மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை எழுத்துருக்களாக ( Gandhiji Font ) இலவசமாக தறவிரக்கலாம்.
ஏப்ரல் 29, 2011 at 1:37 முப பின்னூட்டமொன்றை இடுக
மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை கொண்டு எழுத்துரு (Font)
உருவாக்கியுள்ளனர் ஆங்கிலம் மற்றும் நேபால் என்ற இரண்டு
மொழியின் Fonts தற்போது தறவிரக்கலாம், குஜராத்தி,மராத்தி,தெலுங்கு,
தமிழ், உட்பட நான்கு மொழிகளிலும் விரைவில் கிடைக்க இருக்கிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
அகிம்சையை உலகிற்கு காட்டி அதற்கு முன் உதாரணமாக வாழ்ந்த
இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை
அப்படியே எழுத்துருக்களாக (Fonts) மாற்றி கொடுத்துள்ளனர் இதை
நம் கணினியில் எளிதாக இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.gandhijifont.com/downloadthefont.htm
இத்தளத்திற்கு சென்று நாம் காந்திஜி எழுதிய மொழியில் எந்த மொழி
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து அதை சொடுக்கி நம் கணினியில்
எளிதாக எழுத்துரு (Fonts) ஆக சேமித்து பயன்படுத்தலாம். காந்திஜி
எழுதிய எழுத்துக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த
எழுத்துருக்கள் அழகாக மட்டுமல்ல சத்தியத்தையும் நேர்மையையும்
கொண்டு நிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது.
உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ விரும்பும் காந்திஜியின்
சீடர்களுக்கு இந்த எழுத்துருக்கள் பயனுள்ளதாக இருக்கும்.
படத்திலுள்ள எழுத்துக்களை ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த எழுத்துகளாக மாற்றலாம்.
எழுதும் எழுத்துக்கு இணையான படம் கொடுக்கும் விநோதமான இணையதளம்
ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.
அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு.
ஆன்லைன் -ல் புகைப்படத்தை ஒரே நிமிடத்தில் அழகான சிறிய துண்டுகளாக பிரிக்கலாம்.
வின்மணி சிந்தனை சத்தியமும் நேர்மையும் ஒரு மனிதனை அனைத்து வழிகளிலும் சோதிக்கும். சோதனையின் வெற்றியும் மிகப்பெரியதாகவே இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.நியூட்ரானை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 2.பேட்டரி கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 3.அணுக்கொள்கையை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 4.ரிவால்வர்-ஐ கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 5.இன்சுலின் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 6.ரத்த ஓட்டத்தை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 7.ரெயில் என்ஜினை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 8.சைக்கிள்-ஐ கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 9.ஆக்ஸிசன்-ஐ கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? 10.டைனமோவை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் யார் ? பதில்கள்: 1.சாட்விக், 2.ஓல்டா,3.ஜான் டால்டன்,4.கோல்ட், 5.எப்.பாண்டர்,6.ஹார்வி,7.ஸ்டீவன்சன், 8.மேக்மில்லன், 9.ஓ.இ.பிரிஸ்ட்லி,10.மைக்கல் பேரடே
இன்று ஏப்ரல் 29
பெயர் : ரவி வர்மா, பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848 நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை. PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: மகாத்மா காந்திஜி எழுதிய எழுத்துக்களை எழுத்துருக்களாக ( Gandhiji Font ) இலவசமாக தறவ.
Subscribe to the comments via RSS Feed