நம் வலைப்பக்கத்தை அழகான பிடிஎப் கோப்பாக மாற்றி பிரிண்ட் செய்யலாம்.

ஜூன் 7, 2011 at 11:43 பிப பின்னூட்டமொன்றை இடுக

வலைப்பக்கத்தை பிரிண்ட் செய்வதற்கு பல வசதிகள் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் அவைகளின் Alignment பிரிண்ட் செய்வதற்கு சரியாக வருவதில்லை கூடவே PDF கோப்பாக மாற்றினாலும் அவற்றில் எழுத்துக்கள் முறையாகவும் சரியான இடத்தில் தெரியவில்லை என்ற குறையை போக்குவதற்காக நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வரலாறு முக்கியம் என்று எண்ணும் நமக்கு நம்முடைய பதிவுகள் அல்லது நமக்கு பிடித்தமான நண்பர்களின் பதிவுகளை PDF கோப்பாக மாற்றி சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் இதற்காக நாம் பல தளங்களை தேடிச்சென்றிருப்போம் ஆனால் பல தளங்கள் தமிழ் தளங்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் லட்டை பிச்சிப்போட்டது போல் எழுத்துக்களை காண்பிக்கும் ஆனால் இந்ததளம் ஒரு சில இடங்களைத் தவிர அதிகபட்சம் நன்றாகவே இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.sciweavers.org/free-online-html-to-pdf

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி URL என்று கொடுத்திருக்கும் கட்டத்திற்குள் நம் வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்க வேண்டும் அடுத்ததாக Option என்பதில் எந்த வகையான பேப்பர் நாம் பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்தப்போகிறோம் என்பதையும் பக்கம் வண்ணக்கலரில் வேண்டுமா அல்லது Grayscale என்று சொல்லக்கூடிய கறுப்பு வெள்ளையாக இருந்தால் போதுமா என்பதையும் படங்கள் வேண்டாம் என்றால் No Image என்பதையும் Background படம் வேண்டாம் என்றால் No Background என்பதையும் தேர்ந்தெடுத்து
Convert என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு Low Quality -ல் Preview  காட்டப்படும். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Download PDF என்பதை சொடுக்கி பிடிஎப் கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம் பிரிண்ட் செய்ய விரும்புபவர்கள் PDF கோப்பில் இருந்து Print செய்து கொள்ளலாம். வரலாறு முக்கியம் என சொல்லும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆங்கில வார்த்தைகளை ஒழுங்குபடுத்த வலைப்பூவுடன் வரும் கருவி

நம் வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பவர்களை அவர்கள் நாட்டு கொடியுடன் காட்டலாம்.

உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ

நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்

 
வின்மணி சிந்தனை
நல்லவர்களை தான் இறைவன் முழுமையாக சோதிப்பான்
சோதனையின் முடிவில் அவர் பெருமை உலகுக்குத்
தெரிய சந்தர்ப்பமும் கொடுப்பான்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மாநில அமைச்சரவை குழுவின் தலைவர் யார் ?  
2.குடியரசுத்தலைவர் ஆட்சி ஏற்படும்போது மாநிலத்தை நேரடியாக
  நிர்வகிப்பவர் ?
3.பல்கலைக் களங்களின் துணை வேந்தரை நியமிப்பவர் யார் ?
4.மாவட்ட நீதிபதிகளை நியமிக்கின்றவர் யார் ?
5.தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் உள்ள அவைகளின் 
 எண்ணிக்கை எத்தனை ?
6.அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவரை
  நிர்ணயிப்பவர் ?
7.முதலமைச்சரை நியமிப்பவர் யார் ?
8.சட்டப்பேரவை தலைவர் பதிவிக்காலம் காலியாக உள்ளபோது
 அவரது பணிகளை செய்பவர் ? 
9.அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசின் நிர்வாக
  அதிகாரங்கள் அனைத்தும் பெற்றுள்ளவர் யார் ? 
10.தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ?
பதில்கள்:
1.முதலமைச்சர்,2.ஆளுநர்,3.ஆளுநர்,4.முதலமைச்சர்,5.1,
6.ஆளுநர்,7.ஆளுநர்,8.துணைத்தலைவர்,9.முதலமைச்சர்,
10.234.
 
இன்று ஜுன் 7

பெயர் : மகேஷ் பூபதி , பிறந்த தேதி : ஜூன் 7 , 1974
இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை
டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர்
சென்னையில் பிறந்தவர்.1995ம் ஆண்டிலிருந்து
தொழில்முறையில் ஆடி வருகிறார். தற்போது
இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த
இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் எல்லா வகையான வீடியோ கோப்புகளையும் ஆடியோவாக மாற்றலாம். பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...