உங்கள் தட்டச்சு வேகம் நிமிடத்திற்கு என்ன என்று துல்லியமாக அறியலாம்.
ஏப்ரல் 16, 2011 at 9:16 பிப பின்னூட்டமொன்றை இடுக
ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்ய கற்று கொடுக்க பல தளங்கள்
இருந்தாலும் நாம் தட்டச்சு செய்யும் வேகம் , அதில் எத்தனை தவறு
இருக்கிறது என்று எளிதாக துல்லியமாக சொல்ல ஒரு தளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கணினி பயன்படுத்தும் நண்பர்கள் தாங்கள் கணினியில் எவ்வளவு
வேகத்தில் தட்டச்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் அதை எப்படி
கணக்கிடுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர் இவர்களுக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.keyhero.com/typing-tests-wpm
இந்தத்தளத்திற்கு Start என்ற பொத்தானை சொடுக்கி படம் 1-ல்
காட்டப்பட்டது போல் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளை
தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் நம் வேலை நாம்
தட்டச்சு செய்து முடித்ததும் நிமிடத்திற்கு நாம் தட்டச்சு எத்தனை
வார்த்தைகளின் வேகம் என்ன என்பதையும் எத்தனை பிழை
செய்திருக்கிறோம் என்பதையும் கூடவே Accuracy -ம் காட்டுகிறது.
Data entry பிராஜெக்ட் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களின்
தட்டச்சு வேகத்தை தெரிந்து கொள்ள இந்தததளம் பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை கணினியில் வேலை செய்யும் நண்பர்கள் மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது கிராமத்திற்கு சென்று ஏழைகளுக்கு தன்னால் ஆன சிறிய உதவி செய்வதை விருப்பமாக கொண்டிருக்க வேண்டும். TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.அல்லிகளின் நிலம் என்று எந்த நாடு அழைக்கப்படுகிறது ? 2.பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப்பெரிய தீவு எது ? 3.ஐந்து கடல்களின் நாடு என்று எது அழைக்கப்படுகிறது ? 4.ஐக்கிய அரபு நாடுகளின் மிகப்பெரிய தீவு எது ? 5.தங்க நிலம் என்று எந்த நாடு அழைக்கப்படிகிறது ? 6.தங்க ஆட்டு ரோம நாடு என்று எந்த நாடு அழைக்கப்படுகிறது? 7.தோழமைத்தீவுகள் என அழைக்கப்படும் நாடு எது ? 8.கெய்ரோ என்றால் அரபு மொழியில் என்ன பெயர் ? 9.ஜெருசலேம் நகரம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ? 10.தங்கநுழைவாயில் நகரம் என அழைக்கப்படுவது எது ? பதில்கள்: 1.பிரான்ஸ்,2.லுசோன்,3.எகிப்து,4.அபுதாபி,5.கானா நாடு, 6.ஆஸ்திரேலியா, 7.டோங்காநாடு, 8.வெற்றி, 9.கி.மு.43, 10.சான்பிரான்சிஸ்கோ.
இன்று ஏப்ரல் 16
பெயர் : சார்லி சாப்ளின்
பிறந்த தேதி : ஏப்ரல் 16, 1889
ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற
கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர்,
இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்,
திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
என்று பல பரிணாமங்கள் உண்டு. நகைச்சுவையில்
தனக்கென்று தனி முத்திரை பதித்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உங்கள் தட்டச்சு வேகம் நிமிடத்திற்கு என்ன என்று துல்லியமாக அறியலாம்..
Subscribe to the comments via RSS Feed