்ததாக நினைவு இருகின்றது. சரி பார்க்கவும்.
நன்றி
14.
winmani | 10:53 பிப இல் ஜூன் 22, 2011
@ லியாக்கத் அலி
நண்பருக்கு அரசு பதிவேட்டில் காவேரி பூம்பட்டிணம் என்று தான் இருக்கிறது.
மிக்க நன்றி
15.
பாமரன் | 1:05 முப இல் ஜூன் 23, 2011
நன்பரே….நீங்கள் மீண்டும் ஒரு முறை நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் ஊரை பார்க்கவும்..
ஒருவர் குறிப்பிட்டு எழுதியிருந்தும் ஏன் கவனம் செலுத்த மறக்குறிங்க…!‘
16.
winmani | 7:49 முப இல் ஜூன் 23, 2011
@ பாமரன்
இரண்டு முறை அல்ல மூன்று முறை சோதித்து பார்த்தாச்சு , அரசு பதிவேட்டில் என்ன பதில் இருக்கிறதோ அதை அப்படியே கொடுத்துள்ளோம்.
மிக்க நன்றி
17.
பாமரன் | 11:25 முப இல் ஜூன் 23, 2011
3.சோழர்களின் துறைமுக நகரம் எது ?
பதில்கள்: மேட்டுபாளையம் (என்று இருந்தது)இதைத்தான் தவறு என்று நன்பர் சுட்டிக்காட்டினார்…நானும் எடுத்துரைத்தேன்…
நீங்கள் அதை கவனத்தில் கொள்ளாமல் சரியான பதிலை இங்கு சொன்னீர்கள்..
ஆனால் இப்போது சரியான பதிலான காவேரி பூம்பட்டிணம் (பதில்கள்) பகுதியில் இருக்கிறது.
(ஒரு வார்த்தை) உங்களால் தவறான பதில் பதிவாகிவிட்டது சரிசெய்யப்பட்டது..என்று கூறினால் சரியாக இருந்திருக்கும்.
நிற்க, உங்களுடைய அனைத்து பதிவுகளும்…அனைவருக்கும் உபயோகமானதாக வரும் காலங்களிலும்…தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.
18.
winmani | 11:27 முப இல் ஜூன் 23, 2011
@ பாமரன்
நம் மேல் உள்ள பிழை தான் ,
மிக்க நன்றி
19.
தமிழரசன் | 12:35 முப இல் ஜூன் 23, 2011
வின்மணி சிந்தனை
குற்றம் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்த்தால் பெருமளவு
குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும்
வின்மணியின் இந்த சிந்தனையே இப்பதிவின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது, குற்றம் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்ப்பது நம் கடமையே..
20.
winmani | 7:48 முப இல் ஜூன் 23, 2011
@ தமிழரசன்
மிக்க நன்றி
21.
Kaliraj | 5:23 முப இல் ஜூன் 23, 2011
This is really a good post.. Thanks. Tamilnadu government should stress these points before giving order for laptop….
22.
winmani | 7:50 முப இல் ஜூன் 23, 2011
@ Kaliraj
மிக்க நன்றி
23.
salemdeva | 9:42 முப இல் ஜூன் 23, 2011
மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள,அவசியமான பதிவு..!!
24.
winmani | 9:44 முப இல் ஜூன் 23, 2011
@ salemdeva
மிக்க நன்றி
25.
krishnamoorthy.s | 6:42 பிப இல் ஜூன் 23, 2011
நல்ல பதிவு. இதனை அரசுக்கு அனுப்பி வையங்கள் நண்பரே
26.
winmani | 7:14 பிப இல் ஜூன் 23, 2011
@ krishnamoorthy.s
மிக்க நன்றி
27.
வெற்றி | 1:11 முப இல் ஜூன் 24, 2011
இன்றைய மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்களின் அறிவும், திறமையும் மேலும் வளர்ந்து நல்ல பாதையை வகுத்துக்கொள்ளவே தமிழக அரசு மடிக்கணினிகளை வழங்குகிறது. ஆனால் மிக மோசமான அதன் மறுபக்க விளைவுகளை பற்றி பலர் யோசிக்கவில்லை, இந்த பதிவு மக்களை யோசிக்க வைக்கும் வகையில் உள்ளது, இதுபற்றி அரசை அறிவுறுத்துவது நமது பொறுப்புதான்.
