இணைய நண்பர்களுக்கான வின்மணியின் 500 வது நாள் மற்றும் 500 வது சிறப்பு பதிவு.
ஏப்ரல் 27, 2011 at 1:58 முப 43 பின்னூட்டங்கள்
வின்மணி வலைப்பூ தொடங்கி இன்றோடு 500 வது நாள் மற்றும்
500 பதிவும் கூட, திரும்பி பார்ப்பதற்குள் 499 நாட்கள் ஓடிவிட்டது
தமிழில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப தகவல்களுக்கு உலக
அளவில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருப்பது நமக்கு
பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது, எத்தனையோ
வாழ்த்துக்கள் , எத்தனையோ பாராட்டுக்கள் , எத்தனையோ பிழைகள்
என அனைத்தையும் சுட்டி காட்டி நாம் இந்த வெற்றியை
சுவைத்திருக்கிறோம் என்றால் இதற்கு எல்லாம் வல்ல
இறைவனின் ஆசியும், நம் இணைய நண்பர்களின் அன்பும் தான்
காரணம். உங்கள் அனைவருக்கும் நம் வின்மணியின் சார்பில்
எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையதள பெயர் பதிவு ( Domainname Register), இணையதள
இடவசதி ( Webhosting ) மற்றும் இணையதள வடிவமைப்பு (Webhosting ),
இணையதள பாதுகாப்பு போன்ற அனைத்து தகவல்களையும் சேவையும்
அளிப்பதற்காக தமிழ் மொழியில் ஒரு தளம் வந்துள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
வின்மணியின் ” இணையதளம் உருவாக்க ” என்ற பகுதியின் மூலம்
நமக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலும் சொந்தமாக இணையதளம்
ஆரம்பிக்க எவ்வளவு செலவு ஆகும் ?, எங்கு சென்று இணையதள
பெயர் பதிவு செய்ய வேண்டும் ?, இணையத இடம் மலிவு விலையில்
பலர் கொடுக்கின்றனரே அங்கு சென்று இணையதள இடம்
(Webhosting Space) வாங்கலாமா ? என்று இமெயில் மூலம் வரும்
பலவிதமான கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.goolittle.com
வின்மணியின் சிறந்த சேவைக்கான மற்றும் ஒரு இணையதளம்
தான் இது. இணையதள பெயர் பதிவில் இருந்து இணையதள
இடவசதி,இணையதள வடிவமைப்பு , இணையதள பாதுகாப்பு
போன்ற அனைத்து சேவைகளையும் இத்தளத்தில் இருந்து பெறலாம்.
எங்கோ உலகின் ஒரு ஓரத்தில் இருக்கும் நம் தமிழரின் தொழில்
மற்றும் சேவையை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும்
என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிரடி விலை குறைப்பு,
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று எந்த ஆசை
வார்த்தைகளையும் காட்டவில்லை சிறப்பான வாடிக்கையாளர்
சேவை என்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகிறோம்.
ஏற்கனவே நம் சேவையை பயன்படுத்தியவர்களிடம்
விசாரியுங்கள். தனிநபர் இணையதளம், நிறுவனத்திற்கான
இணையதளம், சமூக சேவைக்கான இணையதளம் என்ற மூன்று
பகுதிகளாக இருக்கிறது இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு
எந்த சேவை தேவையோ அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
சிறிய அளவில் இணையதளம் ஆரம்பிக்க விரும்புபவர்கள்.
வருடத்திற்கு ரூ.3500 செலுத்தி தங்களுக்கென்று சொந்தமாக
இணையதளம் ஆரம்பிக்கலாம்.
வின்மணி சிந்தனை கடின உழைப்புக்கு பின் கிடைக்கும் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சியை மனிதனுக்கு கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எவையெல்லாம் நால்வகை சேனைகள் ? 2.முத்தமிழ் என்றான் என்ன ? 3.ஐவகை நிலங்கள் என்னென்ன ? 4.இரட்டை காப்பியங்கள் என்னென்ன ? 5.நால்வகை பெண்டிர் குணம் என்னென்ன ? 6.முத்தமிழ் காப்பியம் என்று எது அழைக்கப்படுகிறது ? 7.நால்வகை வேதங்கள் என்னென்ன ? 8.திரிகடுகம் என்னென்ன ? 9.நால்வகை புண்ணியம் எது ? 10.திரிபலா என்றால் என்னென்ன ? பதில்கள்: 1.தேர்,யானை,குதிரை,காலாள்,2.இயல், இசை, நாடகம், 3.குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை, 4.சிலப்பதிகாரம், மணிமேகலை,5.அச்சம்,மடம், நாணம், பயிற்பு,6.சிலப்பதிகாரம்,7.ரிக்,யஜூர், சாமம், அதர்வணம் , 8.சுக்கு,மிளகு, திப்பிலி,9.தானம், கல்வி,தவம்,ஒழுக்கம், 10.கடுக்காய், தான்றிக்காய் , நெல்லிக்காய்.
