ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்.
ஏப்ரல் 28, 2011 at 1:36 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி
பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவராமால் பலர்
இருக்கின்றனர் இவர்களுக்கு ஆங்கில மொழியை அசத்தலாக
தினமு வீடியோவுடன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பள்ளி, கல்லூரி விடுமுறை காலம் தொடங்கிவிட்டது நம் குழந்தைகளும்
வெளிநாட்டினர் போல் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணம்
அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கும், இவர்கள் மட்டுமல்லாது
தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தொடர்ச்சியாக
ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அவர்களுக்கு
தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது இப்படி ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை
அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://funeasyenglish.com
ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இருக்கிறதே
இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும்
அனைவருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாக
தினமும் வீடியோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது. இந்த
வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தாலே
போதும் சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந்தப்பிழையும்
எந்ததடையும் இல்லாமல் தொடர்ச்சியாக பேசலாம். ஒவ்வொரு
ஆங்கில வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில்
தொடங்கி ஒவ்வொருத் துறை சம்பந்தப்பட்ட வீடியோகோப்புகளை
காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க்கிறது. ஆங்கிலம் கற்றுகொள்ள
விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச விரும்பும்
அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் ஒரு நவீன ஆங்கில வார்த்தையை எளிதாக கற்கலாம்.
ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்
ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்
சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம்.
ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி
வின்மணி சிந்தனை எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள அந்த மொழி பேசுபவர்களிடம் நாம் பழகினால் போதும் எந்த ஒரு மொழியையும் எளிதாக கற்கலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1. 1 மைல் என்பது எத்தனை கி.மீ ? 2. 1 யூனிட் என்பது எத்தனை வாட் ? 3. 1 காரட் என்பது எத்தனை மில்லிகிராம் ? 4. 1 ஒரு டிரில்லியன் என்பது எத்தனை கோடி ? 5. 1 கேலன் என்பது எத்தனை லிட்டர் ? 6. 1 நாள் என்பது எத்தனை நாழிகை ? 7. 1 கிலோகிராம் என்பது எத்தனை கிராம் ? 8. 1 குதிரைத்திறன் என்பது எத்தனை வாட் ? 9. 1 பர்லாங் என்பது எத்தனை மீட்டர் ? 10.1 சவரன் என்பது எத்தனை கிராம் ? பதில்கள்: 1.1.61 கி.மீ, 2.1000 வாட்,3.200 மி.கி,4. லட்சம் கோடி, 5. 4.546 லிட்டர்,6.60 நாழிகை,7.1000 கிராம், 8.746 வாட்கள், 9.201.3 மீட்டர்,10.8 கிராம்
இன்று ஏப்ரல் 28
பெயர் : உ.வே.சாமிநாதையர், பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942 பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்..
Subscribe to the comments via RSS Feed