நமக்கு தேவையான எந்த ஒரு செய்தியோடை (Feed) – ம் pdf கோப்பாக நொடியில் சேமிக்கலாம்.
ஏப்ரல் 25, 2011 at 9:28 பிப பின்னூட்டமொன்றை இடுக
நமக்கு பிடித்த பல இணையதளங்களை நாம் Subscribe செய்து
Feed என்று சொல்லக்கூடிய செய்தியோடையாக நம் கணினி
மூலம் படித்துவருவோம் இனி அப்படி வரும் செய்தியோடையில்
முக்கியமானவற்றை சில நொடியில் Pdf கோப்பாக மாற்றி நம்
கணினியில் சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சில குறிப்பிட்ட இணையதளங்களின் பதிவுகள் பயனுள்ளதாகவும்
முக்கியமானவையாகவும் இருக்கும் அப்படி வரும் பதிவுகளை
ஒவ்வொன்றாக தேடிச்சென்று நாம் pdf கோப்பாக மாற்றி சேமிக்க
வேண்டாம் ஒரே இடத்தில் நாம் விரும்பும் இணையதளத்தின்
Feed Url முகவரியை கொடுத்து நமக்கு விருப்பமான பதிவுகளை
PDf ஆக மாற்றி சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://feed2pdf.appspot.com
இத்தளத்திற்கு சென்று எந்த இணையதளத்தின் முக்கிய பதிவுகளை
பிடிஎப் கோப்பாக மாற்ற வேண்டுமோ அந்த தளத்தின் Feed Url
முகவரியை காப்பி செய்து படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் கொடுத்து அத்தளத்தின் எத்தனை பதிவுகளை காட்ட
வேண்டுமோ அதை அடுத்து இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து
Retrieve என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும்
திரையில் இருந்து எந்தப்பதிவை Pdf ஆக மாற்ற வேண்டுமோ
அதைக் கொடுத்து வலது பக்கத்தின் ஓரத்தில் இருக்கும் PDF
என்பதை சொடுக்கி Pdf கோப்பாக சேமித்து வைக்கலாம்.
தமிழ் இணையதளத்தை சரியான Pdf கோப்பாக மாற்றவில்லை
எனினும் ஆங்கில வலைப்பூவை சரியாக மாற்றிக்கொடுக்கிறது.
கண்டிப்பாக இணையதளம் பயன்படுத்தி பல அறிய தகவல்களை
சேமிக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை அறிவை வளர்க்கும் செய்தியை தினமும் தேடிப் படிக்க வேண்டும் என்றும் நம்மை விட்டு செல்லாதது அறிவு மட்டும் தான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது ? 2.இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் எது ? 3.இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது ? 4.இந்தியாவின் மிகப்பெரிய நகரம் எது ? 5.இந்தியாவின் மிகப்பெரிய மசூதி எது ? 6.இந்தியாவின் மிக உயரமான கோபுரம் எது ? 7.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது ? 8.இந்தியாவின் மிக உயரமான பாலம் எது ? 9.இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது ? 10.இந்தியாவின் மிக உயரமான அனைக்கட்டு எது ? பதில்கள்: 1.உலூர் ஏரி -காஷ்மீர்,2.எல்லோரா கைலாஸ் கோவில், 3.ஜோக்பால்ஸ் 960 அடி,4.புதுடெல்லி,5.ஜூம்மா மசூதி(டெல்லி), 6.குதுப்மினார், 7.இராஜஸ்தான், 8.சம்பல் பாலம், 9.தார் பாலைவனம் ராஜஸ்தான், 10.பக்ரா.
இன்று ஏப்ரல் 25
பெயர் : மார்க்கோனி பிறந்த தேதி : ஏப்ரல் 25, 1874 வானொலியைக் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார்.1890 மார்க்கோனிக்குக் கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம் வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் 'திசைதிரும்பும் மின்கம்பம் [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றியும் பெற்றார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நமக்கு தேவையான எந்த ஒரு செய்தியோடை (Feed) - ம் pdf கோப்பாக நொடியில் சேமிக்கலாம்..
Subscribe to the comments via RSS Feed