நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்
ஏப்ரல் 22, 2010 at 6:05 பிப 19 பின்னூட்டங்கள்
தினமும் பல இலட்சம் இணையதளம் வந்து கொண்டுதான் இருக்கிறது
இதில் நமக்கு பிடித்த இணையதளங்களை ஆன்லைன் மூலம் எளிதாக
எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
நண்பர் புதுவை சிவா ஆன்லைன் மூலம் இணையதளங்களை சேமிக்க
ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டிருந்தார் தேவையான கேள்வியை
சரியான நேரத்தில் கேட்டிருக்கிறார் நன்றி . நாம் பார்க்கும் பல இணைய
தளங்களில் சில இணையதளங்களை நம் கணினியில் சேமித்து
வைப்பதை விட ஆன்லைன் மூலம் சேமித்து வைத்தால் நாம் எங்கு
சென்றாலும் இந்த இணையதளங்களுக்கு எளிதாக செல்லலாம் நமக்கு
உதவுவதற்க்காக ஒரு இணையதளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.transferr.com

படம் 2

படம் 3
இந்த இணையதளத்திற்க்கு சென்று Register என்பதை அழுத்தி படம் 1-ல்
காட்டியபடி ஒரே நிமிடத்தில் உங்கள் கணக்கை உருவாக்கி
கொள்ளலாம். உங்கள் கணக்கை உருவாக்கி முடித்ததும் உங்கள்
பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே
செல்லவும். அடுத்து 1 முதல் 15 வரை கட்டங்கள் கொடுக்கப்
பட்டிருக்கும் இதில் உங்களுக்கு பிடித்த எண்ணின் மேல் வைத்து
சொடுக்கி படம் 2 -ல் காட்டியபடி இனையதளத்துக்கான
தலைப்பையும் முகவரியையும் கொடுத்து சேமித்துக்கொள்ளவும்.
இப்படி உங்களுக்கு பிடித்த இணையதளங்களை பிடித்த எண்ணில்
சேமித்துக் கொள்ளலாம். படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது இனி நாம்
எங்கு சென்றாலும் இந்த இணையதளத்தில் நம் கணக்கை திறந்து
நாம் சேமித்து வைத்த இணையதளங்களுக்குள் எளிதாக செல்லலாம்.
கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை அதிக கணினி அறிவு உள்ளவன் பணிவாக இருப்பான் ஆனால் அரை குறை படித்தவன் சும்மா இருக்காமல் படம் போட்டுக் கொண்டே காலத்தை நகர்த்துவான் என்றாவது ஒரு நாள் உண்மை வெளிச்சத்தில் வரும். TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சென்னை வானொலியில் முதலில் ஒலிபரப்பான பாடல் எது? 2.புக்கர் பரிசு எதற்க்காக வழங்கப்படுகிறது ? 3.இராமாயணத்தை வடமொழியில் இயற்றியவர் யார் ? 4.கீதாஞ்சலியின் ஆசிரியர் யார் ? 5.புரோட்டீன்களில் காணப்படும் தனிமம் எது ? 6.காஸ்பியன் கடல் எந்த நாட்டில் உள்ளது ? 7.உலகமக்கள் நல்வாழ்வு அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது? 8.மழை நீரின் வேகம் என்ன ? 9.பாலில் உள்ளதைவிட அதிகமாக கால்சியம் உள்ள காய்கறி எது? 10.தமிழக அரசின் சின்னம் எது ? பதில்கள்: 1.திருவடி சரணம்,2.இலக்கிய சேவைக்கு, 3.வால்மீகி, 4.இரவீந்தரநாத் தாகூர், 5.நைட்ரஜன்,6.ஈரான்,7.ஜெனிவா, 8.மணிக்கு 7 மைல், 9. வெங்காயம், 10.கோபுரம் இன்று ஏப்ரல் 22பெயர் : இம்மானுவேல் கண்ட் பிறந்த தேதி : ஏப்ரல் 22, 1724 ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர். இவர் கிழக்குப் பிரஷ்யாவின், கோனிக்ஸ்பர்க் (இன்றைய ரஷ்யாவிலுள்ள கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். நவீன ஐரோப்பாவின், செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். இவரது முதலாவது தத்துவ நூல் (Thoughts on the True Estimation of Living Forces) 1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்.
1.
abbu | 7:02 பிப இல் ஏப்ரல் 22, 2010
This is useful, but still i feel google bookmark is best. Instead of remainding one more user name and pwd we can use online google bookmark.
Just a suggesion!!!
2.
winmani | 7:08 பிப இல் ஏப்ரல் 22, 2010
நண்பருக்கு ,
கூகுள் கணக்கை வெளியிடங்களில் நாம் இண்டெர்நெட்
பயன்பயன்படுத்தும் போது கீ லாக்கர் போன்ற மென்பொருள் கொண்டு திருடி விடுகின்றனர் அதனால்
தான் கூகுள் புக்மார்க் சொல்லவில்லை. கூடவே இந்த
தளத்தில் நாம் நமக்கு பிடித்த எந்த இமெயில் முகவரியையும் நமக்கு பிடித்த கடவுச்சொல்லையும்
பயன்படுத்தலாம். ( இமெயிலுக்கு சரியான கடவுச்சொல்லாக இருக்க வேண்டிய அவசியமில்லை).
