பிறருடைய நூல் (எழுத்து) திருட்டுத்தனமாக (plagiarism) வெளியீடப்பட்டுள்ளதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.
ஏப்ரல் 30, 2011 at 9:14 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஒருவர் எழுதிய புத்தகம் அல்லது அவருடைய இணையதள பதிவின்
எழுத்துக்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை
துல்லியமாக அறியலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நாம் எழுதிய கதை, கவிதை, கட்டுரை போன்றவைகள் எங்கெல்லாம்
நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை எளிதாக
நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://plagiarisma.net
வெளிநாட்டு கல்லூரிகளில் படித்த அனைத்து நண்பர்களுக்கும் plagiarism
பற்றி தெரிந்திருக்கும். கல்லூரியில் சமர்பிக்கபடும் பிராஜெக்ட்
ரிப்போர்ட் முழுமையாக plagiarism பயன்படுத்தி சோதித்து அதன்
பின் எங்கிருந்து யாருடைய தகவல்களை எல்லாம் இவர்கள்
எடுத்துள்ளனர் என்பதை நொடியில் அறிந்து கொள்கின்றனர்.
இதற்காக தனிப்பட்ட அளவில் பல விலைஉயர்ந்த மென்பொருட்கள்
எல்லாம் இருந்தாலும் இணையதளம் மூலம் இலவசமாக நம்
நூல்களும், எழுத்துக்களும் எங்கெல்லாம் அனுமதி இல்லாமல்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பத நொடியில் அறியலாம்.
உதாரணாமாக படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள்
எந்த வார்த்தைகளை சோதிக்க வேண்டுமோ அதை கொடுத்து
Check Duplicate Content என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்
உடன் வரும் திரையில் நம் கட்டுரைகள் எங்கெல்லாம் நம்
அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை
அறியலாம். நம் இணையதள முகவரி கொடுத்தும் நம் பதிவுகள்
எங்கெல்லாம் வெளியீடப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு எழுத்தாளர்கள்,பதிவுல நண்பர்கள்,
ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள
பதிவாக இருக்கும்.
நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல்
வின்மணி சிந்தனை அடுத்தவர் எழுத்தை திருடுபவன் முன்று உலகிலும் மிகக்கேவலமான பிறவி.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பயிறு வகைகள் பயிரிடுவதில் உலகிலேயே இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ? 2.உலகின் மொத்த எள் விளைச்சலில் பாதி எந்த நாட்டில் விளைகிறது ? 3.இந்தியாவில் அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்படும் மாநிலம் எது ? 4.தானிய வகைகளில் ஆசியாவில் நான்காவது இடத்தை எந்த தானியம் பெறுகிறது ? 5.உலகிலேயே பருத்தி அதிகமாக விளையும் நாடு எது ? 6.முதன் முதலில் நெல் சாகுபடி எந்த நாட்டில் ஆரம்பித்தது ? 7.வாழைப்பழம் உற்பத்தியில் எந்த நாடு முதலிடம் பிடிக்கிறது ? 8.பன்னாட்டு வேளாண்மை மேம்பாட்டு நிதியகம் எந்த நாட்டில் உள்ளது ? 9.வாழை எந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் அறிமுகமானது ? 10.இந்தியாவில் அரக்கு உற்பத்தியில் எந்த மாநிலம் முதலிடம் பிடிக்கிறது ? பதில்கள்: 1.இந்தியா, 2.சீனா,3. தமிழ்நாடு,4.கம்பு,5.இந்தியா,6.சீனா, 7.இந்தியா மற்றும் பிரேசில், 8.இத்தாலி, 9.16-ம்,10.பீகார்
இன்று ஏப்ரல் 30
பெயர் : தாதாசாஹெப் பால்கே, பிறந்த தேதி : ஏப்ரல் 30, 1870 தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பிறருடைய நூல் (எழுத்து) திருட்டுத்தனமாக (plagiarism) வெளியீடப்பட்டுள்ளதா என்று எ.
Subscribe to the comments via RSS Feed