குழந்தைகளின் மறக்க முடியாத நிகழ்சிகளை சேமித்து வைக்க இலவச பிரத்யேக டைரி.
ஏப்ரல் 3, 2011 at 3:16 முப 4 பின்னூட்டங்கள்
நம் வீட்டு சுட்டி குழந்தைகள் சிறு வயதில் செய்யும் அழகான
சேட்டைகளை ஆன்லைன் மூலம் சேமித்து வைக்க இலவச
டைரி அளிக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சிறுவயதில் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் ஆல்பம் வைத்து
சேமித்திருப்போம், ஆனால் இனி நம் குழந்தைகளின் புகைப்படங்களை
மட்டுமல்ல அவர்கள் சிறுவயதில் செய்யும் அத்தனை நிகழ்சிகளையும்
ஆன்லைன் டைரியில் இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://www.keepaboo.com
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு
உருவாக்கிக் கொண்டு நம் குழந்தைகள் சிறுவயதில் கடந்து வந்த
அனைத்து மகிழ்ச்சியான தருனங்களை அழகாக சேமித்து வைக்கலாம்.
புகைப்படம் மட்டுமல்லாமல் எந்த மாதம் எந்த வருடம் எந்த தேதியில்
இவர்கள் செய்த சுட்டித்தனம் என்ன என்பதை எழுத்துப்பூர்வமாகவும்
சேமிக்கலாம். கையில் வைத்திருக்கும் டைரி கூட ஒருனால் பழசாகி
போகலாம் ஆனால் ஆன்லைன் மூலம் சேமித்து வைத்திருப்பதால்
கால நிலைகள் கடந்து நம் குழந்தைகள் கடந்து வந்த பாதை சேமிக்கப்
பட்டிருக்கும். புதுமையை விரும்பும் அனைத்துப்பெற்றோர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் கேள்விக்கும் பதில் ஒரே இடத்தில்
பொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
வின்மணி சிந்தனை பெரியோரை நாம் மதித்தால் நம் குழந்தைகளும் அவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இரண்டாம் தரைப்போர் எந்த ஆண்டு நடைபெற்றது ? 2.போர் முறையைப்பற்றி கூறும் வேதத்தின் பெயர் என்ன ? 3.நான்காவது புத்த மாநாடு யாருடைய காலத்தில் கூட்டப்பட்டது? 4.தீன் இலக்கியத்தை தோற்றுவித்தவர் யார் ? 5.மகேந்திரன் , சங்கமித்திரன் ஆகியோரின் தாயார் பெயர் என்ன? 6.இரண்டாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ? 7.சந்திரகுப்த மெளரியர் கல்வி பயில எங்கு அனுப்பப்பட்டார் ? 8.கபிரை எடுத்து வளர்த்த முகம்மதிய நெசவாளி யார் ? 9.முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது ? 10.சீக்கியர்களின் பொதுச்சமையல் முறைக்கு பெயர் என்ன ? பதில்கள்: 1.1192, 2.தனுர் வேதம், 3.கனிஷ்கர், 4.அக்பர், 5.தேவி,6.1556,7.தக்கசீலம், 8.நிரு,9.1526, 10.லங்கார்.
இன்று ஏப்ரல் 3பெயர் : மார்லன் பிராண்டோ , பிறந்த தேதி : ஏப்ரல் 3, 1924 மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர். த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில் நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றவர். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் காலமானார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: குழந்தைகளின் மறக்க முடியாத நிகழ்சிகளை சேமித்து வைக்க இலவச பிரத்யேக டைரி..
1.
Rajarajeswari | 11:41 முப இல் ஏப்ரல் 5, 2011
மிக உபயோகமான தகவல்கள்.நன்றி
2.
winmani | 1:56 பிப இல் ஏப்ரல் 5, 2011
@ Rajarajeswari
மிக்க நன்றி
3.
T.Narayanan | 12:35 பிப இல் ஏப்ரல் 5, 2011
Dear Sir,
Thank you for giving us valuable information’s day by day. Really you are doing wonderful job to the society. God bless your family.
Anbudan,
T.Narayanan
4.
winmani | 10:44 பிப இல் ஏப்ரல் 5, 2011
@ T.Narayanan
மிக்க நன்றி