நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

ஜூன் 14, 2011 at 10:28 முப 1 மறுமொழி

ஆன்லைன் மூலம் ஒரே நிமிடத்தில் நம் புகைப்படங்களுக்கு அழகான பல வகையான  இமெஜ் எபெக்ட்ஸ் கொடுக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புகைப்படங்களுக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் செய்ய வேண்டும் என்றால் போட்டோஷாப் போன்ற மென்பொருள்கள் தெரிந்து  வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாம் ஆன்லைன் -ல் இருந்தபடியே நம் புகைப்படங்களுக்கு எபெக்ட்ஸ் கொடுக்கலாம் நமக்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது.

படம் 2

இணையதள முகவரி : http://imageoid.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Browse என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் இருக்கும் நாம் மாற்ற  விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload  என்ற பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் நமக்கு பலவிதமான  எபெக்ட்ஸ் கொடுக்கப்பட்ட மாதிரி புகைப்படம் கிடைக்கும் இதில் நமக்கு எந்த மாதிரி எபெக்ட்ஸ்  வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் போதும். உடனடியாக நம் புகைப்படம் நாம் தேர்ந்தெடுத்த எபெக்ட்-ற்கு தகுந்தாற்போல் மாற்றப்பட்டுவிடும்,Right Click  செய்து  Save Image என்பதை சொடுக்கி படத்தை நம் கணினியில் சேமிக்கலாம். படத்தை மேன்மேலும் அழகுப்படுத்த விரும்பும்  அனைத்து புதுமை விரும்பிகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உலகநாடுகளின் பணத்தில் உங்கள் புகைப்படம் இருக்க

பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்.

ஆன்லைன் மூலம் இலவசமாக புகைப்படங்களை கார்ட்டூன் படங்களாக நொடியில் மாற்றலாம்.

 
வின்மணி சிந்தனை
பிறக்கும் போது நல்லவர்களாக இருப்பவர்கள் கூட தீயவர்கள்
சேர்க்கையினால் கெட்டவர்களாகப் போவது உண்டு.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தமிழக அரசின் அரசு விலங்கு எது ?
2.பாரதரத்னா விருது பெற்ற தமிழக முதலமைச்சர்கள் 
 எத்தனை பேர் ?
3.கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
4.தமிழக அரசின் அரசு மரம் எது ?
5.தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படும் மண் எது ?
6.ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ள இடம் எது ?
7.தமிழகத்தின் மொத்த மாவட்டங்கள் எத்தனை ?
8.தெற்கு இரயில்வேயில் உள்ள கோட்டங்களின் எண்ணிக்கை ?
9.தர்மபுரி மாவட்டம் எதற்கு பெயர் பெற்றது ?
10.ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார் ?
பதில்கள்:
1.வரையாடு,2.2, 3.சென்னை, 4.பனைமரம்,5.செம்மண், 
6.தூத்துக்குடி,7.32, 8.6,9.கிரானைட்,10.அகிலன்.
 
இன்று ஜூன் 14 

பெயர் : ஸ்டெபி கிராப் , பிறந்த தேதி : ஜூன் 14, 1969
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை.ஜெர்மனியைச்
சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக்
குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர்
கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.
1988 இல்எல்லா(நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும்
வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர்.
டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது
சாதனை படைத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன். ஆன்லைன் மூலம் இன்வாய்ஸ் ( Invoice ) பற்றுச்சீட்டு எந்த நாட்டுக்கும் எளிதாக அனுப்பலாம்.

1 பின்னூட்டம் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...