நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்.
மே 2, 2011 at 2:01 பிப 5 பின்னூட்டங்கள்
என்றும் மறக்கமுடியாத பழைய வரலாற்று சுவடுகளின்
புகைப்படங்களை நம் கண் முன் கொண்டு வந்து பழைய கால
நிகழ்வுகளை அசைபோட வைக்கிறது ஒரு தளம் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
காலத்தால் என்றும் அழியாத பழைய வரலாற்றுச் சுவடுகளைத் தேடி
எடுத்து ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்திற்கான வரலாற்று
நிகழ்வுகளை நமக்கு புகைப்படமாக காட்டுவதற்காக நிக்கான்
புகைப்படம் நிறுவனம் தன் வலைதளத்தில் தனி வலைப்பக்கத்தை
அமைத்துள்ளது.
இணையதள முகவரி : http://www.nikon.com/about/feelnikon/thisday/main.htm
இத்தளத்திற்கு சென்றால் அன்றைய தினத்தின் வரலாற்று தகவல்கள்
உள்ள ஆண்டை காட்டுகிறது இங்கு இருக்கும் Go என்ற பொத்தானை
சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரை நம்மை அங்கு குறிப்பிட்ட
ஆண்டுக்கே அழைத்து செல்கிறது. அன்றைய தினத்தின் வரலாற்றுப்
புகைப்படங்களை நம் கண் முன் காட்டுகிறது கூடவே அந்த
புகைப்படத்தின் தகவல்களும் இடம் பெற்றுள்ளது. முந்தைய
நாட்களை சொடுக்கி அன்றைய தின சிறப்பு புகைப்படங்களையும்
பார்க்கலாம். புகைப்பட நண்பர்களுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள உதவும் உலக டிஜிட்டல் மின்நூலகம்.
உலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.
ஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.
உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க
வின்மணி சிந்தனை வரலாற்றுச்செய்திகள் வாழ்கையில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை காட்டும் நம் முன்னோர்களின் அனுபவ பாடமாகும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.திருக்குறள் முதன் முதலில் எந்த ஆண்டு அச்சடிக்கப்பட்டது ? 2.பெண்கள் நெல்குத்தும் போது தலைவனை புகழ்ந்து பாடுவது ? 3.பெரிய புராணம் சேக்கிழாரால் எந்த நூற்றாண்டு எழுதப்பட்டது? 4.நெடுந்தொகை என அழைக்கப்படுவது எது ? 5.தொல்காப்பியம் தமிழகத்தை எத்தனை பிரிவுகளாக பிரித்துக்காட்டுகிறது ? 6.புகழ்பெற்ற காதல்காவியம் லைலா மஜ்னு -வின் ஆசிரியர்யார்? 7.உலகின் மிகப்பெரும் காவியம் எது ? 8.திருக்குறளில் எத்தனை சொற்கள் மற்றும் எத்தனை எழுத்துக்கள் உள்ளது ? 9.நாலடியாரில் எத்தனை பாடல்கள் உள்ளது ? 10.ரஷ்ய புரட்சியைப்பற்றி பாடிய முதல் தமிழன் யார் ? பதில்கள்: 1.1838, 2.வள்ளைப்பாட்டு,3.12-ம்,4.அகநாநூறு,5.12,6.நிஜாமி, 7.மகாபாரதம், 8. 14,000 சொற்கள், 42194 எழுத்துக்கள், 9.400 பாடல்கள்,10.பாரதியார்.
இன்று மே 2
பெயர் : லியொனார்டோ டாவின்சி மறைந்த தேதி : மே 2, 1519 ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்..
1.
rajaonline | 6:50 முப இல் ஜூலை 7, 2011
Try to visit VALAISARAM
2.
rajaonlineraja | 12:51 பிப இல் ஜூலை 7, 2011
வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
கண்ணை நம்பாதே
3.
winmani | 2:32 பிப இல் ஜூலை 7, 2011
@ rajaonlineraja
மிக்க நன்றி
4.
Rama Janarthanan | 9:09 பிப இல் ஒக்ரோபர் 13, 2011
திருக்குறளில் எத்தனை சொற்கள் மற்றும் எத்தனை
எழுத்துக்கள் உள்ளது ?
14,000 சொற்கள், 42194 எழுத்துக்கள்,
எப்படி என்று விளக்கமாக சொல்லவும்
5.
winmani | 9:56 முப இல் ஒக்ரோபர் 14, 2011
@ Rama Janarthanan
சொற்கள் = சரியாக சொல்ல முடியாது …சீர் என்றால் ஒருகுறளுக்கு 7 வீதம் 1330*7 =9310
எழுத்துக்களை எண்ணுவது சிக்கலான விடயம் …
(டெக்னிகல் சமாச்சாரம்(இலக்கணம்) இருக்கு