உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.

பிப்ரவரி 6, 2011 at 4:35 முப 10 பின்னூட்டங்கள்

பதிவின் தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யம் வரலாம் ஆனால்
உண்மைதான் நம் கூகிள் உலகில் இருக்கும் பிரம்மாண்டமான
மீயூசியத்தை எல்லாம் சுற்றிபார்க்க நேரடியாக இப்போதே நம்மை
இலவசமாக அழைத்து செல்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

உள்நாட்டில் இருக்கும் மீயூசியத்திற்கு செல்லக்கூட நேரம்
இல்லை அப்படியே நேரம் கிடைத்தாலும் அங்கு சென்று
கூட்டத்துடன் அதன் அழகை ரசிக்க முடியவில்லை என்ற
வருத்தம் அனைவரிடமும் இருக்கும் இந்த வருத்தத்தை
போக்குவதற்காக கூகிள் முக்கிய மீயூசியத்தை ஆன்லைன் மூலம்
முப்பரிமானத்தில் ( 3D ) சுற்றிகாட்டினால் எப்படி இருக்கும்
என்ற புதிய முயற்சியாக  ஒரு இணையதளத்தை
ஆரம்பித்துள்ளது, இதில் தற்போது உலகின் பிரம்மாண்டமான
மீயூசியத்தை பார்க்க நம்மை இப்போதே அழைத்து செல்கிறது,

இணையதள முகவரி : http://www.googleartproject.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் சுற்றி பார்க்க விரும்பும்
மீயூசியத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும்
திரையில் முப்பரிமானத்தில் மீயூசியத்தை காட்டுவதோடு
மட்டுமல்லாமல் எங்கு செல்லவேண்டும் எந்த படத்தை,
அரிய பொருளை பார்க்க வேண்டும் என்பதை சொடுக்கினால்
போதும் அதன் முகப்பு தோற்றம் முதல் Side view வரை
அனைத்தையும் முப்பரிமானத்திலே நாம் சென்று பார்ப்பது
போல் காட்டுகின்றனர்.வியப்பை மட்டுமல்ல விந்தையையும்
காட்டி மறுபடியும் எந்த்துறையில் தான் கால் பதித்தாலும்
அந்தத்துறையில் தான் வல்லவன் என்பதை நிரூபித்து
இருக்கிறது கூகிள், உள்நாட்டு நம் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும், மீயூசியம் பார்க்க விரும்பும் அனைவரும்
இனி பைசா செலவில்லாமல் உலகில் முக்கிய மீயூசியத்தை
முப்பரிமானத்தில் பார்வை இடலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
மருத்துவம் என்ற உயர்ந்த துறை ”சேவை” என்பதில் இருந்து
விலகி பணத்துக்காக மாறி நம் எழை நெஞ்சில் ரத்தத்தை கசிய
செய்கிறதே என்று மாறும் இந்த அவலம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்திய உலகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார் ?  
2.வந்தே மாதரம் பாடலை தொகுத்தவர் யார் ?  
3.1935 -ஆம் ஆண்டு சட்டப்படி அகற்றப்பட்ட குழு ? 
4.சிவாஜியின் கடற்படை இருந்த இடம் எது ?  
5.இரண்டாம் வட்ட மேஜை மாநாடு நடந்த போது இந்திய
 தலைமை ஆளுனராக இருந்தவர் யார் ? 
6.விஜயநகரப்பேரரசில் திருமணவரியை முற்றிலும் நீக்கியவர் யார்?
7.1965 -ல் இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது
 பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் யார் ?  
8.அக்பர் அவையில் இருந்த இசைக்கலைஞன் யார் ? 
9.சீக்கியர்களின் புனித நூல் எது ? 
10.ரிக்வேத காலத்தில் புழக்கத்தில் இருந்த தங்க நாணயம் எது?
பதில்கள்:
1.ஜே.எஸ்.பாக்கிங்காம், 2.பக்கிம் சர்ந்திர சாட்டர்ஜி,3. இந்திய 
ஆலோசனை குழு,4.கோலபா, 5.இர்வின், 6.கிருஷ்ணதேவராயர், 
7.அயூப்கான், 8.தான்சேன், 9.ஆதிகிரந்தம்,10.நிஜகம்.
இன்று பிப்ரவரி 6 
பெயர் : மோதிலால் நேரு,
மறைந்த தேதி : பிப்ரவரி 6, 1861
நேர்மையான வக்கீலாக பணியாற்றியவர்.
இரண்டுமுறை காங்கிரஸ் தலைவராக
பதவியேற்றுள்ளார். செல்வந்தராக இருந்தாலும்
எளிமையை பின்பற்றினார்.சுதந்திரத்துக்கு முன்பே
மறைந்து விட்ட இவர் இன்னும் பலரது உள்ளங்களில்
வாழ்ந்து வருகிறார். உங்கள் தேசப்பற்றுக்கு நன்றி.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம். எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம்.

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. எஸ்.கே  |  10:06 முப இல் பிப்ரவரி 18, 2011

  சூப்பரா இருக்கு சார்!

  மறுமொழி
  • 2. winmani  |  4:08 பிப இல் பிப்ரவரி 18, 2011

   @ எஸ்.கே
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. Devarajan  |  10:17 முப இல் பிப்ரவரி 18, 2011

  கூகிள் எதுக்கு சார் இப்படி ஆச்சர்யங்ளை கொடுத்துட்டே இருக்காங்க… சூப்பர்… 🙂

  மறுமொழி
  • 4. winmani  |  4:14 பிப இல் பிப்ரவரி 18, 2011

   @ Devarajan
   புதுமையை புகுத்துவதில் தன்னை யாரும் மிஞ்சிவிடக்கூடாது என்பதற்காக கூட இருக்கலாம், வரலாறு முக்கியம் அமைச்சரே…!
   நன்றி

   மறுமொழி
 • 5. ♠புதுவை சிவா♠  |  12:05 முப இல் பிப்ரவரி 19, 2011

  knowledge based site thanks winmani

  மறுமொழி
 • 6. Krishna moorthy  |  8:40 பிப இல் பிப்ரவரி 19, 2011

  மிக அருமையான பதிவு .
  இதனின் முகவரியை எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்
  நன்றி

  என்றென்றும் அன்புடன் ,
  சுகி …

  மறுமொழி
  • 7. winmani  |  4:58 முப இல் பிப்ரவரி 20, 2011

   @ Krishna moorthy
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 8. regeneracja sterownika PSG2  |  4:31 பிப இல் பிப்ரவரி 28, 2011

  This site is really a stroll-through for all the info you wished about this and didn’t know who to ask. Glimpse right here, and also you’ll undoubtedly discover it.

  மறுமொழி
  • 9. winmani  |  5:52 பிப இல் பிப்ரவரி 28, 2011

   @ regeneracja sterownika PSG2
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 10. oprodukcji zwierzęcej  |  2:32 பிப இல் மார்ச் 1, 2011

  Youre so cool! I dont suppose Ive read anything like this before. So good to seek out someone with some authentic ideas on this subject. realy thank you for starting this up. this web site is something that is needed on the net, somebody with a bit originality. useful job for bringing something new to the web!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: