தொலைக்காட்சியில் இருந்து வீடியோ (8 – வது சேனல்) பயனுள்ள தளம்.
ஜூன் 17, 2011 at 5:43 முப 2 பின்னூட்டங்கள்
வீடியோக்களை ஒவ்வொரு இணையதளமாக சென்று தேடிப்பார்பதற்கும் அதே சமயம் தொலைக்காட்சியில் சென்று வீடியோ பார்பதற்கும் வித்தியாசம் இருக்கும் ஆம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து வகையான நிகழ்சிகளின் வீடியோவையும் நேரடியாக பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
உலக அளவில் பிரசிபெற்ற வீடியோக்களை தினமும் நாம் சென்று பார்ப்பதை விட அதற்கு இணையான வார்த்தையை கொடுத்து தொலைக்காட்சியில் தேடுவதைப் போலவும் அதிக அளவில் பிரபலமான வீடியோக்களை வரிசைப்படி நமக்கு காட்டவும் ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.8on.tv
இத்தளத்திற்கு சென்று நாம் தேட விரும்பும் வீடியோக்களின் பெயரை படம் 1- ல் காட்டியபடி கொடுத்து எந்த வீடியோ தளத்தில் தேட விரும்புகிறோம் என்பதையும் கொடுத்தால் போதும், உடனடியாக பிரபலமான வீடியோக்களை நமக்கு டிவி சேனலில் பார்ப்பது போல் காட்டுகிறது. வலது பக்க அம்புக்குறி பொத்தானை சொடுக்கி அடுத்த வீடியோவை பார்க்கலாம், ஒவ்வொரு வீடியோவிற்கும் அந்த வீடியோ தொடர்பான சிறு செய்தியும் நமக்குக் காட்டப்படும்.Youtube, Facebook, Google,CNN , ESPN போன்ற வீடியோ தளங்களில் இருந்து நமக்கு வீடியோவை எடுத்துக் காட்டுகிறது இந்தத்தளம், டிவியில் பார்ப்பதை போல நமக்கு துல்லியமாகவும் Quality ஆகவும் காட்டுகிறது, டிவி ரசிகர்கள் இணையத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது போல் பார்க்கலாம்.
டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.
1860 -ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.
அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.
வின்மணி சிந்தனை தன் மதிப்பையும் அன்பையும் தேவையான இடத்தில் காட்டினால் நம் வாழ்க்க்கை சிறப்பாக இருக்கும்
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மேட்டூர் அணை உள்ள மாவட்டம் எது ? 2.முதல் தமிழ்ச்சங்கம் நடந்த இடம் எது ? 3.பெண்கள் அதிகம் உள்ள மாவட்டம் எது ? 4.மெட்ராஸ் நகரம் சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு ? 5.தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படுவது ? 6.மேட்டூர் அணையின் மற்றொரு பெயர் என்ன ? 7.மூன்று கடல்களும் சங்கமம் ஆகும் ஒரே இடம் எது ? 8.பல்லவ மன்னர்களின் தலைநகரம் எது ? 9.காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது ? 10.தமிழ்நாட்டில் காடுகளின் மொத்தப்பரப்பு என்ன ? பதில்கள்: 1.சேலம், 2.தென்மதுரை, 3.தூத்துக்குடி, 4.1969 , 5.பாளையங்கோட்டை,6.ஸ்டேன்லி நீர்த்தேக்கம்,7.கன்னியாகுமரி, 8.காஞ்சிபுரம், 9.மதுரை,10.17.58 %.
இன்று ஜூன் 17
பெயர் : ஜான்சி ராணி லட்சுமிபாய் , மறைந்த தேதி : ஜூன் 17, 1858 வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: தொலைக்காட்சியில் இருந்து வீடியோ (8 - வது சேனல்) பயனுள்ள தளம்..
1.
Life Direction Network | 8:26 முப இல் ஜூன் 17, 2011
நண்பரே, நாமும் இதுபோல ஒரு தளத்தை உருவாக்க முடியுமா? இது போன்ற தளத்தை உருவாக்குவது சற்று எளிமையானது போலதான் தோன்றுகிறது, நம் சாதாரண பொருளாதாரத்திற்கு இதுபோன்ற தளம் அமைப்பது சாத்தியம் தானா?
2.
winmani | 9:22 முப இல் ஜூன் 18, 2011
@ Life Direction Network
கண்டிப்பாக பொருந்தும் , யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
நன்றி