இன்று ஏப்ரல் 27
பெயர் : வலேரி பொல்யாக்கொவ் பிறந்த தேதி : ஏப்ரல் 27, 1942 ஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார். மனித விண்வெளி வரலாற்றில் இவரே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் மீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக 14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில் 14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் காலம் கழித்து சாதனை புரிந்தார். இவரது மொத்த விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
———————————————————
வின்மணியின் 500 வது பதிவுக்கு அலைபேசி மூலமும் இமெயில் மூலமும் வாழ்த்து தெரிவித்த உலகமெங்கும் உள்ள நம் அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இமெயில் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்ற வாழ்த்துச் செய்தியை அப்படியே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
வின்மணி ஆங்கிலத்தில் “வின்” என்றால் வெற்றி!
தமிழில் விண் என்றால் வானம்!
வின்மணி ஒரு வெற்றிகரமான இணையத்தளம்!
இணையத்தில் உலவுவோர் எல்லா விதயங்களையும் உள்வாங்கிக்கொள்ள இயலாது.
இணையம் ஒரு கடல்! அந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது எல்லோருக்கும் எளிதில் வசப்பட்டுவிடுவது இல்லை;இதோ வானம் எனக்கு வசப்படுகிறது! இதோ இணையக்கடலில் மூழ்கி முத்தெடுத்து விட்டேன்; பிடியுங்கள் என்று ஒவ்வொரு நாளும் அமுதசுரபியாய் இணைய நண்பர்களுக்கு தான் மூழ்கி எடுத்த முத்தை வாரிவழங்கி மகிழ்கிறார்,தம்பி நாகமணி. இணையம் தந்த இனிய நட்புகளில் தம்பி நாகமணி கிடைத்தமைக்காக என் இதயம் மகிழ்ச்சிப்பூக்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுச் செய்திகளை, தகவல்களைத் தவறாமல் தந்து பரவசப்படும் தம்பி நாகமணியின் பணி சிறக்க இந்த 500 வதுநாளில் வாயாற,உளமாற வாழ்த்துவதில் உவப்பெய்துகிறேன்.
தொடர்க நும் பணி!
வெல்க
நாகமணியின் “வின்மணி”
மிக்க அன்புடன்,
ஆல்பர்ட்,
விச்கான்சின்,
அமெரிக்கா.
——————————————-
அன்பு திரு நாகமணி (வின்மணி),
தங்களின் வின்மணிப் பதிவுகள் 500 வது நாளை எட்டுவது பெரிதல்ல. பயனுள்ள தகவல்களைத் தங்களின் அனைத்து பதிவுகளிலும் தந்தது தான் உங்களின் சாதனை. இளைஞர்களுக்கு, கற்பவர்களுக்குக் கற்கக் கொடுத்து நீங்களும் கற்றுக் கொள்ளும் முயற்சிக்கு என் மனநிறை வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.தளராமல் தொடருங்கள் உங்கள் பணியை.
நல்ல நலத்துடன் வாழ்க பல்லாண்டு.
மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.
———————————————-
உலகமெங்கும் ஊடுருவிக்கொண்டிருக்கும் வின்மணியின் இணையசேவை தன் ஐநூறாவது பதிவை நெருங்கி குறிப்பிடத்தக்க வலைத்தளம் என்ற பெருமையோடு பல்லாயிரக்கணக்கான மனங்களை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வின்மணிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். வின்மணியின் இலக்கு இன்னும் பல படைப்புகளாலும், சேவைகளாலும் பலகோடி மனங்களை தொட்டு விண்ணையும் தாண்டிச்செல்ல வாழ்த்துகிறேன்.
By, Alwin sam
Life Direction Network
———————————————–
வின்மணி வழியாக பலரின் வாழ்விற்கு வளமையும் பொருளும் சேர்துள்ளிர்கள். மிகவும் பயனுள்ள தகவல்களை இடைவிடாமல் தந்து மக்கள் பாதையை வெளிச்சப்படுதுகிறீர்கள். இமாலயப் பனி செய்யும் தங்களை பணி சிறப்புற அன்புடன் வாழ்த்துகிறேன் . தொடரட்டும் உங்கள் தொய்வற்ற ஈடிணையற்ற இணையப் பணி.
அன்புடன் சுதாகர்
—————————————————————
உங்கள் சேவை எங்களுக்கு தேவை …..மென்மேலும் உங்கள் தளம் இன்னும் சிறப்புடன் பணி புரிய மனமார வாழ்த்துகிறேன் …உங்கள் தச்சை கண்ணன் ..
—————————————————————
500வது நாள் 500வது பதிவை வெளியிடும் அன்பு நண்பர் வின்மணிக்கு தமிழ்க்குறிஞ்சியின் அன்பான வாழ்த்துக்கள். தொடர்ந்து 500 நாட்கள் 500 பதிவுகள் அதுவும் பயனுள்ள தகவல்கள் அடங்கிய தொழில்நுட்பப் பதிவுகள். வின்மணியின் விடாமுயற்சியை பாராட்ட வார்த்தைகளில்லை. வெறும் பதிவுகள் மட்டுமில்லாமல் பொது அறிவுக் கேள்விகள், வின்மணி சிந்தனை, இந்தநாள் பிறந்த அல்லது இறந்த புகழ் பெற்ற மனிதர்கள் பற்றிய தகவல்கள் என்று வெறும் வலைப்பூவாக இல்லாமல் “வின்மணி” ஒரு பொது அறிவுக்களஞ்சியமாகவே இருக்கிறது. அரட்டை, அரசியல், சினிமா என்று ஆயிரக்கணக்கான வலைப்பூக்களுக்கு மத்தியில் குறிஞ்சிப்பூவாய் மலரும் வின்மணியின் இப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
அன்புடன்,
செந்தில்ராஜ்
tamilkurinji.com
——————————————————————-
என் இதையம் கனிந்த நல்வாழ்த்துக்கள் .
என்றும் அன்புடன்
சிவக்குமார் , ஸ்ரீ கம்யூனிகேசன்.
——————————————————–
நிலவும் ஒருநாள் உலவாமல் தூங்கும்
உலகும் சிலநாளந்(த) ஆதவனுக்(கு) ஏங்கும்;ஏன்
விண்ணுக்கும் உண்டாம் விடுமுறை: எங்களின்
வின்மணிக்(கு) இல்லையாம் அது
தினமோர் வழிகாட்டும் ’சில்’நுட்பத் தூதா;
உனக்கு வாழ்த்தெல்லாம் தூசு
என்றும் அன்புடன்
துரை
குழுமம்:’தமிழ்த்தென்றல்’
—————————————————————
தொழில்நுட்ப தகவல்களை அள்ளித்தரும் அட்சய பாத்திரம் விளங்கும் சகோ. வின்மணி அவர்களின் வலைப்பூவில் ஒவ்வொரு பதிவிலும் உடன் வழங்கும் பொது அறிவுத்தகவல்கள் இன்னமும் ஒரு தகவல் சுரங்கம். அவரின் அட்சயப்பாத்திரத்தில் அளப்பரிய தகவல்களை அள்ளிப்பருகுபவர்களில் ஒருவனாக அடியேனும் இருப்பது எனக்கு பெருமையான ஒன்று.
செல்வ.முரளி
Visual Media Technologies
————————————————————-
எனது வலைப்பூவின் வாசகராக, மின்னஞ்சல் மூலம் எனக்கு அறிமுகமானவர்தான் திரு.நாகமணி அவர்கள்.ஆரம்பகாலத்தில் என்னுடைய வலைப் பதிவினை கையாளுவதில் இருந்த பல சிரமங்களை களைந்திட பல ஆலோசனைகளையும், தீர்வினையும் அறியத் தந்தவர். இனிய நண்பர். இவர் தற்போது தனது நுட்ப வலைத் தளமான “வின்மணி” ல், ஐநூறாவது பதிவினை பூர்த்தி செய்திருக்கிறார் என்பது மிகவும் மகிழ்சியான செய்தி. ஏனெனில் தான் சார்ந்த கணினி துறை தொடர்பாக வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் எளிய தமிழில் அனைவரும் புரிந்து பயன் படுத்திடும் வகையில், சுவாரசியமான எழுத்து நடையில் அறியத் தரும் மேலான பணியினை செய்து வருகிறார். அன்னாரின் பணிகள் மேலும் சிறந்து பல நூறு தொழில்நுட்ப பதிவுகளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தரும் வகையில் அவரது பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
—
என்றும் நட்புடன்,
தோழி.
siththarkal.blogspot.com
thamilarjothidam.blogspot.com
thangaththamil.blogspot.com
—————————————————-
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இணைய நண்பர்களுக்கான வின்மணியின் 500 வது நாள் மற்றும் 500 வது சிறப்பு பதிவு..
1.
ganesh | 5:20 முப இல் ஏப்ரல் 30, 2011
you are rocking and doing greeeeeeeeeeeeat job
god bless you
2.
winmani | 12:06 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ ganesh
மிக்க நன்றி
3.
winmani | 12:06 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ ganesh
மிக்க நன்றி.
4.
rathnavel natarajan | 5:51 முப இல் ஏப்ரல் 30, 2011
வாழ்த்துக்கள்.
5.
winmani | 10:08 முப இல் ஏப்ரல் 30, 2011
@ rathnavel natarajan
மிக்க நன்றி
6.
g.varadharajan | 6:23 முப இல் ஏப்ரல் 30, 2011
பல பயனுள்ள தகவலகளை திரட்டித் த்ரும் உங்கள் பணியால் பல நண்பர்கள் பேரும் பயன் பெற்றிருக்க முடியும் என்பதில் ஐயமில்ல. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை நன்றிகள் பல நன்று
புதுக்கோட்டை ஜி வரதராஜன்
7.
winmani | 10:08 முப இல் ஏப்ரல் 30, 2011
@ g.varadharajan
மிக்க நன்றி
8.
Thanigasalam | 7:35 முப இல் ஏப்ரல் 30, 2011
வழ்த்துகள் வின்மணி. 500வது பதிவு அருமையான தகவல்களுடன் அமைந்துள்ளது மிகச் சிறப்பு. உங்கள் தொண்டு மேன்மேலும் தொடர்ந்து பல ஆயிரம் பதிவுகளை நீங்கள் தமிழ்ச்சமுதாயத்திற்கு வழங்கிட இறைவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் நலன்களையும் அருள வேண்டும்.
9.
winmani | 10:32 முப இல் ஏப்ரல் 30, 2011
@ Thanigasalam
மிக்க நன்றி
10.
சுகுமாரன்.சீ.அ, | 7:53 முப இல் ஏப்ரல் 30, 2011
சிறப்பான சேவை போன்ற வின்மணியின் பதிவுகள்.500வது பதிவுக்கு வாழ்த்துக்கள். 5000,50000 இப்படியே முன்னேறிட வாழ்த்துக்கள்.
11.
winmani | 10:33 முப இல் ஏப்ரல் 30, 2011
@ சுகுமாரன்.சீ.அ
மிக்க நன்றி
12.
Devarajan | 9:58 முப இல் ஏப்ரல் 30, 2011
இனிய தமிழில் பயனுள்ள தொழில்நுட்ப பதிவுகளை தரும் வின்மணி அவர்கள் மேலும் வளர வாழ்த்துகள்..!!
என்றும் அன்புடன்
சேலம் தேவா.
13.
winmani | 10:33 முப இல் ஏப்ரல் 30, 2011
@ Devarajan
மிக்க நன்றி
14.
karurkirukkan | 10:16 முப இல் ஏப்ரல் 30, 2011
all the very best
15.
kumaran | 10:24 முப இல் ஏப்ரல் 30, 2011
Greetings Winmanis,
Great effort for your site. I am really impressed your site information…Continue your service….without fail….
16.
winmani | 10:34 முப இல் ஏப்ரல் 30, 2011
@ kumaran
மிக்க நன்றி
17.
shareef | 11:33 முப இல் ஏப்ரல் 30, 2011
உங்கள் முயற்சிக்கு 500 எல்லாம் ஒரு விசயமே இல்லை
விரைவில் 5000 _ _ _ _ வது பதவில் சந்திப்போம்
நன்றி அண்ணா
உங்கள் ஷரீப்
18.
winmani | 12:05 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ shareef
மிக்க நன்றி
19.
winmani | 12:07 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ shareef
மிக்க நன்றி.
20.
shareef | 11:39 முப இல் ஏப்ரல் 30, 2011
இந்திய அளவில் மட்டும் அல்லாமல் உலக அளவில்
த(எ)ங்கள் நிறுவனம் மென் மேலும் சிறக்க எல்லாம்
வல்ல இறைவனை வேண்டுகிறேன்
21.
winmani | 12:08 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ shareef
மிக்க நன்றி..
22.
rifana | 11:45 முப இல் ஏப்ரல் 30, 2011
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்….! தாங்கள் அறிமுகம் செய்த தளங்கள் மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி! தாங்கள் மேலும் பல பதிவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
23.
winmani | 12:10 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ rifana
மிக்க நன்றி
24.
இக்பால் செல்வன் | 12:12 பிப இல் ஏப்ரல் 30, 2011
உங்களின் பதிவுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படித்து வருகின்றேன். அருமை சகோ. சகோதரி அங்கிதா வர்மா தங்களைப் பற்றி கூறியுள்ளார். தங்களின் புதிய இணையதளம் மிளிர்கின்றது. அருமை அருமை .. ஆங்கிலத்திலும் செய்திருக்கலாம்.. வெற்றிகள் பல பெற வாழ்த்துக்கள் சகோதரரே !!!
25.
winmani | 12:15 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ இக்பால் செல்வன்
மிக்க நன்றி நண்பரே.
26.
Speed Master | 1:31 பிப இல் ஏப்ரல் 30, 2011
மேம்மெலும் சிறப்புற வாழ்த்துக்கள்
27.
winmani | 2:32 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ Speed Master
மிக்க நன்றி
28.
லியாக்கத் | 4:11 பிப இல் ஏப்ரல் 30, 2011
என்னுடைய favorites உங்களுடைய blog க்கை save செய்து வைத்து உள்ளேன். உங்களுடைய பதிவினை எப்பொழுதும் படிப்பேன். அடுத்து நான் கேட்கும் சந்தேகங்களை உடனடியாக உங்களுடைய பல பணிகளுக்கு இடையில் பதில் கொடுத்து உள்ளீர்கள்.மிக்க நன்றி. வாழ்த்துக்கள். உங்க நல்ல மனதிற்கு நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவன் இடம் பிராத்திக்கின்றேன்.
அன்புடன்
லியாக்கத்
குவைத்
29.
winmani | 11:39 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ லியாக்கத்
மிக்க நன்றி
30.
Raja | 5:19 பிப இல் ஏப்ரல் 30, 2011
‘கற்றது கையளவு கல்லாதது கடலளவு’ என்பதற்கு இணங்க, நாளொரு வண்ணம் புதிது புதிதான பதிவுகளைத் தந்து, என் போன்ற ஆங்கில அறிவு அற்றவர்களுக்காக, தமிழிலேயே இணைய தளத்தைப் பற்றிய அறிவை வளரச் செய்து, இணைய தளம் ஒன்றும் வெளி நாட்டவனுக்கே சொந்தம் அல்ல உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தை ஊற செய்தமைக்காக, உளமாற வாழ்த்துவதோடு மட்டும் அல்லாமல் இன்னும் பல அறிய, புதிய பதிவுகளைத் தந்து குன்றின் மேல் இருக்கும் விளக்காய் பிரகாசித்து, உலகில் உள்ள தமிழ் மட்டுமேஅறிந்த தமிழர்கள் அனைவரும் பயன் அடைய உமது சேவை தொடரட்டும்.
500 என்ற எண்ணிக்கை போதாது, 5 கோடியோ அல்லது அதற்கு மேலேயோ போகட்டும் உமது பணி.
என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
31.
winmani | 11:40 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ Raja
மிக்க நன்றி
32.
ஸிராஜ் | 6:31 பிப இல் ஏப்ரல் 30, 2011
வாழ்த்துக்கள் நண்பரே.
33.
winmani | 11:41 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ ஸிராஜ்
மிக்க நன்றி
34.
rahman sathik | 9:42 பிப இல் ஏப்ரல் 30, 2011
மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் .
35.
winmani | 11:41 பிப இல் ஏப்ரல் 30, 2011
@ rahman sathik
மிக்க நன்றி
36.
Life Direction Network | 12:29 முப இல் மே 1, 2011
தங்களின் ஐநூறாவது பதிவு நெருங்கி வருவதை முன்கூட்டியே அறிந்தேன் ஆனால் http://www.goolittle.com இப்படி ஒரு தளத்தை தமிழில் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுப்பீர்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை, எனது தளத்தை ஒரு தொழில் நிறுவனமாகவும் மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது, உங்கள் வழிகாட்டுதல்கள் இருக்கும் போது, என்னைப் போன்றவர்களுக்கு இனி இல்லை கவலை.
37.
winmani | 1:29 முப இல் மே 1, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி
38.
gunamanohar | 4:17 முப இல் மே 1, 2011
good congraluations
39.
winmani | 1:34 பிப இல் மே 1, 2011
@ gunamanohar
மிக்க நன்றி
40.
Ahmad izzath | 5:51 முப இல் மே 1, 2011
Congratulations winmani for Win the world
41.
winmani | 1:35 பிப இல் மே 1, 2011
@ Ahmad izzath
மிக்க நன்றி
42.
jana | 1:34 முப இல் மே 2, 2011
வாழ்த்துக்கள், நன்றி
43.
winmani | 2:34 முப இல் மே 2, 2011
@ jana
மிக்க நன்றி