குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்களை தடுக்க புதிய வழி

ஜூன் 30, 2011 at 12:38 பிப 3 பின்னூட்டங்கள்

கூகிள் குரோம் உலாவியில் பிளாஷ் விளம்பரங்கள் சில நேரங்களில் நமக்கு சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும் இது போன்ற பிளாஷ் விளம்பரங்களை கட்டுபடுத்த குரோம்-ல் புதிதாக வந்திருக்கும் நீட்சி உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

மிகப்பெரிய இணையதளத்திற்கு சென்றால் கூட நம்மை விடாமல் தொடரும் ஒன்று தான் பிளாஷ் விளம்பரங்கள், எதற்காக பிளாஷ் விளம்பரங்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றால் விரும்பும் வகையில் அனிமேசன் உருவாக்கி அதை சிறிய அளவிலான கோப்பாக மாற்றி விளம்பரதாரர்கள் மக்களை ஈர்க்கின்றனர் பல நேரங்களில் ஒரு சில தளங்களில் தேவையில்லாத பிளாஷ்  விளம்பரங்கள் நமக்கு வெறுப்பை உண்டு பண்ணுகிறது , இனி இது போன்ற பிளாஷ் தொல்லைகளை நீக்குவதற்காக குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது.

முகவரி : https://chrome.google.com/webstore/detail/gofhjkjmkpinhpoiabjplobcaignabnl?hl=en

குரோம் உலாவியில் மேலே கொடுத்திருக்கும் தளத்திற்கு சென்று Install என்ற பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை  நிறுவிக்கொள்ளவும் அடுத்து  படம் 1-ல் காட்டியபடி Flash ஐகானை சொடுக்கி  Block Flash on this Site என்பதை சொடுக்கி
பிளாஷ் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் பார்க்கலாம். Option என்பதை சொடுக்கி ஏற்கனவே நாம் பிளாஷ் கோப்புகள் பார்க்க வேண்டாம் என்று Block செய்த தளங்களை நமக்கு வேண்டும் போது Unblock செய்யும் ஆப்சனும் இருக்கிறது. பிளாஷ் விளம்பரங்களின் தொந்தரவை நீக்க விரும்பும் அனைவருக்கும் இணையதளத்தை வேகமாக பார்க்க நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி.

குடை விளம்பரத்துக்காக ஒரு வித்தியாசமான பிஸினஸ் முயற்சி

எந்த இணையதளத்தையும் இனி விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம்.

மேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற ஒரு மென்பொருள்.

 
வின்மணி இன்றைய சிந்தனை
பணத்துக்காக எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் அடிமையாகக்
கூடாது , மனித படைப்பில் அனைவரும் சமமே.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மருத நிலக்கடவுளின் பெயர் ? 
2.தமிழின் முதல் அகராதியை தொகுத்தவர் யார் ? 
3.தேம்பாவனியை இயற்றியவர் யார் ? 
4.ராணி மங்கம்மாள் கணவர் பெயர் என்ன ? 
5.தஞ்சை பெரிய கோவிலைக்கட்டியவர் யார் ? 
6.அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ள இடம் ? 
7.தமிழகம் ஆங்கிலேயர் வசமான ஆண்டு ? 
8.ஆலயங்களின் பணிபுரிந்து வந்த பெண்களின் பெயர் என்ன ?
9.பல்லவ அரசின் மிகப்பெரிய நிர்வாகப்பிரிவு ? 
10.காவேரி டெல்டா மொத்த பாசனப் பரப்பு ? 
பதில்கள்
1.இந்திரன், 2.வீரமாமுனிவர்,3.வீரமாமுனிவர்,
4.சொக்கநாத நாயக்கர்,5.முதலாம் இராஜராஜன்,6.சிதம்பரம்,
7.1801,8.தேவரடியார்கள்,9.மண்டலம்,10.5 இலட்சம் ஹெக்டர்.
 
இன்று ஜூன் 30  

பெயர் : தாதாபாய் நௌரோஜி , 
மறைந்த தேதி : ஜூன் 30, 1917
இந்தியாவின் அரசியல் தலைவர்களில்
ஒருவராகத் திகழ்ந்தவர்.ஐக்கிய இராச்சியத்தின்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.இவரது
பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின்
வறுமையும் என்கிற நூல் பிரித்தானிய அரசின்
கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை
உலகிற்கு உணர்த்தியது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மெக்கானிக் மற்றும் சிவில் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.

3 பின்னூட்டங்கள் Add your own

 • 1. MYLRAJ  |  12:52 பிப இல் ஜூன் 30, 2011

  very good information.. thanks.

  மறுமொழி
 • 2. puduvaisiva  |  1:20 பிப இல் ஜூலை 4, 2011

  yes I want this

  thanks winmani ….

  and anything like this in Firefox ??

  மறுமொழி
  • 3. winmani  |  9:42 பிப இல் ஜூலை 4, 2011

   @ puduvaisiva
   இருக்கிறது ஆனால் முழுமையாக இல்லை , விரைவில் அதையும் தெரியப்படுத்துகிறோம்.
   மிக்க நன்றி.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: