உலகஅளவில் அனைத்து வகையான சட்டப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் பயனுள்ள தளம்.
ஏப்ரல் 5, 2011 at 3:02 முப 4 பின்னூட்டங்கள்
குற்றம் என்றால் என்ன , எவையெல்லாம் குற்றம் இதற்கான தண்டனை
என்ன ? செய்யாத குற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி ? உள்ளூரில்
என்றால் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளாம் ஆனால் உலக
அளவில் எவையெல்லாம் சட்டப்படி குற்றம் அதற்கான தண்டனை
உள்ளிட்ட அனைத்து வகையான சட்டப்பபிரச்சினைகளுக்கும் உதவி
செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வெளிநாட்டில் எதெல்லாம் குற்றம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும்
நம் அனைவருக்கும் ஒவ்வொரு குற்றத்தைப் பற்றிய அனைத்து
விபரங்களையும் இதற்கு உண்டான தண்டனை என்பதைப்பற்றிய
அனைத்து தகவல்களையும் நமக்கு கூற ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://topics.law.cornell.edu/wex
இத்தளத்திற்கு சென்று சட்டத்தைப்பற்றி ஒரு விரிவான தகவல்களை
ஒரு டிக்ஸ்னரியில் படிப்பது போல் அனைத்து தகவல்களையும்
தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றிற்கும் விரிவான விளக்கங்களை
அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இத்தளம்
உருவாக்கப்பட்டுள்ளது. நாம் தேடும் குற்றத்திற்கான பதிலை பிரபலமான
வக்கீல்களிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக சட்டத்
துறையில் இருப்பவர்களுக்கும் சட்டம் படிக்க விரும்புபவர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
உலகம் முழுவதும் நம் இணையதளம் சரியாகத் தெரிகிறதா என்று சரி பார்க்கலாம்
உலக அளவில் நீச்சல் வீரர்களை இணைக்கும் புதிய இணையதளம்
வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்
உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க
உங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய
வின்மணி சிந்தனை தன்மானம் உள்ள மனிதனை எந்தப்பொருள் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.1966 -ல் இந்தியாவில் எந்த மாநிலம் பிரிக்கப்பட்டது ? 2.1919-ல் இந்தியாவில் எத்தகைய ஆட்சி முறை புகுத்தப்பட்டது? 3.ஹரியானா மாநிலம் எப்போது பிரிக்கப்பட்டது ? 4.இந்தியாவில் உயர்நீதிபதிகள் யாரால் நியமிக்கப்படுகின்றனர் ? 5.கூட்டாட்சியின் பண்பு என்ன ? 6.முதல் உலகப்போர் உடன்படிக்கையின் பெயர் என்ன ? 7.அரசியலமைப்பின் உயிர் நாடி என்று எதை கூறுகின்றனர் ? 8.ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டதால் நமக்கு கிடைத்த நன்கொடை முறை எது ? 9.ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு எது ? 10.இந்திய தண்டனைச்சட்டம் சட்டமாக்கப்பட்டது ? பதில்கள்: 1.பஞ்சாப், 2.இரட்டை, 3.1985, 4.குடியரசுத்தலைவர், 5.சம பிரதிநிதித்துவம்,6.வெர்சேஸ்லஸ் உடன்படிக்கை, 7.பரிகாரம் பெறும் உரிமையை, 8.சட்ட ஆட்சி முறை, 9.1950, 10.1864.
இன்று ஏப்ரல் 5பெயர் : க. கைலாசபதி , பிறந்த தேதி : ஏப்ரல் 5, 1933 இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகஅளவில் அனைத்து வகையான சட்டப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் பயனு.
1.
Rathnavel Natarajan | 6:19 முப இல் ஏப்ரல் 7, 2011
நல்ல பதிவு.
2.
winmani | 5:08 பிப இல் ஏப்ரல் 7, 2011
@ Rathnavel Natarajan
மிக்க நன்றி
3.
♠புதுவை சிவா♠ | 11:14 முப இல் ஏப்ரல் 7, 2011
I learn more today
Thanks winmani
4.
winmani | 5:08 பிப இல் ஏப்ரல் 7, 2011
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி