ஆன்லைன் மூலம் இலவசமாக புகைப்படங்களை கார்ட்டூன் படங்களாக நொடியில் மாற்றலாம்.
மே 1, 2011 at 1:19 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆன்லைன் மூலம் நாம் விரும்பும் புகைப்படங்களை கார்ட்டூன்
புகைப்படங்களாக நொடியில் இலவசமாக மாற்றலாம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நாம் எடுத்தப்புகைப்படங்களை கார்ட்டூன் படமாக மாற்றினால் நன்றாக
இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு எந்த மென்பொருள் துணையும்
இல்லாமல் சில நொடிகள் மட்டுமே செலவு செய்து நம் புகைப்படங்களை
கார்ட்டூன் புகைப்படமாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.caricaturesoft.com/online-tools/cartoons/
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எந்தபுகைப்படத்தை
கார்ட்டூன் புகைப்படமாக மாற்றவேண்டுமோ அதை Open என்ற
பொத்தானை சொடுக்கி தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும் சில
நொடிகளில் நாம் தேர்ந்தெடுத்தப்புகைப்படம் கார்ட்டூனாக
மாற்றப்பட்டிருக்கும் lens Details என்பதை சொடுக்கி நம் தேவைக்கு
தகுந்தது போல் கார்ட்டூன் புகைப்படத்தை மாற்றலாம். எல்லாம்
சரியாக மாற்றியபின் Save Image என்ற பொத்தானை சொடுக்கி
கார்ட்டூனாக மாற்றிய படத்தை நம் கணினியில் சேமிக்கலாம்.
கண்டிப்பாக புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2
ஆன்லைன்-ல் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்.
நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்
வின்மணி சிந்தனை தன் தாயை மறந்தவனுக்கு வயதான பின் தண்ணீர் கூட கிடைப்பதில்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இரத்தத்தைப் பார்த்து அஞ்சுவதற்கு என்ன பெயர் ? 2.மசூதிகளின் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ? 3.உலகின் நாத்திக நாடு என்று எந்த நாடு அழைக்கப்படுகிறது ? 4.பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது ? 5.பசுமைத்தீவுகள் என அழைக்கப்படுவது எது ? 6.இந்தியாவில் குறைந்த மாவட்டங்களை கொண்ட மாநிலம் எது? 7.ஈரான் நாட்டின் பழமையான பெயர் என்ன ? 8.ஐந்து கடல்களின் நாடு என்று எந்த நாடு அழைக்கப்படுகிறது? 9.தாய்லாந்து என்பதன் பொருள் என்ன ? 10.புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ? பதில்கள்: 1. ஹீமோ போபியா, 2.வங்காளதேசம்,3.அல்பேனியா, 4.இலண்டன்,5.அயர்லாந்து,6.கோவா,7.பாரசீகம், 8.எகிப்து, 9.சுதந்திர பூமி,10.தாய்லாந்து. இன்று மே 1
உலகத் தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. இந்நாளில் அனைத்து உழைப்பாளர்களுக்கும் இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்கள்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
Subscribe to the comments via RSS Feed