பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்பு தேடல் உதவி.
ஜூன் 8, 2011 at 4:20 முப 2 பின்னூட்டங்கள்
இணையத்தேடல் தளமாக அனைவராலும் அறியப்பட்ட யாகூ இணையதளம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இணையதளம் தேடுவதில் ஏற்படும் சிக்கல்கள் முதல் அதில் தவறுகள் நேராதாவாறு எப்படி தேடுவது என்பதைப்பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பாதுகாப்பு தேடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பக்கத்தை உருவாக்கி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
தேடுவதில் குப்பைகளையும் ஆபாச தளங்களையும் காட்டாமல் முடிந்த வரை பலர் பேர் செல்லும் தளங்களைக்காட்டும் தளமாக அனைவராலும் அறியப்பட்ட நம் யாகூ தளம் முதன் முறையாக கணினியில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எப்படித்தேட வேண்டும் என்று விளக்குவதற்காக சிறப்புப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.
இணையதள முகவரி : http://safely.yahoo.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Expert Advice , Parents , Teens, Safety Tips போன்ற தலைப்புகளில் ஒவ்வொருவரும் எப்படி தேடல் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி வலைப்பூ மூலம் எப்படி எல்லாம் குற்றம் நடக்கிறது இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது வரை அனைத்தையும் விபரமாக தெரிவித்துள்ளனர். யாகூ Safety என்ற இத்தளத்தில் நாம் தேடுவதன் மூலம் பெரும்பாலும் நம் கணினிக்கு பாதுகாப்பில்லாத இணையதளங்கள் மற்றும் ஆபாச தளங்கள் நீக்கப்பட்டே தேடல் முடிவுகள் நமக்கு காட்டப்படுகிறது. இத்துடன் சில சமயங்களில் மொபைலில் சில தளங்களுக்கு செல்லும் போது நம் மொபைல் போன் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது ஆனால் யாகூவில் நாம் தேடி செல்லும் பக்கம் இந்தச்சோதனையையும் செய்து எந்தப்பிழையும் ஏற்படுத்தாமல் இருந்தால் நம் மொபைலில் காட்டுகிறது. யாகூ போன்ற தளங்களையும் பயன்படுத்திபார்த்தால் அதில் இருக்கும் சிறப்பசம் நமக்கு புரியும். குழந்தைகள் முதல் பெற்றோர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஒபாமா அறிவித்த சலுகையால் இந்தியாவின் ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா
உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்
உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை
வின்மணி சிந்தனை சிறப்பான மனிதர்கள் ஒருபோதும் அடுத்தவரை குறை கூறுவது இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.எந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றவது ? 2.கதிர் வீச்சின் அலகு என்ன ? 3.இதயம் செயல்படும் திறனை கண்டறிய உதவுவது ? 4.கொதிநீர் அணு ஆற்றல் உலை காணப்படும் இடம் ? 5.மின்பகுளிகள் பொதுவாக இருக்கும் நிலை என்ன ? 6.அணுக்கரு உலையின் தணிப்பானாகப் பயன்படுவது எது ? 7.செறிவூட்டப்பட்ட யூரேனியம் என்பது ? 8.மின்னிழை விளக்குகளில் ஓளியாக மாற்றப்படும் மின்னாற்றலின் அளவு என்ன ? 9.ஜூல் வெப்ப விளைவு விதி என்ன ? 10.மின்திறனின் அலகு ? பதில்கள்: 1.மின்னியற்றி,2.ராண்ட்ஜன்,3. ரேடியோ சோடியம், 4.தாராப்பூர்,5.திரவங்கள், 6.பெரிலியம்,7.U^235, 8. 5%, 9.H = I^2 Rt, 10.வாட்.
இன்று ஜுன் 8
பெயர் : பிராங்க் லாய்டு ரைட் , பிறந்த தேதி : ஜூன் 8 , 1867 இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக் கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் இவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம். இன்றும் பொதுமக்களால் மிக நன்றாக அறியப்படுபவரும் இவரே.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் யாகூவின் பயனுள்ள பாதுகாப்.
1.
Rajasurian | 9:27 முப இல் ஜூன் 9, 2011
thanks for sharing this info
2.
winmani | 10:46 பிப இல் ஜூன் 9, 2011
@ Rajasurian
மிக்க நன்றி