ஆன்லைன் மூலம் PDF கோப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக (JPG ) மாற்றி சேமிக்கலாம்.
ஜூன் 18, 2011 at 9:07 முப பின்னூட்டமொன்றை இடுக
ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் பிடிஎப் கோப்புகளை தனித்தனி படமாக சேமிக்கலாம் நமக்கு உதவுதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பிடிஎப் கோப்புகளில் முக்கியமானதாக இருக்கும் பக்கங்களை படமாக சேமிப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்,ஒரே நேரத்தில் நம்மிடம் இருக்கும் பிடிஎப் கோப்பை முழுமையாகவும் ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனி பக்கமாகவும் மாற்றிக்கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://pdf2jpg.net
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Choose File என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் PDF கோப்பை தேர்வு செய்ய வேண்டும் அடுத்து Convert pdf to JPG என்பதை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் எந்தப்பக்கம் நமக்கு PDF கோப்பாக வேண்டுமோ அந்த பக்கத்தின் அருகில் இருக்கும் Download என்பதை சொடுக்கி எளிதாக நம் கணினியில் தறவிரக்கலாம் அல்லது மொத்தமாக நாம் தேர்ந்தெடுத்த PDF கோப்பில் உள்ள அத்தனை பக்கங்களையும் Zip archive ( படங்கள் சுருக்கப்பட்டதாகவும்) சேமிக்கலாம். எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை, ஆன்லைன் மூலம் சில நிமிடங்களின் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் சில நிமிடங்களிலே நாம் PDF கோப்புகளை JPG படங்களாக மாற்றி சேமிக்கலாம். பிடிஎப் கோப்புகளை படங்களாக சேமிக்க விரும்பும் அலுவல நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்
ஒரே நிமிடத்தில் பிடிஎப் புத்தங்களை கூகுள் மற்றும் பிங்-ல் நேரடியாக தேடலாம்
ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்.
ஆன்லைன் மூலம் பிடிஎப் கோப்புகளை எக்சல் கோப்புகளாக மாற்றலாம்.
வின்மணி சிந்தனை வியாபாரி மக்களிடம் அன்பாக பேசும் குணமும் முகமலர்ச்சியும், உண்மையும் இருந்தால் அதிக வாடிக்கையாளரை பெறலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.கோடிக்கரை சரணாலயம் உள்ள மாவட்டம் எது ? 2.எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது ? 3.மருத நிலத்தின் மக்கள் யார் ? 4.மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எது ? 5.சாத்தனுர் அணை உள்ள இடம் எது ? 6.இந்திய அளவில் தமிழகத்தின் பரப்பு ? 7.தமிழகத்தின் டெட்ராயிட் எது ? 8.உப்பு சத்தியாகிரகத்தை தமிழ்கத்தில் நடத்தியவர் யார் ? 9.அகஸ்தியர் நீர்விழ்ச்சி உள்ள இடம் எது ? 10.தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி ( சதுர கி.மீ ) எவ்வளவு ? பதில்கள்: 1.நாகப்பட்டிணம், 2.தஞ்சாவூர், 3.உழவன் , உழத்தி, 4.NH.4 , 5.திருவண்ணாமலை,6.3.95 %,7.சென்னை, 8.இராஜாஜி, 9.பாபநாசம்,10.478.
இன்று ஜூன் 18
பெயர் : தாபோ உம்பெக்கி , பிறந்த தேதி : ஜூன் 18, 1942 தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர். 14 வயதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் படித்துள்ளார். 1994இல் தென்னாப்பிரிக்காவில் அபார்ட்டைட் முடிந்து நெல்சன் மண்டேலா குடியரசுத் தலைவர் பதவியில் ஏறும்பொழுது உம்பெக்கி துணைத் தலைவராக பதவியில் ஏறினார்.1999-இல் உம்பெக்கி குடியரசுத் தலைவராக ஆனார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆன்லைன் மூலம் PDF கோப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக (JPG ) மாற்றி சேமிக்க.
Subscribe to the comments via RSS Feed