இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.
ஏப்ரல் 1, 2011 at 4:06 முப பின்னூட்டமொன்றை இடுக
விளையாட்டின் மூலம் இசையின் அடிப்படையை கூறலாம் ( MUSIC
TRAINING GAMES ) இசையில் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களின்
அடிப்படையை, அழகான சப்தம் காதில் கேட்டும் போது எப்படி இதன்
முழுமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும்
புரியும் வண்ணம் எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
இயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் விலை மதிப்பில்லாத ஒன்று
தான் இசை, இந்த இசையின் அடிப்படையை சிறிய அளவிளான
விளையாட்டின் மூலம் சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://trainer.thetamusic.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் Start Training என்ற பொத்தானை சொடுக்கி
அடுத்து வரும் திரையில் Melody, Harmony, Rhythm , Sound போன்ற
வகைகளில் நமக்கு எந்த வகையான இசையைப்பற்றி அறிந்து கொள்ள
வேண்டுமோ அதற்கான விளையாட்டை தேர்ந்தெடுத்து Play என்ற
பொத்தானை சொடுக்கி விளையாடலாம். நாம் தேர்ந்தெடுத்த இசையின்
படி நாம் விளையாடும் விளையாட்டு இருக்கும், ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வகைகளில் வித்தியாசமான விளையாட்டாக இசையுடன்
அமைக்கப்ப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக இசையை ரசிக்கும் நம்
அனைவருக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
விளையாட்டு செய்திகளை உங்கள் பிளாக்-ல் தெரிய வைப்பது எப்படி
சோனி அறிமுகபடுத்த இருக்கும் அடுத்த தலைமுறைக்கான விளையாட்டு கருவி
நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.
ஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்.
வின்மணி சிந்தனை ஒன்றல்ல இரண்டல்ல பல சோதனைகளை தாண்டினால் தான் வெற்றி நம் பக்கம் இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சண்டிகர் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 2.திரிபுரா மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 3.கோவா மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 4.மிசோரம் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 5.குஜராத் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 6.டையுடாமன் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 7.ஒரிஸ்ஸா மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 8.ஹரியானா மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 9.நாகலாந்து மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 10.கேரள மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? பதில்கள்: 1.இந்தி , பஞ்சாபி,2. திரிபுரி,அசாமி,வங்காளி,மணிப்புரி, 3.மராத்தி, கொங்கனி, 4.மிஜோ,ஆதிவாசி,5.குஜராத்தி, 6.மராத்தி,குஜராத்தி,7.ஒரியா,ஆதிவாசி, 8.இந்தி,9.அசாமி, ஆங்கிலம்,10.மலையாளம்.
இன்று ஏப்ரல் 1பெயர் : தி.வே.கோபாலையர் , மறைந்த தேதி : ஏப்ரல் 1, 2007 பதிப்பாசிரியராக, உரையாசிரியராக, சொற்பொழிவாளராக, பேராசிரியராக மிளிர்ந்த தமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப் பட்டவர்.தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்..
Subscribe to the comments via RSS Feed