உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 29, 2011 at 12:49 பிப 2 பின்னூட்டங்கள்
சில வகை தாவரங்களின் பெயர் மட்டும் நமக்கு தெரியும் ஆனால் இந்த தாவரங்கள் எப்படி இருக்கும் என்று கூட நமக்கு தெரியாது , இப்படி நமக்கு தெரியாத பல தாவரங்களின் தகவல்கள் மற்றும் படங்கள் அதன் குண நலன்கள் எனஅனைத்தையும் பட்டியலிட்டு காட்ட ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் தாவரங்கள் என்று கூறினால் அது மிகையாகாது அந்த அளவிற்கு பல அரிய மூலிகைகள் இன்றும் மனிதரின் பல நோய்களை குணப்படுத்தி வருகிறது. இப்படி நமக்கு தெரியாத தாவரங்களை படத்துடன் விபரமாக தகவல்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.theplantlist.org
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Search என்ற கட்டத்திற்குள் எந்த தாவரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய தாவரத்தை பற்றிய முழுவிபரமும் நமக்கு கிடைக்கும், இந்த தாவரத்திற்கு வேறு என்ன பெயர்கள் எல்லாம் இருக்கிறது , எந்த நாட்டில் இந்த தாவரம் அதிகமாக காணப்படுகிறது, இதன் அறிவியல் பெயர்கள் மற்றும் இந்த தாவரத்தினால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் கொடுக்கிறது. பல இலட்சம் தாவரங்களின் தகவல்கள் இத்தளத்தில் உள்ளது, இனி நாம் எந்த தாவரத்தையும் விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கை மருத்துவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும்.
நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.
மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.
பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.
மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பிராணிகள் பற்றி சொல்லும் அரிய தளம்.
வின்மணி இன்றைய சிந்தனை மனிதனுக்கு வரும் நோய்க்கு தேவையான மூலிகைகளை அருகிலே இறைவன் கொடுத்திருப்பான் அதைக் கண்டுபிடிப்பது சற்று தான் சிரமம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் பெறப்படும் மின் உற்பத்தி ? 2.தந்தை பெரியார் பிறந்த ஊர் எது ? 3.ராமசாமிக்கு பெரியார் பட்டம் கொடுத்தவர் யார் ? 4.ஜிப்சம் அதிக அளவு கிடைக்கும் மாவட்டம் எது ? 5.ரமண மகரிஷி ஆசிரமம் உள்ள இடம் எது ? 6.குண்டலகேசி என்ற நூலின் ஆசிரியர் யார் ? 7.ரேபிஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கப்படும் இடம் எது ? 8.கர்ம வீரர் என்று அழைக்கப்படுபவர் யார் ? 9.சட்டப்பேரவையில் தமிழ்நாடு என பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவந்த ஆண்டு ? 10.தமிழ்நாட்டின் சராசரி மழைபொழிவு ? பதில்கள் 1.3400 மெகாவாட், 2.ஈரோடு,3.தர்மாம்பாள்,4.பெரம்பலூர், 5.திருவண்ணாமலை,6.நாதகுத்தனார், 7.குன்னூர், 8.காமராசர், 9.1967,10.650 மில்லிமீட்டர்.
இன்று ஜூன் 29
பெயர் : வ. ஐ. சுப்பிரமணியம் , மறைந்த தேதி : ஜூன் 29, 2009 மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களும் படங்களுடன் விரிவாக தெரிந்து.
1.
puduvaisiva | 12:51 பிப இல் ஜூலை 4, 2011
Thanks winmani
2.
winmani | 9:41 பிப இல் ஜூலை 4, 2011
@ puduvaisiva
மிக்க நன்றி