எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி.
ஏப்ரல் 26, 2011 at 5:03 பிப பின்னூட்டமொன்றை இடுக
கணினியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக
அனுப்புவதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் எந்த விளம்பரமும்
எந்த இடைஞ்சலும் இல்லாமல் எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்புவதற்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம்
உடனடியாக செல்லும் இணையதளம் என்றால் அது Rapidshare,
megaupload இன்னும் பல தளங்கள் இருக்கிறது இந்தத்தளங்களில்
இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நீங்கள் காசு
கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும் இல்லை இலவசமாக
என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிரக்கம் ஆகும் இது
மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை
கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி
எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிரக்கவும் நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://ge.tt
இத்தளம் பார்ப்பதற்கு மட்டுமல்ல இதன் சேவையும் எளிதாகவும்
அனைவரும் பயன்படுத்தும் வண்ணமும் இருக்கிறது.இத்தளத்திற்கு
இடது பக்கம் இருக்கும் Read more என்பதை சொடுக்கி நாம் பயனாளர்
பெயர் மற்றும் கடவுச்சொல் என்ற இரண்டையும் கொடுத்து ஒரு புதிய
பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி Select Files என்ற பொத்தானை சொடுக்கி நாம் பதிவேற்றம்
செய்யவேண்டியது தான். பதிவேற்றிய பின் கிடைக்கும் இணையதள
முகவரியை சேமித்து யாருக்கு இந்த கோப்பை அனுப்ப வேண்டுமோ
அவருக்கு இந்த முகவரியை அனுப்பினால் போதும் அவர் இந்த
முகவரியை சொடுக்கி எளிதாக தரவிரக்கலாம். கண்டிப்பாக இணையம்
பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
குடை விளம்பரத்துக்காக ஒரு வித்தியாசமான பிஸினஸ் முயற்சி
எந்த இணையதளத்தையும் இனி விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம்.
பழைய அட்டையில் லேப்டாப் கணினி உருவாக்கும் புதிய அதிசயம்
டிவிட்டரில் இருக்கும் நண்பரின் தூங்கும் நேரத்தை கண்டுபிடிக்கலாம்
வின்மணி சிந்தனை உழைப்பும் நேர்மையும் எந்த ஒரு பொருளையும் விளம்பரம் இல்லாமல் மக்களிடத்தில் கொண்டு செல்லும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டின் தலைநகரம் எது ? 2.ஓரிஸ்ஸாவின் தலைநகரம் எது ? 3.பஞ்சாப் தலைநகரம் எது ? 4.கர்நாடகத்தின் தலைநகரம் எது ? 5.சிக்கிமின் தலைநகரம் எது ? 6.மிஸோராமின் தலைநகரம் எது ? 7.கேரளாவின் தலைநகரம் எது ? 8.ராஜஸ்தானின் தலைநகரம் எது ? 9.ஏனாம் தலைநகரம் எது ? 10.திரிபுராவின் தலைநகரம் எது ? பதில்கள்: 1.சென்னை,2.புவனேஸ்வர்,3.சண்டிகர்,4.பெங்களூர், 5.காங்டோக்,6.அயிஸ்வால், 7.திருவனந்தபுரம், 8.ஜெய்ப்பூர், 9.பாண்டிச்சேரி, 10.அகர்தலா. இன்று ஏப்ரல் 26
பெயர் : இராமானுஜர் மறைந்த தேதி : ஏப்ரல் 26, 1920 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பற்ற பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். உங்களால் பாரததேசத்திற்க்கே பெருமை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி..
Subscribe to the comments via RSS Feed