ஒரு விபத்து நடந்து மக்களை காப்பாற்றுகிறவர்களை விட, விபத்தே நடக்காமல் பாதுகாப்பவர்களே பாராட்டுதலுக்குரியவர்கள், முன்னெச்சரிக்கை யோசனைகளை வழங்கிய வின்மணிக்கு பாராட்டுகள்.
28.
winmani | 1:25 முப இல் ஜூன் 24, 2011
@ வெற்றி
மிக்க நன்றி.
29.
sabireen | 12:56 பிப இல் ஜூன் 27, 2011
Mr. Winmani.
Your suggestion is good, but unfortunately now our technology is improved very well, so easily broken your every points above you mentioned.
Main thing is internet service provider only can blocked pornography website, So please inform to isp..
30.
winmani | 12:31 முப இல் ஜூன் 28, 2011
@ sabireen
நண்பருக்கு உண்மை தான் , ஆபத்தை தேடி போகும் குழந்தைகளைப்பற்றி நாம் கூற வில்லை , பல பேர் விபரம் தெரியாமல் சென்றுவிடக்கூடாதே என்பதற்காக தான்.
மிக்க நன்றி
31.
Life Direction Network | 8:33 முப இல் ஜூலை 4, 2011
இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு
அம்சங்களைப் பற்றி, பதிவாகவும் படிக்க முடிகிறது,
படமாகவும் பார்க்க முடிகிறது. நல்ல விசயம்தான் ஆனால்
இதை நிஜமாகவும் காணும் காலம் வரவேண்டும்.
மாணவர்கள் கையில் இருக்கும் மடிக்கணினிகள் கல்வி
வளர்ச்சிக்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்பது நம்
கனவு, இந்தக்கனவு மெய்ப்பட்டால், மாணவர்களின்
அறிவும், படிப்பிலுள்ள ஈடுபாடும் மேலும் வளர
மடிக்கணினிகள் காரணமாக இருக்கும் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.
நாளை மடிக்கணினிகளால் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றார்கள், ஈடுபாட்டோடு
படித்தார்கள் என்ற செய்தியைதான் நாம் கேள்விப்பட
வேண்டும், ஆகவே பாதுகாப்பான மடிக்கணினிகளை
வழங்கும்வரையிலும் அதைப்பற்றி வலியுறுத்த வேண்டிய
கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
32.
Balaji | 9:39 முப இல் செப்ரெம்பர் 17, 2011
Thanks to tamil nadu arasu
33.
winmani | 10:02 முப இல் செப்ரெம்பர் 17, 2011
@ Balaji
மிக்க நன்றி
34.
Selvarajs | 7:39 பிப இல் மார்ச் 2, 2012
sariyana seithi mika nantri
35.
praveen | 12:09 பிப இல் மார்ச் 16, 2012
Thanks to tamil nadu arasu
36.
manickasundaram | 8:47 பிப இல் மே 15, 2012
தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கிய லெனோவோ லப்டோபை சாதாரணமாக போர்மட் செய் முடியாது எப்படி ஒ எஸ் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பதை இந்த விடியோவை பார்த்து பயனடையுங்கள்.
url :http://www.youtube.com/watch?v=DyS6l-bvHfo
37.
VETRI CHELVAN | 5:31 பிப இல் நவம்பர் 4, 2012
unmai ayyaa ungal karuththu mutrilum unmai. migavum sariyaanadhu. aanaal…… maanavargal kettup pogavendum 1.tasmac 2. lap top 3.cinema ippadi palavatril kedanumnu arase virumbuginradhu ! nadakkum aatchi makkalukkaanadhe alla ! therindhe thavaru seiginraargal ! yennamo makkal nalanil akkarai ullavargal nammai aalvadhaaga naam ninaiththuk kondaal naam thaan ayyaa muttaal ?