உங்கள் கருத்துக்களை சொல்ல முழு உரிமை உண்டு.
மிக்க நன்றி.
3.
LVISS | 2:55 முப இல் ஏப்ரல் 23, 2010
THERE IS BOOK MARK/FAVOURITES IN EVERY BROWSER. THEN YOU HAVE SPEED DIAL IN OPERA AND THUMBNAILS IN CHROME TO GO DIRECTLY TO GO YOUR FAV WEBSITES.
4.
winmani | 4:33 முப இல் ஏப்ரல் 23, 2010
@ LVISS நன்பருக்கு ,
எங்கு சென்றாலும் எந்த கணினியை நாம் பயன்படுத்தினாலும் எந்த இணைய உலாவியை பயன்படுத்தினாலும் ஆன்லைன் மூலம் எளிதாக புக்மார்க் எடுத்து சேமித்துக்கொள்ளலாம் அல்லவா ? , இதே தான் ஒபேராவிலும் , கூகுள் குரோமிலும் இருக்கிறது ஆனால் ஒரே கணினியில் மட்டும் தான் பயன்படுத்தமுடியும் அதனால் தான்.
நன்றி நண்பரே.
5.
aliakbar | 5:22 முப இல் ஏப்ரல் 23, 2010
மிக்க நன்றி………aliakbar
6.
winmani | 5:23 முப இல் ஏப்ரல் 23, 2010
@ aliakbar
நன்றி
7.
♠புதுவை சிவா♠ | 8:25 முப இல் ஏப்ரல் 23, 2010
தகவலுக்கு மிகவும் நன்றி வின்மணி
8.
winmani | 3:24 பிப இல் ஏப்ரல் 23, 2010
@ புதுவை சிவா
நன்றி
9.
aruna | 1:55 பிப இல் ஏப்ரல் 23, 2010
Thats a great news!
10.
winmani | 3:25 பிப இல் ஏப்ரல் 23, 2010
@ aruna
நன்றி
11.
ஜெகதீஸ்வரன் | 2:44 முப இல் ஏப்ரல் 24, 2010
அருமை. மிகவும் பயணுள்ள தகவல்.
தொடரட்டும் தங்கள் பணி!
12.
winmani | 3:57 முப இல் ஏப்ரல் 24, 2010
@ ஜெகதீஸ்வரன் நன்றி
13.
mohan | 8:08 முப இல் ஏப்ரல் 26, 2010
என்னால் ரிசிச்ட்டர் பண்ணவே முடியவில்லை . என்ன குடுத்தாலும் கடவுச்சொல் அல்லது யுசர்நேமே தவறு என்கிறது. தயவு செய்து கெல்ப் பண்ணுங்க
14.
winmani | 6:51 பிப இல் ஏப்ரல் 26, 2010
@mohan நன்றி
15.
harivumani | 7:04 முப இல் ஏப்ரல் 28, 2010
http://www.savewebsites.com
என்னால் ரிசிச்ட்டர் பண்ணவே முடியவில்லை . என்ன குடுத்தாலும் கடவுச்சொல் அல்லது யுசர்நேமே தவறு என்கிறது. தயவு செய்து கெல்ப் பண்ணுங்க
16.
Mohan | 7:11 முப இல் மே 15, 2010
யாருமே பதில் தரமாடீங்கிறீங்க வருத்தமா இருக்கிறது விண்மணி அவர்களே.உங்கள் ஈமெயில் செல்லுங்க ஸ்க்ரீன் சாட் அனுப்புகிறேன்
இந்த வெப்சைட் ல savewebsites.com என்னால் ரிசிச்ட்டர் பண்ணவே முடியவில்லை . என்ன குடுத்தாலும் கடவுச்சொல் அல்லது யுசர்நேமே தவறு என்கிறது. தயவு செய்து கெல்ப் பண்ணுங்க
17.
winmani | 8:57 முப இல் மே 15, 2010
நண்பருக்கு இப்போது இந்த தளத்தில் தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக தவறு
வருகிறது. தற்போது சில மாதங்களாகவே இந்தப் பிரச்சினை நீடிக்கிறது.
நன்றி
18.
mohamed ali | 1:55 பிப இல் ஓகஸ்ட் 22, 2011
இந்த வெப் தளம் பதிவுக்கு திறக்க மறுக்கின்றது. அவர்கள் கொடுத்துள்ள அனைத்து தலைப்புகளிலும் சென்று முயற்சி செய்தேன். இயலவில்லை நண்பரே, நன்றி வணக்கம். முஹம்மது அலி
19.
winmani | 5:02 பிப இல் ஓகஸ்ட் 22, 2011
@ mohamed ali
இப்போது முயற்சித்து பாருங்கள் , உங்கள் பதிலையும் மறக்காமல் தெரியப்படுத்துங்க்கள்.
மிக்க நன்றி