1860 -ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
ஏப்ரல் 4, 2011 at 3:46 முப 10 பின்னூட்டங்கள்
என்றும் மனதை விட்டு அகலாத பசுமை நினைவுகளோடு உள்ள
அன்றைய தின வீடியோக்களை நாம் எளிதாக தேட நமக்கு உதவி
செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதில் 1860 முதல் இன்று வரை
உள்ள அனைத்து வீடியோகளும் நொடியில் கிடைக்கிறது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வீடியோ என்றதும் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது யூடியுப்
தான் யூடியுப்-ல் வீடியோக்களை தேட பல வசதிகள் வந்துகொண்டே
இருக்கிறது ஆனாலும் அன்றைய தின பழைய வீடியோக்களை தேட
விரும்புபவர்களின் கடினத்தை குறைத்து எளிதாக அன்று முதல் இன்று
வரை உள்ள அனைத்து வீடியோக்களையும் காட்ட ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://yttm.tv
இத்தளத்தின் பெயர் YTTM அதாவது YT என்பது யூடியுப்- ஐயும்,
TM என்பது Time Machine என்பதையும் கொண்டு இந்தப்பெயர்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்தளத்திற்கு சென்று Search என்ற
கட்டத்திற்குள் எந்த வகையான வீடியோ வேண்டுமோ அதை
தட்டச்சு செய்துவிட்டு அதற்கு அடுத்து இருக்கும் Time Machine Frame-ல்
எந்த ஆண்டில் உள்ள வீடியோ தேட வேண்டுமோ அந்த ஆண்டையும்
தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும்
அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தையும்
தேர்ந்தெடுத்த ஆண்டில் வெளிவந்த வீடியோவும் காட்டப்படும்.
பழமை விரும்பிகளுக்கு மட்டுமல்லாது புதுமை விரும்பிகள் வரை
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பயர்பாக்ஸ் உலாவியில் தொடுதிரையில் புதுமை சிறப்பு வீடியோ.
சமையலறையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபேட் சிறப்பு வீடியோ
ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ
கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம் ஸ்பெஷல் வீடியோ
வின்மணி சிந்தனை காலம் ஒவ்வொருவருக்கும் சரியான நேரத்தை கொடுக்கும் அதை சரியாகப் பயன்படுத்தினால் நாமும் உயரலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தொன்மையான வேதம் ? 2.சாந்தோம் போர் நடைபெற்ற ஆண்டு ? 3.மதுராவிஜயம் என்றநூலை இயற்றியவர் யார் ? 4.லிங்க வழிபாட்டை அறிந்த மக்கள் யார் ? 5.இன்றைய ரூபாவின் தந்தையாக போற்றப்பட்டவர் யார் ? 6.ஆற்காட்டுவீரர் என அழைக்கப்படுபவர் யார் ? 7.ஹர்சாவின் அரண்மனை கவிஞர் யார் ? 8.துசகி பாபரி என்ற நூலை எழுதியவர் யார் ? 9.புத்தரின் தலைக்கு பின்னால் வட்ட வடிவில் காணப்படுவது எந்த கலையை குறிக்கும் ? 10.சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் ? பதில்கள்: 1.சாமவேதம், 2.1746, 3.கங்காதேவி, 4.சிந்து, 5.ஷெர்ஷா, 6.ராபர்ட் கிளைவ்,7.பானா, 8.பாபர்,9.காந்தாரக்கலை, 10.இளங்கோவடிகள்.
இன்று ஏப்ரல் 4பெயர்:மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை, பிறந்த தேதி : ஏப்ரல் 4, 1855 மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலான நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்றபாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ் வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: 1860 -ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனு.
1.
சுகுமாரன்.சீ.அ, | 7:57 முப இல் ஏப்ரல் 6, 2011
மிக பயனுள்ள ,அரிய முயற்சி,தேவைமிக்கது.தந்தமைக்கு நன்றி.
2.
winmani | 10:09 முப இல் ஏப்ரல் 6, 2011
@ சுகுமாரன்.சீ.அ
மிக்க நன்றி
3.
♠புதுவை சிவா♠ | 12:19 பிப இல் ஏப்ரல் 6, 2011
Thanks winmani
4.
winmani | 11:26 பிப இல் ஏப்ரல் 6, 2011
@ புதுவை சிவா
மிக்க நன்றி
5.
ranganathanpillai | 2:17 பிப இல் ஏப்ரல் 6, 2011
NANDRI
6.
winmani | 11:27 பிப இல் ஏப்ரல் 6, 2011
@ ranganathanpillai
நன்றி
7.
Bala | 9:34 பிப இல் ஏப்ரல் 6, 2011
Nice find. I love the time machine site. Thanks for sharing.
8.
winmani | 11:35 பிப இல் ஏப்ரல் 6, 2011
@ Bala
மிக்க நன்றி
9.
Thiyagarajan Veluchamy | 2:24 பிப இல் ஏப்ரல் 13, 2011
மிக்க நன்றி
10.
winmani | 8:24 பிப இல் ஏப்ரல் 13, 2011
@ Thiyagarajan Veluchamy
மிக்க நன்றி