ஆன்லைன் மூலம் எல்லா வகையான வீடியோ கோப்புகளையும் ஆடியோவாக மாற்றலாம்.
ஜூன் 6, 2011 at 11:39 பிப பின்னூட்டமொன்றை இடுக
வீடியோ கோப்பில் இருக்கும் ஆடியோ மட்டுமே சில நேரங்களில் நமக்குத் தேவைப்படும் அப்படி நமக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதாக எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் பல வகையான வீடியோகோப்புகளையும் ஆன்லைன் மூலம் ஆடியோ கோப்புகளாக மாற்றலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆன்லைன் மூலம் எளிதாக எந்த மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் வீடியோ கோப்பில் இருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்து கொடுப்பதற்கு நமக்கு உதவுதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://www.convertaudioonline.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Browse என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் வீடியோ கோப்பை தேர்ந்தெடுத்து Start Upload என்பதை சொடுக்கி நம் கோப்பை தறவேற்றவும் அடுத்து வரும் திரையில் Option என்ற திரையில் Zip கோப்பாக சேமிக்க வேண்டிய பெயர் மற்றும் எந்த ஆடியோ ஃபார்மட் -ல் நமக்கு வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும். எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்ததும் Convert Genius என்பதை சொடுக்கி அடுத்து வரும் Start Conversion என்பதை சொடுக்கி நம் கணினியில் ஆடியோ கோப்பாக சேமிக்கலாம். நாம் தேர்ந்தெடுக்கும் கோப்பு 3gp,3g2,ac3,avi,flac,avi,flv,h264,m4v,mp3, swf,ogg,mp4,wav போன்ற வகையான Format க்கு துணைபுரிகிறது. மாற்ற விரும்பும் ஆடியோ கோப்புகள் mp3,ogg,wav,wma போன்ற Format க்கும் துணைபுரிகிறது. இனி நமக்கு பிடித்த வீடியோ கோப்பின் ஆடியோவை ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையும் இன்றி பிரிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற
யூடியுப் வீடியோ வேகத்தை அதிகப்படுத்த புதிய முறை
வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி
டிவிட்டரில் உங்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இலவசமாக பகிர்ந்துகொள்ள.
வின்மணி சிந்தனை கடின உழைப்பு, விடா முயற்சி இரண்டும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இருக்க வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.சிறுபஞ்சமூலம் என்ற நூலை எழுதியவர் யார் ? 2.முல்லைப்பாட்டு என்ற நூலை எழுதியவர் யார் ? 3.மூதுரை என்ற நூலை எழுதியவர் யார் ? 4.ஐந்தினை ஐம்பது என்ற நூலை எழுதியவர் யார் ? 5.குறிஞ்சிப்பாட்டு என்ற நூலை எழுதியவர் யார் ? 6.கார்நாற்பது என்ற நூலை எழுதியவர் யார் ? 7.களவழி நாற்பது என்ற நூலை எழுதியவர் யார் ? 8. மதுரைக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் யார் ? 9.திரிகடுகம் என்ற நூலை எழுதியவர் யார் ? 10.ஆசாரக்கோவை என்ற நூலை எழுதியவர் யார் ? பதில்கள்: 1.காரியாசன்,2.நப்பூதனார்,3.ஒளவையார்,4.பொறையனார், 5.கபிலர், 6.கண்ணன் கூத்தனார்,7.பொய்கையார், 8.மாங்குடி மருதனார்,9.நல்லாதனார்,10.பெருவாயின் முள்ளியார்.
இன்று ஜூன் 6
பெயர் : அலெக்சாண்டர் புஷ்கின் , பிறந்த தேதி : ஜூன் 6, 1799 ரஷ்ய மொழியில் காதல் காவியங்கள் படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும் கருதப்படுகிறார்.புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் -மூலம் எல்லா வகையான பார்கோடும் படிக்கலாம்.
Subscribe to the comments via RSS Feed